MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 12 ராசிகளுக்கான இந்த வாரப் பலன்கள்: கிரகங்களின் ஆட்டம் ஆரம்பம்! தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

12 ராசிகளுக்கான இந்த வாரப் பலன்கள்: கிரகங்களின் ஆட்டம் ஆரம்பம்! தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

Weekly Horoscope May 4 to 10 2026 Predictions in Tamil : 2026 மே மாதம் முதல் வாரத்திற்கான (மே 4 முதல் மே 10 வரை) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான பலன்கள் இதோ..

6 Min read
Author : Rsiva kumar
Published : May 03 2026, 08:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் (Aries) : மின்னல் வேக செயல்பாடுகளும் வெற்றியும் நிறைந்த வாரம்
Image Credit : Getty

மேஷம் (Aries) : மின்னல் வேக செயல்பாடுகளும் வெற்றியும் நிறைந்த வாரம்

மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே பலமாக அமர்வதால், இந்த வாரம் நீங்கள் ஒரு போர்வீரனைப் போன்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்க கிரகங்கள் உங்களுக்குத் துணை நிற்கும். சோம்பல் உங்களை விட்டு ஓடிவிடும். புதிய திட்டங்களைத் தீட்டுவதிலும், அதைச் செயல்படுத்துவதிலும் உங்களுக்கு நிகர் நீங்களே. பல மாதங்களாகத் தள்ளிப்போன மற்றும் நிலுவையில் இருந்த வேலைகளை மின்னல் வேகத்தில் முடித்து அனைவரையும் வியக்க வைப்பீர்கள். 

உங்களின் நிர்வாகத் திறன் மற்றும் முடிவெடுக்கும் வேகம் அலுவலகத்தில் உங்களுக்குப் பெரும் நற்பெயரைப் பெற்றுத் தரும். ராசியில் செவ்வாய் இருப்பதால் தேவையற்ற ஆவேசம் அல்லது பிடிவாதம் தலைதூக்கும். நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களைக் காயப்படுத்தலாம். முன்கோபத்தைக் குறைத்தால் மட்டுமே குடும்பத்தில் அமைதி நிலவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது அவசியம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய் தீபம் ஏற்றவும்.

212
ரிஷபம் (Taurus) : அதிர்ஷ்டக் காற்று வீசும் பொற்காலம்
Image Credit : Asianet News

ரிஷபம் (Taurus) : அதிர்ஷ்டக் காற்று வீசும் பொற்காலம்

ரிஷப ராசி நேயர்களே, ராசிநாதன் சுக்கிரன் உச்ச பலம் பெற்று சஞ்சரிப்பதால், இந்த வாரம் உங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் நேர்மறையாக அமையும். நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பலன் கிடைக்கும் வாரமிது. எதிர்பாராத பணவரவு உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். நிலுவையில் இருந்த வரவுகள், லாப பங்கு அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வர வாய்ப்புள்ளது. வங்கி இருப்பு உயரும்; உங்களின் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். 

நீங்கள் எதிர்பார்க்காத பெரிய நிறுவனங்களிடமிருந்து புதிய தொழில் வாய்ப்புகள் அல்லது பார்ட்னர்ஷிப் அழைப்புகள் தேடி வரும். பாஸ்போர்ட், விசா போன்ற முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் சாதகமாகும் மற்றும் பெரும் லாபத்தைத் தரும். உங்கள் கணவன் அல்லது மனைவியின் நீண்ட நாள் ஆசை அல்லது கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை இந்த வாரம் நிறைவேற்றி வைப்பீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு மல்லிகை பூ சாற்றி வழிபடவும்.

312
மிதுனம் (Gemini) : நிதானமே இப்போதைய வெற்றி மந்திரம்
Image Credit : stockPhoto

மிதுனம் (Gemini) : நிதானமே இப்போதைய வெற்றி மந்திரம்

மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிநாதன் புதன் மற்றும் இதர கிரகங்களின் சஞ்சாரத்தால் இந்த வாரம் நீங்கள் சற்று எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் காய்களை நகர்த்த வேண்டிய சூழல் நிலவுகிறது. எந்தவொரு புதிய ஒப்பந்தத்திலோ அல்லது முதலீட்டிலோ இறங்க வேண்டாம். புதிய தொழில் தொடங்குதல் அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்தல் போன்றவற்றைச் சில காலம் தள்ளிப்போடுவது நல்லது. 

எதையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துச் செயல்படுவது நஷ்டங்களைத் தவிர்க்க உதவும். உங்கள் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், அதை மேலதிகாரிகளிடம் (Boss) சொல்லும் விதம் முக்கியம். தேவையற்ற வாக்குவாதங்கள் உங்கள் பதவி உயர்வு அல்லது நற்பெயருக்குத் தடையாக மாறலாம். அலுவலக அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது உங்கள் நிம்மதியைக் காக்கும். காலநிலை மாற்றத்தினால் ஒவ்வாமை அல்லது சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: புதன்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.

412
கடகம் (Cancer)
Image Credit : Getty

கடகம் (Cancer)

கடக ராசி நேயர்களே, ராசி நாதன் சந்திரன் வலுவான நிலையில் சஞ்சரிப்பதால், கடந்த சில வாரங்களாக உங்கள் மனதை வாட்டிய கவலைகள் மறைந்து, புதிய உற்சாகத்துடன் இந்த வாரத்தைத் தொடங்குவீர்கள். கடந்த காலங்களில் இருந்த தேவையற்ற பயம் மற்றும் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம் இது. எடுக்கப் போகும் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் மன உறுதி கூடுவதால் கடினமான காரியங்களையும் எளிதாகக் கையாளுவீர்கள். 

நீங்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த விரும்பிய இடமாற்றம் இப்போது கைகூடும். உங்களின் அர்ப்பணிப்பைக் கண்டு நிறுவனம் உங்களுக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு அளிக்க முன்வரும். புதிய பொறுப்புகள் உங்கள் அதிகாரத்தை உயர்த்தும். யாரிடமாவது பணம் கொடுத்துத் திரும்ப வராது என்று கைவிட்ட நிலுவைத் தொகைகள் இந்த வாரம் வசூலாகும். வர வேண்டிய பாக்கிகள் கைக்கு வருவதால் பணப்புழக்கம் சீராகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யவும்.

512
சிம்மம் (Leo) : அரசு யோகமும் அந்தஸ்தும் உயரும் வாராந்திர பலன்கள்
Image Credit : Getty

சிம்மம் (Leo) : அரசு யோகமும் அந்தஸ்தும் உயரும் வாராந்திர பலன்கள்

சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிநாதன் சூரியன் மற்றும் பிற கிரகங்களின் சாதகமான சஞ்சாரத்தால், இந்த வாரம் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் அதிகாரமும் செல்வாக்கும் உச்சத்தைத் தொடும் வாரமாக இது அமையும். நீங்கள் செய்த பழைய நற்பணிகளுக்காகப் பாராட்டப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்குப் புதிய பதவிகள் தேடி வரும். 

பட்டா மாறுதல், அரசு மானியம், வங்கிக் கடன் அல்லது நிலுவையில் இருந்த பென்ஷன் தொகை போன்றவை தடையின்றி கைக்கு வந்து சேரும். திருமணம், காதுகுத்து அல்லது கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களைத் தள்ளிப்போட்டு வந்தவர்களுக்கு இப்போது அதற்கான நேரம் கனிந்து வரும். நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாகப் பேசப்படாத சுப விஷயங்கள் குறித்து பெரியவர்களுடன் கலந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு.

612
கன்னி (Virgo) : போராட்டங்களுக்குப் பின் வெற்றிக்கனியைப் பறிக்கும் வாரம்
Image Credit : stockPhoto

கன்னி (Virgo) : போராட்டங்களுக்குப் பின் வெற்றிக்கனியைப் பறிக்கும் வாரம்

கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஒரு பரீட்சைக் காலம் போன்றது. கிரக நிலைகள் சவால்களைத் தந்தாலும், உங்கள் விடாமுயற்சியால் அவற்றைச் சாதனைகளாக மாற்றுவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் வேலைப்பளு அல்லது முடிக்க முடியாத இலக்குகள் உங்கள் முன் வரலாம். நீங்கள் செய்த வேலைக்கான கமிஷன் தொகையோ அல்லது சம்பள உயர்வோ கிடைப்பதில் சில தொழில்நுட்பத் தடைகள் ஏற்படலாம். 

