- Home
- Astrology
- Vaibhava Lakshmi Raja yoga : லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப்போகுது... வைபவ லட்சுமி ராஜயோகத்தால் பணவரவு பெறும் 4 ராசிகள்!
Vaibhava Lakshmi Raja yoga : லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப்போகுது... வைபவ லட்சுமி ராஜயோகத்தால் பணவரவு பெறும் 4 ராசிகள்!
Venus-Moon Conjunction : ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான வைபவ லட்சுமி ராஜ யோகம் நிகழவுள்ளது. இது சில ராசிகளுக்கு ஒரு பொன்னான காலகட்டமாகும். பலரின் நிதி நிலைமை மேம்படும் நேரமாகவும் இது அமையும்.

வைபவ லட்சுமி ராஜயோகம் தரும் பலன்கள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கிரகங்கள் தங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றும்போது, அதனால் உருவாகும் கிரக சேர்க்கைகள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்த வகையில், நவம்பர் மாதம் பல்வேறு சுப யோகங்கள் உருவாகும் முக்கியமான காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வரிசையில், நவம்பர் 24-ம் தேதி சந்திரன் ரிஷப ராசிக்குள் நுழைய இருக்கிறார். ஏற்கனவே ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுடன் சந்திரன் இணைவதால் வைபவ லட்சுமி ராஜயோகம் உருவாகும் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நவம்பர் 24-ம் தேதி காலை 7:24 மணிக்கு நிகழும் இந்த கிரகச் சேர்க்கை, செல்வம், பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் மதிப்பு அதிகரிப்பது போன்ற பலன்களை வழங்கும் என நம்பப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இருக்கும் என்றாலும், குறிப்பாக மேஷம், மகரம், சிம்மம், துலாம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு இந்த யோகத்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வைபவ லட்சுமி ராஜயோகம் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைக் கொடுக்கக்கூடும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த தயக்கங்கள் விலகி, தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணியிடத்தில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இதுவரை முடிக்க முடியாமல் தள்ளிப்போன வேலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் சூழல் உருவாகலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். சிலருக்கு புதிய வருமானத்திற்கான வழிகளும் திறக்கப்படலாம். ஒட்டுமொத்தமாக, உங்கள் நிதி நிலையை மேம்படுத்துவதற்கான சாதகமான காலமாக இது அமையக்கூடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கலாம். குறிப்பாக வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
பணப் பிரச்சனைகளால் ஏற்பட்ட மனக்கவலைகள் படிப்படியாகக் குறையக்கூடும். நிலுவையில் இருக்கும் பணிகளை முடிப்பதற்கான சூழலும் சாதகமாக அமையும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பான முடிவுகளைப் பெறலாம். உங்களுடைய தொடர் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் காலமாகவும் இது அமையலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு வைபவ லட்சுமி ராஜயோகம் குடும்பத்திலும் பொருளாதாரத்திலும் மகிழ்ச்சியான மாற்றங்களைக் கொண்டு வரலாம். வீட்டில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, உறவினர்களுடன் இணக்கமான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும்.
தொழில் மற்றும் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய ஒப்பந்தங்கள் அல்லது கூடுதல் தொழில் வாய்ப்புகள் மூலம் பணவரவு கிடைக்கலாம். திருமண வாழ்க்கையில் அன்பும் புரிதலும் மேம்படும்.
முதலீடுகள் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கலாம். குழந்தைகளின் கல்வி அல்லது அவர்களின் சாதனைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் கவனம் செலுத்தி வந்தால், உங்களுடைய இலக்குகளை நோக்கி உற்சாகமாகச் செயல்பட முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை அதிர்ஷ்டத்தின் ஆதரவை அதிகரிக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது. நீங்கள் தொடங்கும் காரியங்களில் இருந்த தடைகள் விலகி, வெற்றியை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும்.
அரசுப் பணிக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து, தேர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனநிலை உருவாகலாம். கடந்த காலத்தில் செய்த தவறுகளை உணர்ந்து அவற்றைச் சரிசெய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கக்கூடும். இதனால் நீண்ட நாட்களாக இருந்த பண நெருக்கடிகள் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், நிதி வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுச் செயல்படுவதும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்.













