- Home
- Astrology
- Zodiac Signs: உச்சகட்ட ராஜயோகம் பெறும் லக்னங்கள்.! இதுபோல் யோகம் இனிமேல் வராதாம்.! உங்கள் லக்னத்துக்கு எப்படி.?!
Zodiac Signs: உச்சகட்ட ராஜயோகம் பெறும் லக்னங்கள்.! இதுபோல் யோகம் இனிமேல் வராதாம்.! உங்கள் லக்னத்துக்கு எப்படி.?!
கஜகேசரி யோகம் என்பது குரு மற்றும் சந்திரனால் உருவாகும் ஒரு சக்திவாய்ந்த ஜோதிட அமைப்பாகும். இந்த யோகம் 12 லக்னங்களுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும், குறிப்பாக தீபாவளிக்குப் பிறகு சில லக்னங்களுக்கு அதிதீவிர யோக பலன்களை வழங்க உள்ளது.

தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்
மனித வாழ்க்கையில் சிலர் பிறந்த நாளிலிருந்தே அதிர்ஷ்டத்தின் ஆசீர்வாதத்துடன் வளர்கிறார்கள். ஆனால் சிலர் சாமானிய நிலைமையிலிருந்து திடீரென உயர்ந்து பெரியவராக மாறுகிறார்கள். இத்தகைய அதிசய உயர்விற்கு காரணம் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகங்களே! அவற்றில் முக்கியமானது கஜகேசரி யோகம் — செல்வம், புகழ், அறிவு, யஷஸ் ஆகிய அனைத்தையும் அருளக்கூடிய ஒரு மகா யோகம். இந்த நிலையில் தீபாவளிக்கு பிறகு வரும் வளர்பிறை திதியில் இருந்து சில லகனங்களுக்கு கஜகேசரி யோகம் அதி தீவிர யோக பலன்களை வாரிவழங்க போகிறது. தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம் அவர்களுக்கு கிடைக்க போகிறது.
கஜகேசரி யோகம் உருவாகும் நிலை
ஜோதிடத்தில் மிகச் சிறந்த யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கஜகேசரி யோகம். சந்திரனும் குருவும் சேர்ந்து அல்லது கேந்திர ஸ்தானங்களில் (1, 4, 7, 10) இருப்பது மூலம் இந்த யோகம் உருவாகிறது. இரண்டு கிரகங்களும் சுபபலன் தரும் கிரகங்களாக இருப்பதால், இவை இணையும் போது மனிதனுக்கு செல்வம், அறிவு, புகழ், உயர்ந்த பதவி, யஷஸ் ஆகிய அனைத்தையும் அருளும். ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் குரு இருந்தால் அல்லது இரண்டும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் கஜகேசரி யோகம் அமையும். பிரஹத் பாராசர ஹோர சாஸ்திரம் கூறுவதுபோல, குரு தனியாகவே 4, 7, 10-ஆம் இடங்களில் இருந்தாலும்கூட இந்த யோகம் பலன் தரும்.
கஜகேசரி யோகம் தரும் பலன்கள்
இந்த யோகம் உடையவர்கள் பிறவியிலேயே சுபசிந்தனை, புத்திசாலித்தனம், பக்தி, தர்க்கத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வம் தாமாக வந்து சேரும், சமூகத்தில் மதிப்பும் கீர்த்தியும் பெறுவார்கள். உயர்ந்த பதவிகள் இவர்களைத் தேடி வரும். இவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் அமைதியானதும், வளர்ச்சியுடன் கூடியதுமாக இருக்கும்.
லக்ன அடிப்படையில் கஜகேசரி யோகம் தரும் பலன்கள்
மேஷ லக்னம்
குரு–சந்திர யூதி 4-ஆம் வீட்டில் இருந்தால் சிறந்த யோகம். 2 அல்லது 5-ஆம் வீடுகளில் இருந்தாலும் செல்வமும் குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும்.
ரிஷப லக்னம்
சந்திரன் இங்கு உயர்ந்த நிலையில் இருப்பதால், மிகச் சிறப்பான கஜகேசரி யோகம் அமையும். திடீர் முன்னேற்றமும் ராஜயோக பலன்களும் கிடைக்கும்.
மிதுன லக்னம்
குரு தனுசு ராசியில் இருந்தால், மிகச் சிறந்த பலன். கேந்திராதிபதி தோஷம் நீங்கி, வேலை, கல்வி, சொத்து என அனைத்திலும் முன்னேற்றம்.
கடக லக்னம்
குரு 6 மற்றும் 9-ஆம் வீடுகளின் அதிபதியாக இருப்பதால், கஜகேசரி யோகம் இங்கு மிகச் சிறப்பாகச் செயல்படும். சந்திரன் லக்னத்தில் இருந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
சிம்ம லக்னம்
குரு மீனத்தில், சந்திரன் தனுசில் இருந்தால் மிகச் சிறந்த யோகம். பிற நிலைகளில் பலன் சாமான்யமாக இருக்கும்.
கன்னி லக்னம்
குரு தனது சொந்த ராசியில் இருந்தால், கேந்திராதிபதி தோஷம் நீங்கி, அறிவு வளர்ச்சி, புகழ், தொழில் உயர்வு கிடைக்கும்.
துலாம் லக்னம்
முழு பலன் இல்லாவிட்டாலும், குரு கடகத்தில், சந்திரன் மகரத்தில் இருந்தால், ஓரளவு நல்ல பலன். ஹம்ஸ யோகம் கூட அமையும்.
ராஜயோகம் போல் பலன் தரும்
விருச்சிக லக்னம்
குரு 2 மற்றும் 5-ஆம் வீடுகளின் அதிபதி; சந்திரன் 9-ஆம் வீட்டு அதிபதி. குரு லக்னத்தில், சந்திரன் 7-ஆம் வீட்டில் இருந்தால் ராஜயோகம் போல் பலன் தரும்.
தனுசு லக்னம்
சந்திரன் 8-ஆம் வீட்டின் அதிபதி என்பதால் முழு பலன் இல்லை. ஆனால் குரு விருச்சிகத்தில், சந்திரன் ரிஷபத்தில் இருந்தால் நல்ல வளர்ச்சி.
மகர லக்னம்
கஜகேசரி யோகம் சாமான்ய பலன் தரும். வேலை மற்றும் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை கிடைக்கும்.
கும்ப லக்னம்
சந்திரன் 6-ஆம் வீட்டு அதிபதி என்பதால், யோகம் பலம் குறையும். ஆனாலும் மனநிலை உறுதியுடன் இருந்தால் வளர்ச்சி உறுதி.
மீன லக்னம்
இங்கே குரு லக்னாதிபதியும் 10-ஆம் வீட்டு அதிபதியும்; சந்திரன் 5-ஆம் வீட்டு அதிபதியும் ஆகிறார். எனவே இந்த லக்னத்தில் கஜகேசரி யோகம் மிகச் சிறந்த பலன்களைத் தரும் — கல்வி, பதவி, புகழ் அனைத்தும் சேர்ந்து வரும்.
லட்சுமியை காத்திருக்க தயாராகவும்.!
விருச்சிக லக்னம், தனுசு லக்னம், மகர லக்னம் மற்றும் கும்ப லக்னத்திற்கு தீபாவளிக்கு பிறகு ராஜயோகமும் இதனால் பேரும் புகழும் கிடைக்க உள்ளதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். குரு மற்றும் சந்திரனின் நகர்வால் மேற்கண்ட லக்னங்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் புதிய ஜாக்பாட் காத்திருக்கறது.