- Home
- Astrology
- Astrology: எப்போதும் வெற்றியை மட்டுமே ருசிக்கும் 4 ராசிக்காரர்கள்.! தோல்வி என்பது இவர்கள் அகராதியிலேயே கிடையாதாம்.!
Astrology: எப்போதும் வெற்றியை மட்டுமே ருசிக்கும் 4 ராசிக்காரர்கள்.! தோல்வி என்பது இவர்கள் அகராதியிலேயே கிடையாதாம்.!
zodiac signs that will succeed in any field: சில ராசிகளைச் சேர்ந்தவர்கள் எந்த துறையை எடுத்தாலும் அதில் வெற்றி பெற்றவர்களாக மாறுவார்களாம். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

எந்த துறையிலும் வெற்றி பெறும் 4 ராசிகள்
ஒருவரின் வெற்றி என்பது விடாமுயற்சி, கடின உழைப்பு, சரியான திட்டமிடல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. இருப்பினும் ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே அவர்களின் குணாதிசயங்கள் காரணமாக எந்த துறையை எடுத்தாலும் அதில் வெற்றி பெறக்கூடிய திறன்களை கொண்டுள்ளனர். அந்த ராசிகள் மற்றும் அவர்களின் வெற்றிக்கு காரணமாகும் குணங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியை சூரிய பகவான் ஆள்.கிறார் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்பு கொண்டவர்கள், தைரியமானவர்கள் மற்றும் நம்பிக்கையுடன் விளங்குபவர்கள். இவர்கள் அதீத ஆற்றலுடன் விளங்குவார்கள். எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுப்பார்கள். இவர்களின் மன உறுதி காரணமாக இவர்கள் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களும் வெற்றி பாதையை நோக்கிச் செல்லும்.
இவர்களிடம் இருக்கும் ஆளுமைத் திறன் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும். ஒரு குழுவை எளிதாக வழிநடத்திச் செல்லும் ஆற்றலுடன் விளங்குவார்கள். தோல்வியை தங்கள் அகராதியிலேயே வைத்திருக்க மாட்டார்கள். எதிலும் வெற்றியை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். எனவே இவர்கள் எந்த துறையை எடுத்தாலும் அதில் வெற்றியாளர்களாக மாறுகின்றனர்.
ரிஷபம்
ரிஷப ராசியை சுக்கிர பகவான் ஆள்கிறார். எனவே இவர்கள் நிலைத்தன்மையுடனும், பொறுமையுடனும் செயல்படக் கூடியவர்கள். இவர்களின் மிக முக்கிய பலம் விடாமுயற்சி ஆகும். மெதுவாக செயல்பட்டாலும் உறுதியுடன் முன்னேறி, நிலையான வெற்றியைப் பெறுவார்கள்.
இவர்கள் மிகவும் பொறுமைசாலிகள். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து முடிவுகளை எடுப்பார்கள். இவர்களின் திட்டமிடல் மற்றும் நடைமுறை சிந்தனையுடன் கூடிய அறிவு நிதி சார்ந்த துறைகள் உட்பட எந்த துறையிலும் இவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது.
கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். புதன் பகவான் வணிகத்திற்கு காரகர் என்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு வணிகம் எளிதாக இருக்கும். மேலும் புதன் பகவான் பேச்சு, படிப்பு, அறிவு, புத்திசாலித்தனத்தின் காரகராகவும் விளங்குகிறார். எனவே கன்னி ராசிக்காரர்கள் எந்த செயலை எடுத்தாலும் பகுப்பாய்வு செய்து சரியாக திட்டமிடுவதில் வல்லவர்களாக விளங்குகின்றனர்.
எந்த செயலை எடுத்தாலும் அதை ஆராய்ந்து நிதானமாக முடிப்பார்கள். இவர்கள் மருத்துவத்துறை, கல்வித்துறை, எழுத்து மற்றும் சேவை செய்யும் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியை செவ்வாய் பகவான் ஆள்கிறார். விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே கடின உழைப்பாளிகள். எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவே அதற்கான திட்டங்களை உருவாக்கி அந்த இலக்கை நோக்கி அடைய போராடுவார்கள். இவர்களின் கடின உழைப்பு, போராட்ட குணம், தீவிரமான ஆற்றல் இவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது.
பிற ராசிகள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் அசைக்க முடியாத உறுதியுடன் பிறந்தவர்கள். இவர்களின் வேகமாக முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆற்றல், தைரியம், துணிச்சல் இவர்களை எப்போதும் வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்கிறது.
தனுசு: குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆராய்ச்சியாளர், பேராசிரியர், வழக்கறிஞர் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
மகரம்: சனி பகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் திடமான மனம், நல்ல திறமை படைத்தவர்கள். கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள். இவர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)