- Home
- Astrology
- Astrology: சமயம் பார்த்து பழிவாங்கும் 4 நட்சத்திரங்கள்! இவங்ககிட்ட எப்பவும் உஷாரா இருங்க!
Astrology: சமயம் பார்த்து பழிவாங்கும் 4 நட்சத்திரங்கள்! இவங்ககிட்ட எப்பவும் உஷாரா இருங்க!
Astrology: ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு சுவாபம் உண்டு. சில குறிப்பிட்ட 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். இவை எந்தெந்த நட்சத்திரங்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் பார்த்து பழிவாங்கும் 4 நட்சத்திரங்கள்
ஜோதிர சாஸ்திரத்தில் ராசிகளை போன்று ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு குணம், நிலைப்பாட்டை கொண்டிருக்கும். குறிப்பாக மகம் நட்சத்திரம், ஆயில்யம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடும் கோபம் கொண்டவர்கள். பிறர் தங்களை திட்டும்போது, அவமானப்படுத்தும்போது அமைதியாக இருந்து விட்டு சமயம் பார்த்து பழிவாங்குவார்கள். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பர்ப்போம்.
மகம் நட்சத்திரம்
ஜோதிட வல்லுநர்கள் கூற்றுப்படி, மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் ஆழமான சிந்தனைத் திறன் கொண்டவர்கள் ஆவர். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் மென்மையாகவும், நட்பாகவும் பழகக்கூடியவர்களாகத் தெரிந்தாலும், தங்களது மனதிற்குள் பல ரகசியங்களையும் எண்ணங்களையும் ஒளித்து வைத்திருப்பார்கள். யார் தங்களிடம் எப்படி நடந்துகொண்டார்கள், யார் தங்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்தார்கள், யார் தொந்தரவு கொடுத்தார்கள் என அனைத்தையும் மிகத் துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். எனவே, இவர்களைக் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது இவர்களுடன் பகைத்துக் கொள்வதோ நல்லதல்ல என்று ஆன்மீகப் பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை மிகவும் கூர்மையாகக் கவனிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் தங்களுடைய உண்மையான உணர்ச்சிகளை அவ்வளவு எளிதாக வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒருவரைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகுதான், அவர்கள் குறித்த இறுதி முடிவுக்கு வருவார்கள். யாராவது தங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை உணர்ந்தால், உடனே கோபப்பட்டு எதிர்வினையாற்றாமல், அவர்களைப் பழிதீர்க்கச் சரியான சந்தர்ப்பத்திற்காகப் பொறுமையுடன் காத்திருப்பார்கள்.
கேட்டை நட்சத்திரம்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது சுயமரியாதைக்கு எப்போதும் முதலிடம் கொடுப்பார்கள். தங்களது கௌரவத்திற்கு ஏதேனும் பங்கம் விளைந்தால், அதனை அவர்கள் அத்தனை சுலபமாக மறந்துவிட மாட்டார்கள். ஆனால், இவர்கள் எடுத்தவுடனேயே நேருக்கு நேராக சண்டைக்குச் செல்லாமல், தங்களது அசாத்திய திறமையால் மென்மேலும் வளர்ந்து காட்டி, எதிரிகளுக்குப் புத்தி புகட்ட நினைப்பார்கள். இவர்களுடைய அசுர வளர்ச்சி மற்றும் வெற்றிதான், பல நேரங்களில் இவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்குச் சரியான பதிலாக அமையும்.
அனுஷம் நட்சத்திரம்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையான நட்புக்காக தங்களது உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால், தாங்கள் உயிராக நம்பியவர்களே தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார்கள் என்பதை அறியும்போது, அவர்கள் மனதளவில் முற்றிலுமாக உடைந்துபோய்விடுவார்கள். அந்தப் பெரும் வலியை வெளியில் காட்டிக்கொள்ளாமல், தங்களுக்குள்ளேயே வைத்துப் புழுங்குவார்கள். அதற்கான காலம் கனிந்து வரும்போது, தங்களது தனித்துவமான திறமையாலோ அல்லது தீர்க்கமான முடிவுகளாலோ தங்களைச் சிறந்தவர்களாக நிரூபிக்கத் தீவிர முயற்சி செய்வார்கள்.