பணம் கைக்கு வருவது தள்ளிப்போகுமே தவிர, கண்டிப்பாக வந்து சேரும். தேவையற்ற கடன் வாங்குவதைத் தவிர்த்து, இருக்கும் பணத்தைச் சிக்கனமாகச் செலவிடுங்கள். உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால், இந்த விஷயத்தில் நீங்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட தூர இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களை முறையாகப் பராமரியுங்கள்; திடீர் பழுதுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றவும்.

712
துலாம் (Libra) : லாபமும் மகிழ்ச்சியும் இல்லம் தேடி வரும்
Image Credit : stockPhoto

துலாம் (Libra) : லாபமும் மகிழ்ச்சியும் இல்லம் தேடி வரும்

துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் சுக்கிரனின் அருளால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இரட்டிப்பு பலனைத் தரும் இனிய வாரமாக இது அமையும். டந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த வியாபாரம் இந்த வாரம் சூடுபிடிக்கும். எதிர்பாராத பெரிய ஆர்டர்கள் கிடைப்பதன் மூலம் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். புதிய கிளைகள் தொடங்குவது அல்லது தொழிலை விரிவாக்கம் செய்வது போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

உங்கள் பணிகளில் இருந்த சிக்கல்களைத் தீர்க்க உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். குழுவாகச் சேர்ந்து செய்யும் காரியங்களில் உங்களுக்குத் தலைமைப் பண்பு தேடி வரும். மேலதிகாரிகள் உங்கள் உழைப்பைக் கண்டு மெச்சப்படுவார்கள். ஒரு சிலருக்குப் பதவி உயர்வுக்கான முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிறு மனக்கசப்புகளால் நீண்ட நாள் பிரிந்திருந்த உறவினர்கள் தாங்களாகவே தேடி வருவார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றவும்.

812
விருச்சிகம் (Scorpio) : தடைகளை உடைத்து சரித்திரம் படைக்கும் வாரம்
Image Credit : Pinterest

விருச்சிகம் (Scorpio) : தடைகளை உடைத்து சரித்திரம் படைக்கும் வாரம்

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால், இந்த வாரம் உங்கள் ஆளுமைத் திறன் உலகிற்குத் தெரியவரும். போராட்டங்களுக்குப் பின் கிடைக்கும் வெற்றியால் மகிழ்ச்சி அடைவீர்கள். கடந்த காலங்களில் தோல்வி அடைந்த காரியங்களை மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்; இந்த வாரம் உங்கள் விடாமுயற்சி அபரிமிதமான பலனைத் தரும். அலுவலகத்திலோ அல்லது உறவினர்கள் மத்தியிலோ உங்களுக்கு எதிராகத் திட்டமிட்டவர்கள் தாமாகவே பின்வாங்குவார்கள். உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் அமர்வதால் அஜீரணக் கோளாறுகள் அல்லது வயிற்று வலி போன்ற செரிமான மண்டலம் சார்ந்த உபாதைகள் ஏற்படலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு தானம் செய்யவும்.

912
தனுசு (Sagittarius) : நினைத்தது நிறைவேறும் பொற்காலம்
Image Credit : stockPhoto

தனுசு (Sagittarius) : நினைத்தது நிறைவேறும் பொற்காலம்

இந்த வாரம் தனுசு ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப்போகிறது. குருவின் அருளால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தானாகவே கைகூடி வரும். நீண்ட நாட்களாக நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது அல்லது புதிய தொழில் தொடங்குவது போன்ற பெரிய முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். உங்கள் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பெரிய நிறுவனங்களிடம் இருந்து புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். உங்கள் குழந்தைகளின் கல்வி, விளையாட்டு அல்லது வேலைவாய்ப்பில் அவர்கள் பெரும் சாதனைகளைச் செய்வார்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

1012
மகரம் (Capricorn) : நிதானமும் கவனமும் தேவைப்படும்
Image Credit : stockPhoto

மகரம் (Capricorn) : நிதானமும் கவனமும் தேவைப்படும்

இந்த வாரம் மகர ராசி நேயர்களுக்கு "வேகத்தை விட விவேகம்" மிக முக்கியம். கிரக நிலைகள் சற்றே சாதகமற்ற சூழலில் இருப்பதால், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தலாம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கு ஏற்ப, இந்த வாரம் நீங்கள் காட்டும் பொறுமை உங்களுக்குப் பிற்காலத்தில் பெரிய வெற்றியைத் தேடித்தரும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் அல்லது புதிய தொழில் தொடங்குவது போன்ற பெரிய முதலீடுகளை இந்த வாரம் தள்ளிப்போடுவது நல்லது. ஒரு சிலர் வேலை நிமித்தமாகவோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ வீடு மாற வேண்டிய சூழல் உருவாகலாம்.

