MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Uranus Transit 2026: கிருத்திகை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சக்தி வாய்ந்த கிரகம்.! 5 ராசிகளுக்கு பொன், பொருள், வசதிகள் குவியப்போகுது.!

Uranus Transit 2026: கிருத்திகை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சக்தி வாய்ந்த கிரகம்.! 5 ராசிகளுக்கு பொன், பொருள், வசதிகள் குவியப்போகுது.!

Uranus Transit in Krittika Nakshatra: ஜோதிடத்தில் முக்கிய கிரகமான யுரேனஸ், கிருத்திகை நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்திற்குள் நுழைகிறது. இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் காத்திருக்கின்றன. 

2 Min read
Author : Ramprasath S
Published : May 12 2026, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Uranus Transit in Krittika Nakshatra
Image Credit : Asianet News

Uranus Transit in Krittika Nakshatra

மே 12, 2026 காலை 5:23 மணிக்கு யுரேனஸ் கிரகம் (அருணன்) கிருத்திகை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்குள் நுழைகிறது. இது ஜூலை 12, 2026 காலை 7:47 மணி வரை இதே நட்சத்திரத்தில் இருக்கும். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள், பண வரவு, மேம்பட்ட ஆரோக்கியம், மகிழ்ச்சி என நல்ல பலன்கள் கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரம் சூரியனின் ஆதிக்கம் கொண்டது என்பதால், இந்த இடமாற்றம் அதிகாரத்தையும், தெளிவான முடிவுகளையும் குறிக்கும். யுரேனஸ் நட்சத்திரப் பெயர்ச்சியால் நற்பலன்களைப் பெறப்போகும் 5 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

யுரேனஸ் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், இந்த காலகட்டம் உங்களுக்கு ஒரு மறுபிறப்பு போன்றது. உங்கள் தோற்றம் மற்றும் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படும். பழைய சிந்தனைகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் புதிய பாதையில் பயணிப்பீர்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த காரியங்கள் திடீரென வேகமெடுக்கும். எதிர்பாராத பணவரவு அல்லது புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.வேலையில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள்.

Related Articles

Related image1
Astrology: சனி அமாவாசையில் அரிய ராஜயோகம்.! இந்த 5 ராசிகளுக்கு ஒரு வாரத்தில் ஜாக்பாட்.!
Related image2
Ketu Peyarchi 2026: கேதுவால் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு கஷ்டகாலம் தொடக்கம்.! வேலை பறிபோகும்.! எச்சரிக்கை.!
36
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்த மாற்றம் நடப்பதால் சமூக அந்தஸ்து உயரும். புதிய மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரத் தொடங்கும். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் தருணம் இது. தொழிலில் புதிய பார்ட்னர்கள் கிடைப்பார்கள். லாபம் ஈட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். இளைஞர்களுக்கு புதிய வேலை அல்லது தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும்.

46
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இந்த மாற்றம் நிகழ்வதால் அதிரடியான நன்மைகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீகப் பயணங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணியிடத்தில் உங்கள் தனித்தன்மை அங்கீகரிக்கப்படும். இன்று முதல் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இளைஞர்கள் தங்கள் குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் செயல்களில் ஈடுபடுவார்கள். கால் பிடிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

56
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

யுரேனஸ் உங்கள் ராசிக்கு நேர் எதிரே களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உறவுகள் மற்றும் கூட்டாளிகளிடையே பெரிய மாற்றம் ஏற்படும். பிசினஸ் பார்ட்னர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்புண்டு. வாழ்க்கைத் துணையின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மக்கள் மத்தியில் உங்கள் புகழ் ஓங்கும். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். நீங்கள் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவுகள் நீண்ட காலத்திற்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். உங்கள் குடும்பத்திலிருந்து வரும் நல்ல செய்திகளால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

66
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் யுரேனஸ் சஞ்சரிக்கிறார். கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். உங்களின் புதுமையான ஐடியாக்கள் பெரும் வெற்றியைத் தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். அவர்களின் பிடிவாத குணம் மாறி, பொறுப்புடன் செயல்படுவார்கள். பங்குச்சந்தை அல்லது முதலீடுகளில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. யோசித்துச் செய்யும் காரியங்கள் வெற்றியில் முடியும். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்கள். ஆன்மிகப் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சனி அமாவாசையில் அரிய ராஜயோகம்.! இந்த 5 ராசிகளுக்கு ஒரு வாரத்தில் ஜாக்பாட்.!
Recommended image2
Ketu Peyarchi 2026: கேதுவால் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு கஷ்டகாலம் தொடக்கம்.! வேலை பறிபோகும்.! எச்சரிக்கை.!
Recommended image3
Shani Transit: ரேவதி நட்சத்திரத்தில் சனி: இந்த 4 ராசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோதிடர்கள்
Related Stories
Recommended image1
Astrology: சனி அமாவாசையில் அரிய ராஜயோகம்.! இந்த 5 ராசிகளுக்கு ஒரு வாரத்தில் ஜாக்பாட்.!
Recommended image2
Ketu Peyarchi 2026: கேதுவால் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு கஷ்டகாலம் தொடக்கம்.! வேலை பறிபோகும்.! எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved