MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • வரலட்சுமி விரதம் 2023: வெள்ளி அன்று இவற்றை தானம் செய்யுங்கள்...லட்சுமி கடாட்சம் நிச்சயம்..!!!

வரலட்சுமி விரதம் 2023: வெள்ளி அன்று இவற்றை தானம் செய்யுங்கள்...லட்சுமி கடாட்சம் நிச்சயம்..!!!

நாளை வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நாளில் சில பொருட்களை தானம் செய்தால் அம்மையின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Aug 25 2023, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வரலட்சுமி விரதம் இந்து மத நம்பிக்கைகளின்படி, ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி திதிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் இந்த விரதத்தை மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. இந்த புனித நாள் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புராணங்களின்படி, மகாலட்சுமி சாருமதி என்ற பெண்ணின் கனவில் தோன்றி இந்த விரதத்தின் விதிகளை விளக்கினார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பெண்களும் தங்களால் இயன்றவரை வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கின்றனர். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இதற்கிடையில், இந்த நாளில் தர்மம் செய்தால் லட்சுமி தேவியின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர் பண்டிதர்கள். லட்சுமி தேவியின் வாரமான வெள்ளிக்கிழமையில் மக்கள் தொண்டு செய்தால் லட்சுமி தேவி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து நிரந்தர வசிப்பிடத்தை ஏற்படுத்துவார் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக உங்களுக்கு ஒருபோதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது. இதை முன்னிட்டு வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் அருளைப் பெற என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்ற முழுமையான விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

 

36

செல்வம் பெருக
சிவப்பு நிற வளையல்கள், அழகு சாதனப் பொருட்கள், குங்கும்ம் ஆகியவற்றை ஏழைப் பெண்களுக்கும், புதிதாகத் திருமணமான பெண்களுக்கும் ஆடி வெள்ளிக்கிழமையில் தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். இதனால் உங்கள் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். மேலும், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். இனிபணத்திற்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க: Varalakshmi Pooja 2023 : மாங்கல்ய வரம், மாங்கல்ய பலம் தருவாள் தேவி..!!

46

வெள்ளை நிறம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடி வெள்ளிக்கிழமை லட்சுமி தேவி மற்றும் வீனஸ் கிரகத்திற்கு சிறப்பு நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகள் அல்லது சிறுமிகளுக்கு வெள்ளை நிற இனிப்புகளை தானம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்வதால் சுக்ர கிரக தோஷம் குறையும். அதுபோல் உங்கள் திருமண வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும். வரலட்சுமி தேவியின் ஆசியும் கிடைக்கும்.
 

56

சுக்கிர கிரக தோஷம் வராமல் தடுக்க :
இந்த ஆண்டு உண்மையான ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையன்று சில பொருட்களை தானம் செய்தால் உங்கள் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும். இந்த நன்னாளில் சர்க்கரை, தயிர், உப்பு போன்றவற்றை தானம் செய்வதால் உங்கள் செல்வம் குறையாமல் இருக்கும். இதனால் உங்கள் வீட்டுச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் நலனும் செழிப்பும் அதிகரிக்கும். அதே போல சுக்கிரனின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். உறவினர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: வரலட்சுமி விரதம் 2023: தேவியின் அருள் பெற...வழிபடும் முறை மற்றும் மங்களகரமான நேரத்தை அறிந்து கொள்ளுங்கள்..

66

பட்டுப் புடவைகள்:
அடுத்த வெள்ளிக்கிழமையன்று உங்கள் சகோதரிகள் அல்லது பிற பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு பட்டுப் புடவைகளை பரிசாக வழங்குவது உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். உங்கள் திருமண வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved