- Home
- Auto
- EV Record: புதிய சாதனை.. ஒரே நாளில் 13,000 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு! திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன?
EV Record: புதிய சாதனை.. ஒரே நாளில் 13,000 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு! திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன?
பெங்களூருவில் ஒரே நாளில் 13,000 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. மக்கள் திடீரென EV பக்கம் திரும்பியது ஏன்? இதன் பின்னணி என்ன?

13000 எலக்ட்ரிக் வாகனப் பதிவு
நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் , ஒரே நாளில் 13,000 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மக்கள் திடீரென எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
11 ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு
மார்ச் 31 அன்று, பெங்களூருவில் உள்ள 11 வெவ்வேறு RTO அலுவலகங்களில் இந்த 13,000 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள். குறைந்த விலை கார்கள் மற்றும் பிற எலக்ட்ரிக் வாகனங்க்களும் இதில் அடங்கும்.
கடந்த ஆண்டை விட 400 சதவீதம் அதிகம்
பெங்களூருவில் தினசரி EV பதிவு எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது. 2026-ல், பெங்களூருவில் ஒரு நாளைக்கு சராசரியாக 267 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 400 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரிக்க காரணம் என்ன?
ஏப்ரல் 1 முதல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது. இதனால், பழைய வரி விதிகளின் கீழ் வாகனத்தை வாங்கிப் பயனடைய, மக்கள் மார்ச் 31 அன்று போட்டா போட்டிக்கொண்டு வாகனங்களைப் பதிவு செய்தனர்.
போர் நெருக்கடி
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கிறது. இதனால், குறைந்த பராமரிப்புச் செலவு கொண்ட எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் பொதுமக்களின் கவனம் திரும்பியுள்ளது.
50,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு
கர்நாடகாவில் EV பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை, மாநிலத்தில் 54,379 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மூன்று மாதங்களில் 35,000 எலக்ட்ரிக் வாகனங்கள் தான் பதிவாகியிருந்தன.

