பஜாஜ் நிறுவனத்தின் பம்பர் ஆஃபர்.. ரூ.40,000 தள்ளுபடி..டோமினார் பைக்கில் சிறப்பு அம்சங்கள்!
கடந்த ஆண்டு செப்டம்பரில் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி மாற்றங்களால், 350சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை விற்கும் நிறுவனங்களுக்கு சில சவால்கள் உருவாகியுள்ளன. இதை சமாளிக்க பஜாஜ் ஒரு புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி விதிகள் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், 350CC-க்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை விற்கும் பிராண்டுகளுக்கு, குறிப்பாக பஜாஜ் போன்ற நிறுவனங்களுக்கு, புதிய சவால் உருவாகியுள்ளது.
இப்போது, பஜாஜ் நிறுவனம் டோமினார் பைக்குக்கும் இதே யுக்தியைப் பயன்படுத்துகிறது. டோமினார் 350 மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. ஜிஎஸ்டி வரிச் சலுகைக்காக, 373சிசி இன்ஜினுக்குப் பதிலாக 350சிசி இன்ஜினைப் பொருத்தியுள்ளது. இந்த பைக் டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளதாகவும், இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பஜாஜ் டோமினார் 350 பைக்கின் விலையை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், முந்தைய 400சிசி மாடலை விட சுமார் ரூ.40,000 குறைவாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பைக்கின் விலை சுமார் ரூ.40,000 குறைக்கப்படும். இது 39 பிஎஸ் பவரையும், 33.5 என்எம் டார்க்கையும் உருவாக்கும். இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

