- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் சிறந்த கணவரா இருக்க மாட்டாங்களாம்.! இவங்க கூட வாழ்றதே பெரிய அக்கப்போரா இருக்குமாம்.!
Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் சிறந்த கணவரா இருக்க மாட்டாங்களாம்.! இவங்க கூட வாழ்றதே பெரிய அக்கப்போரா இருக்குமாம்.!
Worst Husband Zodiac Signs: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்த ஆண்கள் சிறந்த கணவராக இருக்க மாட்டார்களாம். அவர்களுடன் வாழ்வது என்பதே அக்கப்போராக இருக்குமாம். அதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Worst Husband Zodiac Signs - சிறந்த கணவராக இல்லாத 4 ராசிகள்
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலங்கள் மற்றும் பலவீனங்கள் உண்டு. சில குணாதிசயங்கள் ஒரு நபரை சிறந்த கணவராக மாற்றுவதற்கு சவாலாக இருக்கும். சில ராசியில் பிறந்த ஆண்கள் திருமண பந்தத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கும், அன்பை வழங்குவதற்கும், குடும்ப வாழ்வில் நிலைத்தன்மையை வழங்குவதற்கும் சிரமப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி சிறந்த கணவராக இருக்க வாய்ப்பு இல்லாத நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், கோபம் ஆகியவற்றின் காரகராவர். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே அதிக வேகம், ஆற்றல், உத்வேகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களை காட்டிலும் சுயநலம் கொண்டவர்கள். துணையின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் முடிவுகளை எடுப்பார்கள். இவர்களின் போட்டி குணங்கள் சில நேரங்களில் மனைவியுடன் மோதல்களை ஏற்படுத்தும். அனைத்திலும் தானே முதலில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதால் மனைவியை கூட போட்டியாளர்களாக கருதுவார்கள். புதிய சாகசங்கள் மற்றும் சுதந்திரத்தை விரும்புவதால் திருமணம் பந்தங்களில் அதிக ஈடுபாடு காட்ட மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டைத் தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். புதன் பகவானால் ஆளப்படும் இவர்கள் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். அதே சமயம் விரைவான மனமாற்றம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஒரு நிமிடம் வேடிக்கையாக பேசுவார்கள், அடுத்த நிமிடமே குழப்பமான சூழலை உருவாக்குவார்கள். இந்த நிலையற்றத் தன்மை வாழ்க்கைத் துணைக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தலாம். திருமண உறவில் ஆழமான அர்ப்பணிப்பு காட்டுவது இவர்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் நாட்டம் கொண்ட இவர்கள், துணையின் உணர்வுகளை விட வேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தலாம். இதன் காரணமாக வாழ்க்கைத் துணை புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்கள். இவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. திருமண வாழ்க்கையின் கட்டுப்பாடுகள் இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். சுதந்திரம் முக்கியம் என்பதால் நிலையான மற்றும் வழக்கமான குடும்ப வாழ்க்கையை இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். பெரும்பாலும் தொலைநோக்கு திட்டங்களில் கவனம் செலுத்துவதால் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷங்களை புறக்கணிப்பார்கள். இது குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு சவாலாக இருக்கக்கூடும். இவர்களின் உற்சாகமான குணம் இவர்களை சிறந்த நண்பர்களாக மாற்றினாலும், குடும்ப வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் மிகவும் ஒழுக்கம் மற்றும் பொறுப்பானவர்கள். இவர்களின் அளவுக்கு மீறிய லட்சியம் கடின உழைப்பும் குடும்ப வாழ்க்கைக்குள் சில சமயங்களில் குடும்பத்தை கவனிக்காதவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். தங்கள் தொழில் மற்றும் இலக்குகளை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்து, குடும்ப உறவுகளுக்கு குறைவான நேரத்தை ஒதுக்குவார்கள். தங்கள் உணர்ச்சிகளையும் பெரிய அளவில் காட்ட மாட்டார்கள். இவர்களின் கட்டுப்பாடு மற்றும் கண்டிப்பு சில நேரங்களில் ஆதிக்கம் செலுத்துவது போல தோன்றலாம். இதனால் வீட்டின் மகிழ்ச்சியான சூழல் குறையலாம்.
இறுதியாக
மேற்குறிப்பிடப்பட்ட ராசியைச் சேர்ந்த ஆண்கள் சிறந்த கணவர்களாக இருப்பது கடினம் என்று கருதப்பட்டாலும் இது பொதுவான கண்ணோட்டம் மட்டுமே. எந்த ஒரு ராசியில் பிறந்தவர்களும் மோசமானவர்கள் கிடையாது. ஒருவரின் குணாதிசயங்கள் என்பது அவர்களது தனிப்பட்ட ஜாதக அமைப்பு, வளர்ப்பு முறை, வளர்ந்த சூழல், வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றைக் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

