- Home
- Astrology
- Astrology: சனி பகவானின் வீட்டில் உதயமாகும் சுக்கிரன்.! ஆடம்பர வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Astrology: சனி பகவானின் வீட்டில் உதயமாகும் சுக்கிரன்.! ஆடம்பர வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Shukra Peyarchi 2026: செல்வத்தை அளிக்கும் சுக்கிர பகவான் 2026 ஆம் ஆண்டு சனி பகவானின் சொந்த ராசியில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல காலம் தொடங்க இருக்கிறது.

மகர ராசியில் சுக்கிரன் உதயம்
ஜோதிடத்தின்படி ஒரு கிரகமானது சூரியனுக்கு மிக அருகில் வரும் பொழுது மறைந்திருக்கும் நிலை அதாவது அஸ்தமன நிலையை அடைகிறது. குறிப்பிட்ட சில காலத்திற்குப் பின்னர் அந்த கிரகம் மீண்டும் வேறு ராசியில் உதயமாகிறது. அந்த வகையில் தற்போது சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் இருந்து வெளிவந்து மகர ராசியில் உதயமாக இருக்கிறார். ஜோதிட ரீதியாக இது முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், காதல், இன்பம், செல்வம் ஆகியவற்றிற்கு உரிய கிரகம் என்பதால் அவரின் இந்த உதயம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
சுக்கிர உதயத்தால் பலன்பெறும் ராசிகள்
சனி பகவானின் சொந்த வீடான மகர ராசியில் சுக்கிரன் உதயமாவது என்பது காதல், உறவுகள், தொழில் மற்றும் நிதி ஆகிய அம்சங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். மகர ராசி என்பது உழைப்பு, லட்சியம், ஒழுக்கம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராசியாகும். இந்த ராசியில் சுக்கிரனின் உதயத்தால் 4 ராசிக்காரர்கள் அதிக அளவில் நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
சுக்கிர பகவான் மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக மகர ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. உங்களின் ஆளுமைத் திறன் மேம்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.
இந்த காலகட்டத்தில் மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்கள், முதலீடுகள், தொழில் கூட்டாளிகள் மூலம் எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் இந்த ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் உதயமாகிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த வீடு அதிர்ஷ்டத்தை குறிக்கும் வீடு என்பதால் உங்கள் முயற்சிகளுக்கு கூடுதல் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நிதி ஆதாயங்கள் உண்டாகும். தந்தை வழி உறவுகள் சிறப்பாக அமையும். உயர்கல்வி பயில நினைப்பவர்களின் கனவு நிறைவேறும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறத் துவங்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிர பகவான் தான். சுக்கிரன் உங்கள் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக உங்களை இதுவரை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். வீடு மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி
கன்னி ராசியின் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் உதயமாக இருக்கிறார். இது காதல் மற்றும் குழந்தைகளை குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலத்தில் காதலில் இருப்பவர்களுக்கு சாதகமான நேரம் ஏற்படும். காதல் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த முயற்சிகள் வெற்றிபெறும்.
முதலீடுகள் மற்றும் வணிகம் மூலம் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை விட நிலையான பயனுள்ள முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பணியிடத்திலும் உங்கள் ஆளுமை பிரகாசிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