பரிகாரம்: சனிக்கிழமை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றவும்.

1112
கும்பம் (Aquarius): தைரியமும் தன்னம்பிக்கையும் தழைத்தோங்கும்
Image Credit : Getty

கும்பம் (Aquarius): தைரியமும் தன்னம்பிக்கையும் தழைத்தோங்கும்

இந்த வாரம் கும்ப ராசி நேயர்களுக்கு மனதளவில் ஒரு பெரும் எழுச்சி உண்டாகும். கிரகங்களின் சாதகமான சஞ்சாரத்தால், உங்கள் செயல்களில் ஒரு புதிய வேகமும் விவேகமும் தென்படும். இதுவரை தள்ளிப்போட்ட கடினமான காரியங்களை இப்போது கையில் எடுத்து வெற்றிகரமாக முடிப்பீர்கள். எப்பேர்ப்பட்ட சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். பயம் விலகி, தெளிவான சிந்தனை பிறக்கும்.

ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு லாபத்தைத் தேடித்தரும். உங்களின் தலைமைப் பண்பு வெளிப்படும் வாரம் இது. சக ஊழியர்கள் உங்களை ஒரு வழிகாட்டியாகப் பார்ப்பார்கள். திர்பாராத இடங்களிலிருந்து நிலுவைத் தொகைகள் கைக்கு வரும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, எதிர்காலத்திற்கான முதலீடுகளில் (தங்கம் அல்லது சேமிப்புத் திட்டங்கள்) கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் வழங்கலாம்.

1212
மீனம் (Pisces)
Image Credit : stockPhoto

மீனம் (Pisces)

இரண்டாம் இடத்தில் (வாக்கு ஸ்தானம்) செவ்வாய் சஞ்சரிப்பதால், இந்த வாரம் உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு ஆயுதமாகவும் அமையும், அதே சமயம் கவனமாக இல்லாவிட்டால் அதுவே வினையாகவும் முடியும். வருமானம் சீராக இருந்தாலும், எதிர்பாராத குடும்பச் செலவுகள் வரிசைகட்டி நிற்கலாம். குறிப்பாக, வீட்டுப் பராமரிப்பு அல்லது சுப நிகழ்வுகளுக்காகப் பணம் செலவழிக்க நேரிடும். கடினமான வாடிக்கையாளர்களையும் உங்கள் பேச்சினால் கவர்ந்து, புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். 

உங்கள் கருத்துக்களைத் திணிக்காமல், மற்றவர்களுக்கும் செவிசாய்ப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே தேவையற்ற ஈகோ தலைதூக்கலாம். "நான் சொல்வதுதான் சரி" என்ற பிடிவாதம் விரிசலை உண்டாக்கலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பெரிய மோதல்களைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் கல்வி அல்லது எதிர்காலம் குறித்து சுபமான முடிவுகளை எடுப்பீர்கள். உஷ்ணம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிக காரமான உணவுகளைத் தவிர்த்து நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளவும்.

பரிகாரம்: வியாழக்கிழமை சித்தர்களின் ஜீவசமாதி தரிசனம் செய்வது நன்மை தரும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கேது பகவான் அதிபதி; மேஷ ராசி: குதிரை வேகத்தில் முன்னேறப்போகும் அஸ்வினி நட்சத்திர ராசிக்காரர்கள் - முழு விவரம்!
Recommended image2
Today Rasi Palan : மேஷம் முதல் மீனம் வரை.! இன்று இந்த 8 ராசிகளுக்கு தலையெழுத்து மாறப்போகுது.! மே 3-ஆம் தேதிக்கான முழுமையான ராசி பலன்கள்.!
Recommended image3
காதல் இளவரசிகள்.. சீக்கிரம் காதலில் விழும் 4 ராசி பெண்கள் இவர்கள்தான்..! உங்க ராசி இதில் இருக்கா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved