- Home
- Astrology
- Bathing Naked : நிர்வாணமா குளிப்பீங்களா? இனி அந்த தப்ப பண்ணாதீங்க.. மோசமான விளைவுகள் வரும்
Bathing Naked : நிர்வாணமா குளிப்பீங்களா? இனி அந்த தப்ப பண்ணாதீங்க.. மோசமான விளைவுகள் வரும்
இந்த பதிவில் குளியல் பற்றி வேதங்கள் என்ன சொல்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நாம் தினமும் காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் முன்பு வரை பல விஷயங்களை செய்வதுண்டு. அவற்றில் ஒன்றுதான் குளியல். ஆனால் ஸ்பீடான காலகட்டத்தில் முறையாக குளிப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், குளியல் குறித்து வேத சாஸ்திரங்கள் மற்றும் நம்முடைய முன்னோர்கள் சொல்லும் சில சுவாரசியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே காலை எழுந்தவுடன் குளிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானருக்கு உண்டு. சொல்ல போனால் பலர் குளிக்காமல் கிச்சனுக்கு கூட செல்ல மாட்டார்கள். குளியல் நம்முடைய உடலை இலகுவாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பலர் ஆடையில்லாமல் நிர்வாணமாக குளிக்க விரும்புகிறார்கள். ஆனால் இப்படி குளித்தால் வரும் பிரச்சனைகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. நிர்வாணமாக நீண்ட நேரம் குளித்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் வரும் என்ற நம்பிக்கை சிலருக்கு உண்டு. இப்படி குளிப்பது வீடு மற்றும் மனதை பாதிக்கும் என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எண்ணுகின்றனர். அது மட்டுமில்லாமல் நிர்வாணமாக குளிப்பது லட்சுமி தேவிக்கு பிடிக்காது. இதனால் வீட்டின் நிதி நிலைமை பாதிக்கப்படும் என்று ஜோதிடம் கூறுகிறது.
அது மட்டுமல்லாமல் ஆடை இல்லாமல் குளித்தால் தீர்க்கவே முடியாத பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, ஏதாவது துணி அல்லது குட்டையான ஆடை உடுத்திக்கொண்டு குளியுங்கள்.
இப்படி ஆடை இல்லாமல் ஏன் குளிக்க கூடாது? என்பதற்கான கதை ஒன்று உள்ளது. அதாவது கிருஷ்ணரின் ஆடைகளை திருடிய கதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது மட்டுமின்றி முந்தைய காலங்களில் எல்லாருடைய வீட்டிலும் கழிப்பறை இருக்காது என்பதையும் குறிக்கிறது.
மற்றொரு விஷயம் என்னவென்றால், நிறுவனமாக குளித்தால் அவசர சமயத்தில் உடனே வெளியே வர முடியாமல் போகும். மேலும் நீங்கள் ஹோட்டல் மற்றும் பிற இடங்களுக்கு வெளியே செல்லும்போது அங்கு ஆடை இல்லாமல் குளிப்பது நல்லது அல்ல. ஆடை அணிந்து குளிப்பது தான் சிறந்தது.