MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Astrology
  • காதலில் மிகவும் நம்பகமான மற்றும் ரொமான்டிக் ஆன 5 ராசிகள் இவங்க தான்.! உங்க ராசி இருக்கா?

காதலில் மிகவும் நம்பகமான மற்றும் ரொமான்டிக் ஆன 5 ராசிகள் இவங்க தான்.! உங்க ராசி இருக்கா?

Zodiac signs who are best lovers: ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் காதலிப்பதில் வல்லவர்களாவும், ரொமான்டிக் ஆகவும் இருப்பார்களாம். அந்த ராசிகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 08 2026, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரொமான்டிக் ஆன 5 ராசிகள்
Image Credit : Asianet News

ரொமான்டிக் ஆன 5 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. சில ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகமாக காதலிப்பவர்களாகவும், காதலில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். திருமணத்திற்கு பின்னர் தங்களது வாழ்க்கைத் துணையுடன் மிகவும் ரொமாண்டிக்கான வாழ்க்கையை கழிப்பார்கள். அத்தகைய ராசிக்காரர்கள் யார்? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் பகவான் காதல், அன்பு, அழகு மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராவார். ரிஷப ராசியினர் காதலை மிக உயர்தரமாக வெளிப்படுத்துவார்கள். விலையுயர்ந்த பரிசுகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு என ஒவ்வொரு நகர்வையும் திட்டமிட்டு அசத்துவார்கள். இவர்களது காதல் மிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது.

Related Articles

Related image1
ராகுவின் வீட்டில் குடியேறும் சுக்கிர பகவான்.! கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.!
Related image2
குரு பகவான் கட்டுப்பாட்டில் 6 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும்.!
36
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் கடக ராசியினர், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு என்ன தேவை என்பதைப் பேசாமலே புரிந்துகொள்வார்கள். அக்கறையாகப் பார்த்துக்கொள்வது, அரவணைப்பது என இவர்களது காதல் மிகவும் ஆழமானது. காதலில் அதிக பாதுகாப்பு உணர்வையும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பையும் தருவார்கள்.

46
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இவர்கள் எதையும் பிரம்மாண்டமாகச் செய்ய விரும்புவார்கள். தனது காதல் உலகிற்கே தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவது, மிகப்பெரிய சர்ப்ரைஸ்களைத் தருவது இவர்களுக்குப் பிடிக்கும். இவர்களது காதலில் ஒருவித கம்பீரமும், தாராள மனப்பான்மையும் இருக்கும்.

56
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

ரிஷபத்தைப் போலவே துலாம் ராசிக்கும் அதிபதி சுக்கிரன் தான். இவர்கள் ஒரு உறவில் எப்போதும் இணக்கத்தையும் அழகையும் விரும்புவார்கள். துலாம் ராசிக்காரர்கள் யாரிடமும் மிக எளிதாகப் பழகிவிடுவார்கள். காதலில் எப்போதும் ஒரு நளினம் இருக்கும். இவர்கள் தங்கள் துணையை மிகவும் ஸ்பெஷலாக உணர வைப்பதில் கில்லாடிகள். கவிதைகள் எழுதுவது, அழகியல் சார்ந்த விஷயங்களை ரசிப்பது இவர்களது பாணி.

66
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்கள் இயற்கையிலேயே கற்பனைத் திறன் மிக்கவர்கள். இவர்கள் காதலை ஒரு காவியமாகப் பார்ப்பார்கள். சினிமாத்தனமான காதல் என்று சொல்வார்களே, அது மீனத்திற்குப் பொருந்தும். தியாகம் செய்வது, எதிர்பார்ப்பில்லாத அன்பு செலுத்துவது இவர்களது குணம். தனது துணையைத் தேவதையாகவோ அல்லது இளவரசனாகவோ கருதி அதீத அன்பு செலுத்துவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit : செவ்வாய் பெயர்ச்சியால் திறக்கப்போகும் அதிர்ஷ்ட கதவு... இனி இந்த 5 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி!
Recommended image2
Astrology: இன்றைய 12 ராசிபலன்: பணமழை கொட்டப்போகும் ராசிகள் யார்? அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிகள்
Recommended image3
Spiritual Remedy: இனி கடனே இருக்காது.! எல்லா ரசிகளுக்கும் பரிகாரம் உண்டு.! எல்லா நட்சத்திரங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்!
Related Stories
Recommended image1
ராகுவின் வீட்டில் குடியேறும் சுக்கிர பகவான்.! கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.!
Recommended image2
குரு பகவான் கட்டுப்பாட்டில் 6 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved