Bentley Bentayga: கார் பிரியர்களின் மனதைக் கவரும் பென்ட்லீ பென்டைகா
பென்ட்லீ நிறுவனம் தனது புதிய சொகுசு காரான பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) SUV-ஐ இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த பென்ட்லீ நிறுவனத்தின் பென்ட்லீ பென்டைகா ஈ.டபிள்யூ.பி. (Bentley Bentayga EWB luxury SUV) கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்பின் சக்கரங்களுக்கு இடையில் அதிக இடைவெளியுடன் நீளமான காராக உருவாக்கப்பட்டுள்ளது. நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.6 கோடி
இந்த சொகுசு காரின் வீல் பேஸ் 3,175 மி.மீ. நீளம் கொண்டது. இது வழக்கத்தைவிட 180 மி.மீ அதிகம். இதனால் வழக்கமான மாடல்களைவிட நீளமாக இருக்கும் இந்தக் காரின் நீளம் 5,322 மி.மீ. இந்தக் காரில் இருக்கைகள் 40 டிகிரி வரை சாயக்கூடிய சாய்மான இருக்கைகளை உடையது.
இந்த காருக்குள் தட்பவெப்பத்தைக் கணிக்கும் பிரத்யேகமான அமைப்பு உள்ளது. இது காரில் பயணிப்பவர்களின் உடல் வெப்பநிலை மற்றும் சூழலில் உள்ள வெப்பநிலை இரண்டையும் கணித்து அதற்கேற்ப காற்றோட்டத்தை சீரமைக்கும் திறன் கொண்டது.
இந்தக் காரின் முன்புறம் உள்ள குரோம் க்ரில் வழக்கமான பென்ட்லீ கார்களில் உள்ளதைப் போல பெரிதாக உள்ளது. வட்டவடிவத்தில் ஹெட் லைட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. டெயில் லைட்டுகள் ஓவல் வடிவத்தில் உள்ளன. 22 இன்ச் அலாய் வீல்ஸ் இருக்கின்றன.
பென்ட்லீ பென்டைகா சொகுசு காரில் 4 லிட்டர் இரட்டை டர்போ சார்ஜ் எஞ்சின்கள் உள்ளன. இந்தக் காரை 4.6 விநாடியில் 100 கி.மீ. வேகத்தில் இயக்கலாம் இந்த எஸ்.யூ.வி. காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 290 கி.மீ.