- Home
- Astrology
- Lucky Zodiac Signs : சிம்மத்தில் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி!
Lucky Zodiac Signs : சிம்மத்தில் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி!
Trigrahi Rajayogam Benefits in Tamil : சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரஹி ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றியாகும். அந்த ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

திரிகிரஹி யோகம்:
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சஞ்சரித்து, திரிகிரஹி மற்றும் சதுர்கிரஹி யோகம் அமைக்கின்றன. இது மனித வாழ்க்கை, நாடு மற்றும் உலகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் மாதத்தில் புதன் மற்றும் சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கின்றனர். அதன் பிறகு சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. அப்படி உருவாகும் திரகிரஹி யோகத்தால் சில ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். அந்த ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
கடகம் ராசிக்கான திரகிரஹி ராஜயோக பலன்கள்:
கடக ராசிக்கு திரிகிரஹி யோகம் சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் உங்கள் ராசியின் பணம் மற்றும் பேச்சு இல்லத்தில் உருவாகிறது. எனவே இந்த நேரத்தில் நீங்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். மேலும் இந்த நேரத்தில் நீங்கள் சிக்கியிருந்த பணத்தைப் பெறலாம்.
சிம்ம ராசிக்கான திரகிரஹி ராஜயோக பலன்கள்:
திரிகிரஹி யோக அமைப்பு சிம்ம ராசிக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் உங்கள் ராசியின் திருமண அம்சத்தில் உருவாகிறது. எனவே இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் நீங்கள் சமூகத்தில் மிகவும் பிரபலமடைவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும் மற்றும் கூட்டு வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். சட்ட விஷயங்களில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும் மற்றும் தொழில் வாழ்க்கையில் புதிய சாதனைகள் படைக்கப்படும்.
துலாம் ராசிக்கான திரகிரஹி ராஜயோக பலன்கள்:
திரிகிரஹி யோக அமைப்பு துலாம் ராசிக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த யோகம் உங்கள் சஞ்சார ஜாதகத்தில் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே இந்த நேரத்தில் நீங்கள் முதலீட்டில் லாபம் பெறலாம். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். மாணவர்கள் படிப்பில் நல்ல பலன்களைப் பெறுவார்கள் மற்றும் காதல் உறவுகள் மேம்படும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். முதலீட்டில் லாபம் அடைவீர்கள்.