- Home
- Astrology
- Astrology: இந்த 5 ராசிக்காரங்கள நம்பி ராணுவ ரகசியங்களை கூட சொல்லலாம்.! ரகசியங்களை காப்பதில் வல்லவர்கள்.!
Astrology: இந்த 5 ராசிக்காரங்கள நம்பி ராணுவ ரகசியங்களை கூட சொல்லலாம்.! ரகசியங்களை காப்பதில் வல்லவர்கள்.!
Zodiac signs that keep secrets: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் ஒருவரின் ரகசியத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரகசியங்களை காக்கும் ராசிகள்
ஒருவரின் நம்பிக்கையை பெறுவது என்பது பெரிய விஷயம். நம்முடைய அந்தரங்க விஷயங்கள் மற்றும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நம்பகமான தோழமையை தேடுகிறோம். பொதுவாக அனைவராலும் ரகசியங்களை பாதுகாக்க முடியாது. ஆனால் சில ராசிக்காரர்கள் தங்களிடம் கூறப்படும் ரகசியங்களை காப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக ஐந்து ராசிகளைச் சேர்ந்தவர்கள் ரகசியங்களை இறுதிவரை பாதுகாப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான விசுவாசம் கொண்டவர்கள். இவர்கள் விசுவாசத்தின் சின்னமாக விளங்குகின்றனர். இவர்கள் ஆழமான உணர்ச்சிகளுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் அசைக்க முடியாத உறுதியுடன் விளங்குவார்கள். ரகசியம் காப்பதை கடமையாக மட்டுமல்ல உணர்ச்சிபூர்வமான பிணைப்பாக கருதுகின்றனர். ஒரு ரகசியத்தை இவர்களிடம் சொன்னால் அது அவர்களுடனே புதைக்கப்பட்டு விடும். இவர்கள் ஒருவரின் பலவீனங்களை தெரிந்து வைத்திருந்தாலும் அதை ஒருபோதும் தவறாக பயன்படுத்த மாட்டார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம், பொறுப்பு மற்றும் நடைமுறை சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள். ஒருவரின் ரகசியத்தை காப்பது தன்னுடைய பொறுப்பான கடமை என்று இவர்கள் கருதுகின்றனர். இவர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். நீங்கள் ஒரு ரகசியத்தை இவர்களுடன் பகிர்ந்தால் அது அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். நம்பகத்தன்மையை அதிகமாக மதிப்பதால் இவர்கள் பிறரின் ரகசியங்களை பாதுகாப்பதில் மிகவும் தீவிரமாக செயல்படுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிப்பூர்வமானவர்கள் மற்றும் அக்கறை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை மிகவும் நேசிப்பார்கள். இவர்களிடம் நீங்கள் மனம் விட்டு பேசுவது ஆறுதலாக இருக்கும். உங்கள் உணர்வுகளுக்கு முழுமையாக மதிப்பு கொடுப்பார்கள். உங்கள் ரகசியங்களை பாதுகாத்து அதன் மூலம் அன்பை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களை புண்படுத்தவோ தீங்கு விளைவிக்குவோ இவர்கள் விரும்புவதில்லை. பிறர் கூறும் ரகசியங்களை ஆயுதமாக பயன்படுத்தும் எண்ணம் இவர்களுக்கு வராது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் உள்ளுணர்வு மிக்கவர்கள். மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்கள் பிறரின் துயரங்கள் மற்றும் பிரச்சனைகளை தம் துயரம் போல பாவித்து அவர்களின் உணர்வுகளுடன் கலந்து விடுவார்கள். ரகசியத்தை பாதுகாப்பது என்பது ஒருவரின் மீதுள்ள அனுதாபத்தின் வெளிப்பாடாக கருதுவார்கள். ரகசியங்களைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பார்கள். ஒருவரின் ரகசியத்தை வெளியே சொல்வதால் ஏற்படும் விளைவுகளை இவர்கள் அறிந்திருப்பதால் யாருடைய ரகசியத்தையும் இவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நிலையான தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்கள் கடமைகளை மதித்து செயல்படுபவர்கள். ஒரு ரகசியத்தை காக்க வேண்டும் என்கிற கடமை உணர்வு இவர்களிடம் அதிகம் உண்டு. இவர்கள் மிகவும் நிதானமானவர்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள். ஒரு ரகசியத்தை அறிந்த பிறகு அதை பிறரிடம் வெளிப்படுத்தும் பழக்கம் இவர்களிடம் இருக்காது. இவர்கள் நம்பிக்கையின் மதிப்பை நன்கு அறிந்தவர்கள். எனவே எந்த சூழலிலும் தானாகவே நம்பிக்கையை முறித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

