ரூ.6,000 EMI-யில் மாருதி ஆல்டோ K10 காரை வாங்கலாம்!
குறைந்த விலையில் கார் வாங்க விரும்புவோருக்கு மாருதி ஆல்டோ K10 சிறந்த தேர்வு. ரூ.4 லட்சத்தில் தொடங்கும் இந்த காரை மாதம் ரூ.6,000 EMI செலுத்தி சொந்தமாக்கலாம். 998 cc, 3-சிலிண்டர் K10C பெட்ரோல் எஞ்சின், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உள்ளது.

Alto K10 Monthly EMI Rs 6000
குறைந்த விலையில் கார் வாங்க விரும்புவோருக்கு மாருதி ஆல்டோ K10 சிறந்த தேர்வாகும். ரூ.4 லட்சத்தில் தொடங்கும் இந்த காரை மாதம் ரூ.6,000 EMI செலுத்தி சொந்தமாக்கலாம். இந்த காரில் 998 cc, 3-சிலிண்டர் K10C பெட்ரோல் எஞ்சின் உள்ளது.
மாருதி ஆல்டோ K10 கார்
இது 66 bhp @ 6,000 rpm திறன் கொண்டது. 89 Nm @ 3,500 rpm டார்க்கை உருவாக்குகிறது. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உள்ளது. பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ARAI மைலேஜ் 24.39 kmpl; CNG வேரியண்ட்டுக்கு 33.85 km/kg.
ஆல்டோ கே10 அம்சங்கள்
ஓட்டுநர் மற்றும் பயணிக்கு ஏர்பேக்குகள் உள்ளன. சில வேரியண்ட்களில் 6 ஏர்பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், 7 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே போன்ற வசதிகள் உள்ளன. அனைத்து வேரியண்ட்களிலும் பவர் ஸ்டீயரிங், ஏர் கண்டிஷனர் உள்ளன.
ஆல்டோ K10 விலை விவரங்கள்
இந்த கார் மெட்டாலிக் கிரானைட் கிரே, சிஸ்லிங் ரெட், பிரீமியம் எர்த் கோல்ட், பேர்ல் பிளைஸ் பிளாக், மெட்டாலிக் சில்கி சில்வர், சாலிட் வொயிட் நிறங்களில் கிடைக்கிறது. மாருதி ஆல்டோ K10 Std வேரியண்ட் ரூ.4 லட்சம், LXi ரூ.4.80 லட்சம், VXi ரூ.5.10 லட்சம், VXi (O) ரூ.5.50 லட்சம், VXi+ ரூ.5.80 லட்சம்.
ஆல்டோ K10 கார் இஎம்ஐ
இந்த காரை ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி சொந்தமாக்கலாம். மீதமுள்ள தொகைக்கு 9% வட்டியில் கடன் பெறலாம். ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்கும். 7 ஆண்டுகள் EMI தேர்வு செய்தால், மாதம் ரூ.6,553 செலுத்த வேண்டும். மாதம் ரூ.6,000 செலுத்தி உங்கள் கனவு காரை வாங்கலாம்.