MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.76,000-க்கு 71 கிமீ மைலேஜ் ஸ்கூட்டர்.. யமஹா ஸ்கூட்டரை போட்டிபோட்டு வாங்கும் மக்கள்

ரூ.76,000-க்கு 71 கிமீ மைலேஜ் ஸ்கூட்டர்.. யமஹா ஸ்கூட்டரை போட்டிபோட்டு வாங்கும் மக்கள்

யமஹா ரேஇசட் ஆர் ஸ்கூட்டர், அதன் ஸ்போர்ட்டி லுக் மற்றும் சிறந்த செயல்திறனால் இளைஞர்களை கவர்ந்து, விற்பனையில் 61% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த 125cc ஸ்கூட்டர், சிறந்த மைலேஜ் மற்றும் ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம் போன்ற நவீன அம்சங்களுடன் வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 04 2026, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நல்ல மைலேஜ் கொடுக்கும் யமஹா ஸ்கூட்டர்
Image Credit : Google

நல்ல மைலேஜ் கொடுக்கும் யமஹா ஸ்கூட்டர்

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனித்துவமான ஸ்டைலும் சிறந்த செயல்திறனும் பிரபலமான யமஹா ரேஇசட் ஆர் (Yamaha RayZR), மீண்டும் அதிக கவனம் பெறுகிறது. நகர போக்குவரத்திற்கு ஏற்ற லைட்டான ரைடிங் அனுபவமும், இளைஞர்களை கவரும் ஸ்போர்ட்டி லுக்-மும் இந்த ஸ்கூட்டரை வேறுபடுத்துகிறது. இதனால், இது ஒரு சாதாரண வாகனம் மட்டுமல்ல, ஒரு ஸ்டைல் ​​ஸ்டேட்மெண்டாகவும் மாறியுள்ளது.

25
யமஹா ரேஇசட் ஆர்
Image Credit : Asianet News

யமஹா ரேஇசட் ஆர்

பிப்ரவரி 2026 விற்பனை கணக்குகள் இந்த ஸ்கூட்டரின் பிரபலத்தைக் காட்டுகின்றன. அந்த மாதத்தில் மட்டும் 22,593 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 14,010 யூனிட்கள் மட்டுமே விற்ற நிலையில், இந்த ஆண்டு 61% அதிகமான வளர்ச்சி பதிவாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதற்கு, இந்த மாடல் மார்க்கெட்டில் வலுவாக நிலைநிறுத்தியிருப்பதற்கு சான்றாகும்.

Related Articles

Related image1
இந்தியாவில் அதிகம் பேர் வாங்கிய ஸ்கூட்டர்.. கெத்து காட்டிய டிவிஎஸ்.. எந்த மாடல்?
Related image2
பைக் இருந்தா போதும்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! ஸ்மார்ட்டா வருமானம் ஈட்ட இவ்ளோ வழிகள் இருக்கா?
35
அதிகரிக்கும் விற்பனை
Image Credit : Asianet News

அதிகரிக்கும் விற்பனை

ஜனவரி 2026-இல் 19,815 யூனிட்கள் விற்பனையான நிலையில், பிப்ரவரியில் மேலும் 14% உயர்வு. இது ஒருமுறை மட்டுமே அதிகமான தேவை இல்லை, மாதந்தோறும் தொடர்ந்து வளர்ந்து வரும் டிமாண்ட் என்பதைக் காட்டுகிறது. சமீபத்திய அப்டேட்டுகளுடன் புதிய கலர்கள் மற்றும் கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டதால், ஸ்கூட்டர் இன்று அனைவர்க்கும் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.

45
அட்டகாசமான வசதிகள்
Image Credit : Google

அட்டகாசமான வசதிகள்

இந்த ஸ்கூட்டரின் வெற்றிக்கு அந்த டிசைன் மட்டும் காரணமல்ல. 125cc ஏயர்-கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்ஷன் என்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 8.2 PS பவர் மற்றும் 10.3 Nm டார்க் வழங்குகிறது. நகர போக்குவரத்தில் எளிதாக இயக்கக்கூடிய இந்த எஞ்சின், டிராஃபிக்கில் ஸ்மூத் அனுபவத்தை தருகிறது. மேலும், SMG (Smart Motor Generator) தொழில்நுட்பம் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

55
ஸ்கூட்டர் விலை
Image Credit : Google

ஸ்கூட்டர் விலை

இதில் உள்ள ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம், சிக்னலில் நிற்கும் போது எஞ்சினை தானாக ஆஃப் செய்து, மீண்டும் வேகப்படுத்தும் போது ஆன் ஆகும். இதனால் எரிபொருள் சேமிப்பு. மைலேஜ் விஷயத்தில், இந்த ஸ்கூட்டர் ARAI மதிப்பீட்டில் 71 kmpl வரை தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நடைமுறையில் 55-65 kmpl கிடைக்கும். ரூ.76,400 முதல் தொடங்கும் விலையில், இது இளைஞர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யமஹா
உருளி வண்டிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top Range Electric Scooters: பட்ஜெட் விலையில் பக்கா பீச்சர்ஸ்! VinFast மின்சார ஸ்கூட்டர்கள்
Recommended image2
ரூ.5.65 மட்டுமே.. குறைந்த விலையில் 7 சீட்டர் கார்.. மக்கள் போட்டிபோட்டு வாங்குறாங்க
Recommended image3
வண்டியை நிப்பாட்டி வைக்காதீங்க.. டேங்க்ல தண்ணி தான் மிஞ்சும்..! E20 பெட்ரோல்: லாபமா? நஷ்டமா?
Related Stories
Recommended image1
இந்தியாவில் அதிகம் பேர் வாங்கிய ஸ்கூட்டர்.. கெத்து காட்டிய டிவிஎஸ்.. எந்த மாடல்?
Recommended image2
பைக் இருந்தா போதும்.! மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! ஸ்மார்ட்டா வருமானம் ஈட்ட இவ்ளோ வழிகள் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved