MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு புஷ்ய யோகம் 2024: இந்த நாள்ல மறக்காம இதெல்லாம் வாங்கினால் இந்த ஜென்மத்துல நீங்கள் தான் லச்சாதிபதி!

குரு புஷ்ய யோகம் 2024: இந்த நாள்ல மறக்காம இதெல்லாம் வாங்கினால் இந்த ஜென்மத்துல நீங்கள் தான் லச்சாதிபதி!

Guru Pushya Yoga Palan 2024 in Tamil : அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை குரு புஷ்ய யோகம் உருவாகிறது. இந்த நாளில் செய்யும் செயல்கள் இரட்டிப்பான பலன்களைத் தரும். நகைகள், பாத்திரங்கள், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நல்ல நாள்.

3 Min read
Rsiva kumar
Published : Oct 19 2024, 06:40 PM IST| Updated : Oct 19 2024, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Guru Bhagavan, Guru Pushya Nakshatra 2024 Palan in Tamil

Guru Bhagavan, Guru Pushya Nakshatra 2024 Palan in Tamil

Guru Pushya Yoga Palan 2024 in Tamil: ஜோதிட சாஸ்திரப்படி குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பகவான் புஷ்ய நட்சத்திரத்தில் இருக்கும் போது குரு புஷ்ய யோகம் உருவாகிறது. அதன்படி அக்டோபர் 24 ஆம் தேதி தான் வியாழக்கிழமை குரு புஷ்ய யோகம் உருவாகிறது. அந்த நாளி குரு பகவான் புஷ்ய நட்சத்திரத்தில் இருக்கிறார்.

212
October 24 Thursday Guru Pushya Nakshatram

October 24 Thursday Guru Pushya Nakshatram

இந்த நாளில் ஒவ்வொருவரும் வெற்றிக்கான வேலைகளை தான் செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த நாளில் நீங்கள் செய்யும் வேலைகளின் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். மேலும், இந்த நாளில் நீங்கள் எதெல்லாம் வாங்குகிறீர்களோ அதன் மூலமாக பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.

312
Guru Pushya Nakshatra 2024 Palan in Tamil

Guru Pushya Nakshatra 2024 Palan in Tamil

உதாரணத்திற்கு நகை வாங்கினாலும் சரி, பாத்திரம் வாங்கினாலும் சரி நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. இந்த முறை புஷ்ய நட்சத்திரம் 2 நாட்கள் இருக்கும். இந்த இரண்டு நாட்களும் ஷாப்பிங்கிற்கு நல்ல நாட்கள் தான். காசு, பணம் வைத்திருப்பவர்கள் இந்த நாளில் இது போன்ற பொருட்களை எல்லாம் வாங்கினால் அதன் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

412
2024 Guru Pushya Yoga Palan in Tamil

2024 Guru Pushya Yoga Palan in Tamil

புஷ்ய நட்சத்திர நாளான அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிமை என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். வியாழக்கிமை என்பதால் முதலில் குரு பகவானை தரிசனம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு புஷ்ய நட்சத்திரம் தொடங்கி முடியும் நேரத்திற்குள்ளாக நீங்கள் நினைப்பதை வாங்க வேண்டும்.

512
Guru Pushya Yogam in Tamil

Guru Pushya Yogam in Tamil

புஷ்ய நட்சத்திர நேரம்

புஷ்ய நட்சத்திரம் ஆரம்பம்: அக்டோபர் 24, 2024, வியாழக்கிழமை காலை 11:45 மணி முதல்

புஷ்ய நட்சத்திரம் முடிவு: அக்டோபர் 25, 2024, வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:31 மணி வரை

612
Guru Pushya Nakshatra Yoga 2024 Palan in Tamil

Guru Pushya Nakshatra Yoga 2024 Palan in Tamil

மஞ்சள் வாங்க வேண்டும்:

அதன் பிறகு புஷ்ய நட்சத்திரத்தில் மஞ்சள் கட்டாயம் வாங்க வேண்டும். இது குரு கிரகத்துடன் தொடர்புடையது. குருவே புஷ்ய நட்சத்திரத்தின் அதிபதி. புஷ்ய நட்சத்திரத்தில் வாங்கிய மஞ்சளை உங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

712
Guru Pushya Nakshatra 2024 Palan in Tamil

Guru Pushya Nakshatra 2024 Palan in Tamil

பாத்திரங்கள் வாங்க வேண்டும்:

புஷ்ய நட்சத்திர நாளில் பாத்திரங்கள் வாங்கினால் நல்ல பலன் அளிக்கும். உங்களால் அதிக பாத்திரங்கள் வாங்க முடியாவிட்டாலும் கூட ஒரு சிறிய டம்ளரோ அல்லது செம்பு, சாப்பிடக் கூடிய தட்டு என்று ஏதாவது ஒன்றை நீங்கள் வாங்கலாம். அதனை முதலில் உங்கள் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கி கொடுக்கும்.

812
What to buy on this Guru Pushya Nakshatra Day 2024

What to buy on this Guru Pushya Nakshatra Day 2024

நோட்டு, பேனா, டைரி:

படிக்கும் மாணவராகவோ அல்லது பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவோ, வழக்கறிஞராகவோ அல்லது ரிப்போர்ட்டராகவோ இருந்தாலும் சரி நீங்கள் பேனா, நோட், டைரி போன்ற படிப்பு தொடர்பான பொருட்கள் வாங்கலாம். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும்.

912
Guru Pushya Yoga 2024

Guru Pushya Yoga 2024

புதிய ஆடைகள் வாங்க வேண்டும்:

பொதுவாக புதிய ஆடைகளை வியாழக்கிழமை அணிந்தால் நல்ல பலன் தரும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. எங்களுடைய வீட்டில் என்னுடைய அப்பா சொல்லியிருக்கிறார். இந்த புஷ்ய நட்சத்திரத்தில் ஆடைகள் வாங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க செய்யும். இந்த நாளில் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திற்கோ ஆடைகள் வாங்கலாம். அல்லது ஆடை தானம் கூட செய்யலாம்.

1012
Guru Pushya Yoga 2024 Palan in Tamil

Guru Pushya Yoga 2024 Palan in Tamil

கணக்கு புத்தகம்:

இந்த நாளில் கணக்கு புத்தகம் வாங்குவது நல்லது. வியாபாரிகள் இந்த நாளில் கணக்குப் புத்தகம் வாங்க வேண்டும். இது வியாபாரத்தில் நல்ல பலன்களைத் தரும்.

1112
Guru Pushya Nakshatra Yoga 2024 Palan in Tamil

Guru Pushya Nakshatra Yoga 2024 Palan in Tamil

தங்கம்:

குரு புஷ்ய யோகத்தில் தங்க நகைகள், நிலம், வீடு மற்றும் வாகனம் முதல் மின்னணு சாதனங்கள் வரை அனைத்தையும் வாங்குவது மிகவும் நல்லது. வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள் கடைக்கு சென்று ஒரு பாக்கெட் கல் உப்பு வாங்கி வந்து வீட்டு பூஜையறையில் ஓம் மகாலட்சுமியே போற்றி என்ற மந்திரம் சொல்லி வழிபாடு செய்ய பண வரவு உண்டாகும்.

1212
Guru Pushya Nakshatra 2024 Yoga Palan in Tamil

Guru Pushya Nakshatra 2024 Yoga Palan in Tamil

மின்னணு சாதனங்கள்:

வீடு, மனை, பிளாட், விவசாய நிலம் வாங்கலாம். இது தவிர, நீங்கள் பைக், கார் மற்றும் டிவி, ஏசி, அயன் பாக்ஸ், லேப்டாப், மொபைல், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை வாங்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved