MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த 5 ராசிக்காரங்க உங்களுக்கு பெஸ்ட் லைஃப் பார்ட்னர்: உங்கள கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பாங்க!

இந்த 5 ராசிக்காரங்க உங்களுக்கு பெஸ்ட் லைஃப் பார்ட்னர்: உங்கள கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பாங்க!

Top 5 Lucky Zodiac Signs Who Can Make The Best Life Partner : சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க கூடிய டாப் 5 ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பு ஆராய்கிறது.

2 Min read
Rsiva kumar
Published : Dec 23 2024, 08:51 AM IST| Updated : Dec 23 2024, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 Best Life Partner Zodiac Signs

Top 5 Best Life Partner Zodiac Signs

Top 5 Best Life Partner Zodiac Signs : பொதுவாகவே ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்கும் சிறந்த குண நலன்கள் என்று இருக்கும். அதன்படி தான் அவர்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்வார்கள். அதோடு, திருமண உறவிலும் அந்த குண நலன்களை வைத்து தான் இணைகிறார்கள். அது சில ராசியினருக்கு அந்த குணங்கள் பிடிக்காததாக இருக்கலாம், சிலருக்கு பிடித்ததாக கூட இருக்கலாம். நட்சத்திரமும் அப்படி தான். ராசி நட்சத்திரங்களின் படி தான் திருமண உறவில் இணைகிறார்கள். அப்படி இணையக் கூடிய ராசியினரில் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க கூடிய டாப் 5 ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் நாம பார்க்க போகிறோம்.

26
Thulam Rasi 2025 New Year Rasi Palan Tamil, Top 5 Best Life Partner Zodiac Signs

Thulam Rasi 2025 New Year Rasi Palan Tamil, Top 5 Best Life Partner Zodiac Signs

துலாம் ராசிக்காரர்கள்:

இவர்கள் இயற்கையாகவே காதலிக்கும் குணம் கொண்டவர்கள். எல்லாவற்றிற்கும் சம உரிமை கொடுப்பார்கள். இந்த குணம் தான் துலாம் ராசியினரை நல்ல வாழ்க்கை துணையாக மாற்றுகிறது. திருமண உறவுகளில் எப்போதும் நேர்மையாக இருப்பார்கள். நியாயமாகவும் இருப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அமைதியாக தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்.

36
Top 5 Lucky Zodiac Signs Who Can Make The Best Life Partner, Dhanusu Rasi

Top 5 Lucky Zodiac Signs Who Can Make The Best Life Partner, Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்கள்:

இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இவர்களது வாழ்க்கை சாகசம் நிறைந்ததாக இருக்கும். எப்போதும் பெரியவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மதிப்பு கொடுப்பார்கள். உறவுகளில் ஆழமாக இருக்கவே விரும்புவார்கள். எந்தளவிற்கு துணையை நேசிக்கிறார்களோ அதே அளவிற்கு அவர்களும் நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். யாருக்கும் விசுவாசமாக இருக்க கூடிய ராசியில் தனுசு ராசிக்காரர்கள் ரொம்பவே முக்கியமானவர்கள். யாரையும் கஷ்டப்படுத்த விரும்பமாட்டார்கள். இந்த குணங்கள் அவர்களை நல்ல வாழ்க்கை துணையாக மாற்றும். இவர்களை திருமணம் செய்து கொள்ள ஒவ்வொரு ராசியினரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே ஒருவரால் தனுசு ராசியில் பிறக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு ராசி தான் இந்த தனுசு ராசி.

46
Top 5 Lucky Zodiac Signs That Make The Best Life Partner Predictions

Top 5 Lucky Zodiac Signs That Make The Best Life Partner Predictions

மீன ராசி:

இவர்களிடம் நல்ல புரிதல் இருக்கும். இவர்கள் காதல் செய்யவே அதிகம் விரும்புவார்கள். துணையை காதலிப்பார்கள். துணையின் ஆழமான காதலை நேசிப்பார்கள். வாழ்க்கை துணையின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க கூடியவர்கள்.

2025 இந்த 3 ராசிகளுக்கு பொற்காலமான ஆண்டு; கோடீஸ்வர யோகம் உண்டு!

மீன ராசிக்கு ஏழரையின் 2ஆம் கட்டம் – 2025 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன், பரிகாரம் இதோ!

 

56
Top 5 Best Life Partner Zodiac Signs

Top 5 Best Life Partner Zodiac Signs

ரிஷபம் ராசி:

இவர்கள் எப்போதும் வாழ்க்கை துணைக்கு விசுவாசமாக இருக்க விரும்புவார்கள். உறவுகளில் நம்பிக்கை கொண்டவர்கள். மற்ற ராசியினரை விட சிறந்த வாழ்க்கைத் துணையாக இருக்க விரும்புவார்கள். அன்பை வெளிப்படுத்துவதில் இவர்கள் சிறந்தவர்கள்.

2025ல் ஜாம் ஜாமுன்னு வாழப்போகும் ராசிக்காரங்க யார்? புத்தாண்டில் கல்யாணம் கன்ஃபார்ம்!
 

66
Best Life Partner Zodiac Signs, Kadagam Rasi, Cancer Zodiac Signs

Best Life Partner Zodiac Signs, Kadagam Rasi, Cancer Zodiac Signs

கடக ராசி:

மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். இவர்களிடம் இரக்க குணம் இருக்கும். இவர்கள் காதலில் விழுந்தால் வாழ்க்கை துணையை சமநிலைப்படுத்த விரும்புவார்கள். அன்பையும், பாதுகாப்பான சூழலையும் கொடுப்பார்கள். இவர்கள் வாழ்க்கை துணையாக கிடைத்தால் சண்டை சச்சரவு இருக்காது.

கும்ப ராசிக்கு கஷ்டங்கள் நிறைந்த ஆண்டு: 2025 சனி பெயர்ச்சி என்ன செய்யும்? பலன், பரிகாரம் இதோ!
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved