MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Electric Scooter: 7 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 18 மாதங்களில் விற்று தீர்ந்துபோச்சு.. எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

Electric Scooter: 7 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 18 மாதங்களில் விற்று தீர்ந்துபோச்சு.. எந்த ஸ்கூட்டர் தெரியுமா?

Electric Scooter: கடந்த 18 மாதங்களில் மட்டும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சாதனையின் பின்னால் எந்த மாடல் முக்கிய பங்கு வகித்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 28 2026, 10:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Image Credit : our own

அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஏதர் எனர்ஜி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நிறுவனம் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து, இந்தியாவில் இந்த சாதனையை எட்டிய நான்காவது இவி இருசக்கர வாகன நிறுவனமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சி தொழில்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விற்பனை நிலவரம்
Image Credit : Ather Energy

விற்பனை நிலவரம்

வாகன விற்பனை தரவுகளின்படி, ஜூன் 25, 2026 வரை ஏதர் எனர்ஜி-யின் மொத்த சில்லறை விற்பனை 7,04,447 யூனிட்டுகளை எட்டியுள்ளது. 2018-ல் விற்பனையை தொடங்கிய நிறுவனம், ஆரம்ப ஆண்டுகளில் மெதுவாக வளர்ந்தாலும், கடந்த 18 மாதங்களில் அபார முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 3.78 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

35
ஏதர் ரிஸ்டா ஸ்கூட்டர்
Image Credit : Google

ஏதர் ரிஸ்டா ஸ்கூட்டர்

இந்த அதிவேக வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஏதர் ரிஸ்டா குடும்ப பயன்பாட்டு ஸ்கூட்டர் பார்க்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 54 சதவீத பங்களிப்பை இந்த மாடல் வழங்கியுள்ளது. அதேபோல் 450S, 450X மற்றும் 450 Apex மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, நிறுவனத்தின் சந்தைப் பங்கை உயர்த்த உதவியுள்ளன.

45
அதிகபட்ச மாதாந்திர விற்பனை
Image Credit : our own

அதிகபட்ச மாதாந்திர விற்பனை

2026-ம் ஆண்டிலும் ஏதர் தனது வளர்ச்சியை தொடர்கிறது. ஜனவரி முதல் ஜூன் 25 வரை மட்டும் 1,63,788 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மார்ச் 2026-ல் மட்டும் 36,362 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி, நிறுவன வரலாற்றில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாக பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் எட்டு முறை 20,000-க்கும் மேற்பட்ட மாதாந்திர விற்பனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

55
சாதனை படைத்த ஏதர் எனர்ஜி
Image Credit : our own

சாதனை படைத்த ஏதர் எனர்ஜி

ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய ஏதர் எனர்ஜி, இந்திய இவி சந்தையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. புதிய தயாரிப்புகள், விரிவடையும் டீலர் வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனம் மேலும் பல புதிய விற்பனை சாதனைகளை படைக்கும் வாய்ப்பு இருப்பதாக வாகனத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார ஸ்கூட்டர்
வாகனம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
லைட் வெயிட், 125சிசி இன்ஜின்: ரூ.90,000-க்குள் கிடைக்கும் 5 கெத்தான லோ-சீட் ஸ்கூட்டர்கள்!
Recommended image2
90's விண்டேஜ் தோற்றம், நவீன டெக்னாலஜி: ரூ.1.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 மாஸ் ரெட்ரோ பைக்குகள்!
Recommended image3
ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள்: சிட்டி டிரைவிங்கிற்கு எது பெஸ்ட்?
Related Stories
Recommended image1
Used Car: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செகண்ட் ஹேண்ட் கார் இதுதான்! ஏன் தெரியுமா?
Recommended image2
Hero Passion Plus: ஹீரோவின் மாஸ் என்ட்ரி! புதிய அம்சங்களுடன் 'பேஷன் பிளஸ் டிஸ்க்' பைக்.! விலை எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved