- Home
- Astrology
- அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் நேரம்! சுக்கிர யோகத்தால் பணத்தில் மிதக்கப்போகும் டாப் 5 ராசிகள்!
அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் நேரம்! சுக்கிர யோகத்தால் பணத்தில் மிதக்கப்போகும் டாப் 5 ராசிகள்!
Venus Yoga Top 5 Lucky Zodiac Signs : ஜோதிர ரீதியாக சுக்கிரனின் அருள் இந்த ராசியினருக்கு இருக்கிறது. அப்படி சுக்கிரனின் அருள் பெற்ற ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டும் நேரம்! சுக்கிர யோகத்தால் பணத்தில் மிதக்கப்போகும் டாப் 5 ராசிகள்!
ஜோதிட ரீதியாக பார்க்கையில் வசதியான வாழ்க்கைக்கு காரணகர்த்தாவாக இருப்பது சுக்கிரன். ஆடம்பரம், மகிழ்ச்சி, இன்பம் என்று எல்லாவற்றிற்கும் சுக்கிரன் தான் காரணம். அப்படிப்பட்ட சுக்கிர பகவான் ஒரு ராசியினருக்கு சாதகமான இடத்தில் இருந்தால் அந்த ராசியினர் தான் வாழ்க்கையில் கோடீஸ்வரர். சுக்கிரனின் அருள் பெற்ற இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். இவர்களுக்குப் பணத்துக்குப் பஞ்சமே இருக்காது.
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான சக்தி உண்டு. குறிப்பாக, சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி, கலை, அழகு மற்றும் ராஜயோகத்திற்கு காரணியாகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவர்களுக்குப் பணம் சம்பாத்தியமாக மட்டுமல்லாமல், சுகபோகங்கள், சொத்துக்கள், ஆடம்பர வாழ்க்கை வடிவிலும் வரும். மேலும், சுக்கிரனின் அருள் பெற்ற ராசிக்காரர்கள் இயல்பாகவே கவர்ச்சியாக இருப்பார்கள்.
ரிஷபம் ராசிக்கான சுக்கிரன் பலன்:
சுக்கிர பகவானின் சொந்த ராசி தான் ரிஷப ராசி. இதன் காரணமாக இயல்பாகவே ரிஷப ராசியினருக்கு சுக்கிரனின் அருள் இருக்கும். சுக்கிரனின் சாதகமான பலன் ரிஷப ராசியினருக்கு ராஜவாழ்க்கையை தரும். அதோடு பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றமும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிலையான வருமானம், சொத்துக்கள் மற்றும் சுகபோகங்களைப் பெறுவார்கள்.
துலாம் ராசிக்கான சுக்கிரன் பலன்
ரிஷப ராசியைப் போன்று துலாம் ராசியும் சுக்கிரனின் ராசி தான். ஆதலால் ரிஷப ராசிக்கு எப்படி சாதகமான பலன்கள் கிடைக்கிறதோ அதே போன்று தான் சுக்கிரனின் அருளும் துலாம் ராசிக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் லாபம் இருந்து கொண்டே இருக்கும். மற்ற துறைகளை விட கலை மற்றும் ஃபேஷன் துறைகளில் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கப் பெறும்.
மீன ராசிக்கான சுக்கிரன் பலன்
மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். இந்த ராசியினருக்கு சுக்கிரனின் அருள் இருக்கும் ஏராளமான வாய்ப்புகள் தேடி வரும். கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்கும். சினிமா, இசை, ஆன்மீகத் துறைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். பணம் மட்டுமல்ல, சுக்கிரனால் இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
கடக ராசிக்கான சுக்கிரன் பலன்
மீன ராசியைப் பொறுத்த வரையில் கடக ராசியினருக்கு சுக்கிரன் சாதகமாக இருக்கும் போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், சொத்து சுகம் சேரும், சொந்த வீடு வாங்கும் எண்ணமும் மேலோங்கும். வண்டி, வாகனம் உண்டாகும் வாய்ப்பு தேடி வரும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுக்கிரனின் அருளால் கடக ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்.
மகரம் ராசிக்கான சுக்கிரன் பலன்
மகரம் ராசியினருக்கு சுக்கிரன் யோக காரகனாக வரும் பொது விடாமுயற்சியால் கிடைத்த பணத்தை கொண்டு கோடீஸ்வரர்களாக மாறுவார்கள். அரசியல், அரசுத் துறை, ரியல் எஸ்டேட், பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகள் மூலம் பண வரவு இருந்து கொண்டே இருக்கும்.