இந்த ராசியினரை மட்டும் கல்யாணம் பண்ணாதீங்க!! அப்பறம் வாழ்க்கையே நரகமாகிடும்
எந்த ராசிக்காரர்கள் திருமண பந்தத்தில் இணைவது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

திருமணம் செய்யக்கூடாத ராசிக்காரர்கள்
குணம் நன்றாக இருந்தாலும் கோள்கள் நன்றாக இல்லாவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டாட்டம் தான். அதனால் தான் திருமணம் செய்யும் போது ராசி, நட்சத்திரம் பார்ப்பார்கள். இது திருமணத்திற்கு பின்னான வாழ்க்கை வளமாக இருக்க செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. சில ராசியினர் தம்பதிகளாக ஒன்றாக இணைவது அவர்களை வாழ்க்கையில் உச்சாணி கொம்பில் கொண்டு வைக்கும். பணம் குவியும்; மகிழ்ச்சி வற்றாமல் இருக்கும். ஆனால் சில ராசியினர் சேரும் போது விளைவுகள் நேர்மறையாக இருப்பதில்லை. வாழ்க்கையே நரகம் போல தோன்றும். என்னதான் அவர்கள் முயற்சி செய்தாலும் மீண்டும், மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வந்து நிற்பார்கள். ஏன் திருமணம் செய்தோம்? என்று யோசிக்கும் அளவுக்கு வாழ்க்கை அவர்களை புரட்டி போடும். ஏன் சில ராசியினர் குறிப்பிட்ட ராசிக்காரர்களை திருமணம் செய்வது மோசமான பாதிப்பை உண்டாக்குகிறது? அவர்கள் தனிப்பட்ட முறையில் நல்லவராக இருந்தாலும், இந்த ராசிக்காரருடன் இணைந்தால் ஏன் மோசமானவராக மாறுகிறார்கள்? இந்தப் பதிவில் அது பற்றி விரிவாக காணலாம்.
மீனம், தனுசு:
இந்த இரண்டு ராசியிலும் பிறந்தவர்களின் குணங்கள் எதிரும் புதிருமாக இருக்கும். நீரும், நெருப்பும் எப்படி ஒன்றாக இருக்க முடியாதோ அதேப்போல மீனமும் தனுஷும் ஒன்று சேர முடியாது. தனுசு ராசியினர் எதையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள். துடிப்பாக செயல்படக் கூடியவர்கள். ஆனால் மீன ராசியினர் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய மென்மையான குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் இரக்கம் கொள்ளக் கூடியவர்கள். தனுசு ராசியினர் துடுக்காக பேசுவதால் மீன ராசியினர் அடிக்கடி காயப்பட வாய்ப்புள்ளது. போதுமான புரிதல் இல்லாதபட்சத்தில் இவர்களுடைய உறவு சண்டையும் சச்சரவுமாக மாறிவிடக்கூடும்.
மேஷம், கடகம்;
இந்த இரண்டு ராசிகளும் ஒன்றோடு ஒன்று பொருந்தாத ராசிகளாகும். மேஷ ராசிக்காரர்கள் அதிபதி செவ்வாய். துணிச்சலாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். வெளிப்படையாக பேசக் கூடியவர்கள். கடக ராசியினரின் அதிபதி சந்திரன். இந்த ராசியினர் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். குடும்ப பாசம் அதிகம். இவர்களின் உணர்வுகளை மேஷ ராசியினர் அடிக்கடி காயப்படுத்தக் கூடும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டால் பிரச்சனை இல்லை. புரிதல் இல்லை என்றால் வாழ்க்கையே நரகம் ஆகிவிடும்.
மிதுனம், விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எதையும் தீவிரமாக சிந்திக்க கூடியவர்கள். ஆழமான உணர்ச்சிகளை கொண்டிருப்பவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய இவர்கள் தங்கள் துணை மீது அதிகம் பொசசிவ் உணர்ச்சி கொண்டிருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள். இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். குறும்பும், தனித்துவமும் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தனித்துவமாக முன்னேற நினைப்பார்கள். இந்த இரண்டு ராசிகளும் ஒன்று சேர்வது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீடிய பொறுமையும், புரிதலும் இருந்தால் மட்டுமே இவர்களால் ஒன்றாக இருக்க முடியும்.
மகரம், சிம்மம்:
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம், கடின உழைப்பு, நிதானம் ஆகியவற்றை கொண்டிருப்பார்கள். வாழ்க்கையை அலட்டி கொள்ளாமல் நிதானமாகவும், ஒழுக்கமாகவும் வாழ்வது அவர்களுடைய பாலிசி. சிம்ம ராசியினர் தற்பெருமை கொள்பவர்கள், அனைவருடனும் நட்பு கொள்வார்கள். கவனம் ஈர்க்க நினைப்பார்கள். இந்த இருவரும் திருமணம் செய்யும் போது இருவருக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்படக்கூடும்.