இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்; இதுல நீங்கள் இருக்கிறீர்களா பாருங்கள்!
Women born on these dates are Very lucky in Their Life : இந்த தேதிகளில் பிறந்த பெண்கள், அவர்கள் பிறக்கும்போதே தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறார்கள். திருமணமான கணவனின் வாழ்க்கையையும் அழகாக மாற்றுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் யார் யார் என்று எண்கணிதத்தின் படி பார்க்கலாம்.

எண் கணிதத்தின்படி, நாம் பிறந்த தேதியின் அடிப்படையில் நமது ஆளுமை மற்றும் ஜாதகத்தை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் ஆண்களை விட சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் யார், எந்த தேதியில் பிறந்தால் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வோம். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள்... பிறந்ததிலிருந்து தந்தைக்கும் திருமணத்திற்குப் பிறகு கணவருக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறார்கள். அப்படியானால், அந்த தேதிகள் என்னவென்று ஒருமுறை பார்த்து விடுவோமா?
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறார்கள். அதிர்ஷ்டம் எல்லோக்குமே கிடைத்துவிடாது. எண் கணிதத்தின்படி அவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்திக்க வேண்டும். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள், அவர்கள் பிறக்கும்போதே தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறார்கள். திருமணமான கணவனின் வாழ்க்கையையும் அழகாக மாற்றுகிறார்கள். ஒவ்வொரு மாதத்திலும் 1 முதல் 30, 31 நாட்கள் உள்ளன. ஒவ்வொரு தேதிக்கும் ஒரு சிறப்பு சக்தி உள்ளது. ஆனால், 3, 7, 11, 21, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய நன்மைகளை கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக பெண்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறார்கள். பெற்றோர்களுக்கு அதிர்ஷ்டத்தை தருகிறார்கள். இந்த குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் பெற்றோருக்கும், வாழ்க்கைத் துணைக்கும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் கிட்டத்தட்ட மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். அழகாகவும் இருப்பார்கள். தங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையில் கருணையுடன் இருப்பார்கள்.
இவர்கள் பிறந்த வீட்டில் இருக்கும் வரை தந்தையை பெருமைப்பட வைப்பார்கள். அவர்கள் தான் திருமணத்திற்குப் பிறகு திருமண வாழ்க்கையில் அன்பு, நல்லிணக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த பெண்கள் தங்கள் குடும்பங்களின் நிலை மற்றும் மகிழ்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எங்கு இருந்தாலும் எந்த சண்டையும் இல்லாமல் இணக்கமாக இருக்கிறார்கள். மாமியார், மாமனாரையும் அன்புடன் நடத்துகிறார்கள். கணவன் மனைவிக்கு இடையே கூட சண்டைகள் வருவதில்லை. கணவனை சந்தோஷமாக வைத்திருப்பதே இவர்களின் நோக்கமாக செயல்படுகிறார்கள்.