- Home
- Auto
- கியாவின் EV9 முதல் டொயோட்டா & மாருதியின் புது EV வரை.. 2023ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5 மின்சார கார்கள்
கியாவின் EV9 முதல் டொயோட்டா & மாருதியின் புது EV வரை.. 2023ல் எதிர்பார்க்கப்படும் டாப் 5 மின்சார கார்கள்
2023 ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள 5 மின்சார கார்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை கிரேட்டர் நொய்டா பகுதியில் வரும் 11ம் தேதி தொடங்கி, 18ம் தேதி வரையில் பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போ 2023வில் பல்வேறு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நீங்கள் ஒரு கார் வாங்க நினைத்திருந்தால், இந்த டாப் 5 கார்களை பற்றி தெரிந்து கொண்டு பிறகு வாங்குங்கள்.
பஞ்ச் மின்சார கார் (Punch EV)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியின் முழு மின்சார காரை வெளியிட உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உற்பத்தி ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க..Auto Expo 2023 : கியா முதல் டாடா மோட்டார்ஸ் வரை.. ஆட்டோ எக்ஸ்போவில் கலக்கும் முன்னணி நிறுவனங்கள்!!
பிஒய்டி (BYD)
பிஒய்டி என்றும், பில்ட் யுவர் ட்ரீம்ஸ் என்ற சீன எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்பு அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாகும். Born Electric மாடல் 4800mm நீளம், 1875mm அகலம் மற்றும் 1460mm உயரம் மற்றும் 2875mm வீல்பேஸ் கொண்டது. இது டெஸ்லா மாடல் 3 ஐ விட 106 மிமீ நீளம், 58 மிமீ குறுகலானது மற்றும் 17 மிமீ உயரம் கொண்டது. இதனுடன் சேர்த்து, செடானின் வீல்பேஸ் டெஸ்லாவின் 2,875 மிமீ வீல்பேஸை விட 45 மிமீ நீளமானது ஆகும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5)
ஹூண்டாய் ஐயோனிக் 5 விலை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட போவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து,ஐயோனிக் 6 (Ioniq 6) எலக்ட்ரிக் செடானைக் காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது e-GMP ஸ்கேட்போர்டு கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு ஆகும்.
இதையும் படிங்க..Auto Expo 2023: அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா ?
கியா EV9 (Kia EV9)
2023 ஆட்டோ எக்ஸ்போவில் EV9 எஸ்யூவி அறிமுகமாகும் என்பதை கொரிய வாகன நிறுவனமான கியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் எலக்ட்ரிக் கார் வரம்பில் உள்ள பிராண்டின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும். புதிய EV9 கான்செப்ட் 4,929 மிமீ நீளம், 2,055 மிமீ அகலம் மற்றும் 1,790 மிமீ உயரம் மற்றும் 3,099 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. இது ரேஞ்ச் ரோவரை விட சற்று சிறியதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மாருதி சுசுகி YY8 (Maruti Suzuki YY8)
மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைந்து புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய சந்தைக்கு உருவாக்கி வருகின்றது. இந்த காருக்கு YY8 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மின்சார எஸ்யூவியின் தயாரிப்பு பதிப்பு ஜனவரி - பிப்ரவரி 2025 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த EV SUVயை சுசுகி இணைந்து உருவாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், டொயோட்டா, மற்றும் சுசுகியின் குஜராத் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!