- Home
- Astrology
- சுக்கிர பெயர்ச்சி 2026: மே 8 முதல் இந்த 3 ராசிகளுக்கு 'குபேர யோகம்'.. ஜாக்பாட் அடிக்கப்போகுது!
சுக்கிர பெயர்ச்சி 2026: மே 8 முதல் இந்த 3 ராசிகளுக்கு 'குபேர யோகம்'.. ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஜோதிட சாஸ்திரத்தில் அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். மே 08 அன்று சுக்கிர பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கை ஆரம்பமாக போகிறது.

சுக்கிர பகவான்
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடம்பரம், செல்வம், காதல் மற்றும் மகிழ்ச்சிக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவர்களுக்கு ராஜபோக வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தற்போது சுக்கிர பகவான் வரும் மே 08 அன்று மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அவை எந்தெந்த ராசிகளுக்கு எந்த மாதிரியான அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
மேஷம் - தடைகள் விலகி வெற்றிகள் குவியும்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு புதிய விடியலைத் தரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் அனைத்தும் இனி சுலபமாக முடியும். தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, குடும்பத்தில் நிலவிய கசப்புகள் நீங்கி, பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கு இதுவே பொற்காலம். திருமணமாகாத இளைஞர்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணை அமையும்.
ரிஷபம் - பதவியும் பணமும் தேடி வரும்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இது 'பதவி உயர்வு' காலம். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள். உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும். கடினமான சவால்களைக் கூட மிக எளிதாகக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மங்கலச் செய்திகள் தட்டும், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
துலாம் - வருமானம் பெருகும்.. வசீகரம் கூடும்
துலாம் ராசியினருக்கு இந்தப் பெயர்ச்சி நிதி நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பல வழிகளில் இருந்து பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். உங்கள் பேச்சாற்றல் மற்றவர்களைக் கவரும் வகையில் அமைவதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் லாபத்தில் முடியும். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற முழுப் பலனும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

