ஜூலையில் 3 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரன் : 3 ராசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
Venus Transit Predictions in Tamil : அடுத்த மாதம் ஜூலையில், சுக்கிரன் தனது சஞ்சாரத்தை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்ல, மூன்று முறை மாற்றுகிறார். வழக்கமாக, சுக்கிரன் ஒரு ராசியில் இரண்டு முறை சஞ்சரிப்பார். இந்த முறை 3 முறை சஞ்சாரம் செய்கிறார்.

ஜூலையில் 3 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரன்
Venus Transit Predictions in Tamil : சுக்கிரன் நவக்கிரகங்களில் முக்கியமானவர், செல்வம், காதல், மகிழ்ச்சி போன்றவற்றைக் குறிக்கிறார். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, ஆடம்பரம் பெறுவர்.
சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி
சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சி தரும். வீட்டில் சண்டை இருந்தால் நீங்கும். இளைஞர்கள் படைப்பில் வெற்றி பெறுவர். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். காதல் திருமண கை கூடும். இதுவரையில் விலகியிருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி
துலாம் ராசிக்கும் சுக்கிரன் பெயர்ச்சி பலன் தரும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். நிதி நிலை சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் வசந்தம் வீசும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். ஏராளமான மகிழ்ச்சி சம்பவங்கள் வீட்டில் நடக்கும்.
தனுசு ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்
தனுசு ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சி தரும். உறவுகள் சீராகும். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். ஏற்கனவே காதலிப்பவர்களுக்கு காதலியால் ஏராளமான நன்மைகள் நடக்கும். 2ஆவது திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான அறிகுறிகள் தென்படும்.