- Home
- Astrology
- Today Chandrashtamam: இன்று எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் ? அவசரப்படாதீங்க..இந்த விஷயத்தில் மட்டும் உஷார்!
Today Chandrashtamam: இன்று எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் ? அவசரப்படாதீங்க..இந்த விஷயத்தில் மட்டும் உஷார்!
Today Chandrashtama: இன்று எந்த ராசிக்கு சந்திராஷ்டமம். ஜோதிட நம்பிக்கையின்படி எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? சந்திராஷ்டமம் என்றால் என்ன, எதை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்று காலண்டரில் பார்த்ததும் பயப்படுகிறீர்களா? அல்லது அந்த நாட்களில் முக்கியமான வேலைகளைத் தொடங்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கிறதா? அப்படியானால், சந்திராஷ்டமம் என்றால் உண்மையில் என்ன? யாருக்கு எப்போது வருகிறது, இந்த காலத்தில் எவற்றில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
ஜோதிட நம்பிக்கையின்படி, ஒருவர் பிறந்தபோது சந்திரன் எந்த ராசியில் இருந்ததோ அதுவே அவரது ஜென்ம ராசி எனப்படுகிறது. இந்த ஜென்ம ராசிக்கு 8-வது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நேரமே சந்திராஷ்டமம்.
அஷ்டமம் என்பது எட்டாவது இடத்தைக் குறிக்கிறது. சந்திரன் ஒரு ராசியில் சுமார் 2 1\4 நாட்கள் சஞ்சரிப்பதால், பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரருக்கும் மாதத்திற்கு சுமார் இரண்டே கால் நாட்கள் சந்திராஷ்டம காலம் ஏற்படும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
உதாரணமாக, ஒருவர் மேஷ ராசியில் பிறந்திருந்தால், அவருக்கு 8-வது ராசியாக விருச்சிகம் வருகிறது. எனவே, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம காலம் என ஜோதிட நம்பிக்கையில் கருதப்படுகிறது.
சந்திராஷ்டமம் ஏன் முக்கியம்?
ஜோதிடத்தில் சந்திரன் மனம், சிந்தனை மற்றும் உணர்வுகளின் காரகன் எனக் கருதப்படுகிறார். ஜென்ம ராசிக்கு 8-வது இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில், மனதில் குழப்பம், சஞ்சலம், எரிச்சல், பொறுமையின்மை போன்ற உணர்வுகள் அதிகரிக்கலாம் என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.
அவசர முடிவுகளைத் தவிர்ப்பது
சந்திராஷ்டம நாட்களில்,
- மனதை அமைதியாக வைத்துக்கொள்ளலாம்
- அவசர முடிவுகளைத் தவிர்ப்பது
- தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது
- முக்கிய விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது
- பயணங்களில் கவனமாக இருக்கலாம்.
- பணம் கொடுக்கல் வாங்கலில் அவசரப்படாமல் இருக்கலாம்.
- முக்கிய ஆவணங்களைச் சரிபார்த்து கையெழுத்திடலாம்.
- போன்றவற்றை கடைப்பிடிக்கலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இன்று சந்திராஷ்டமம் யாருக்கு?
இன்றைய சந்திர ராசி: மிதுனம்
இன்றைய சந்திராஷ்டம ராசி: விருச்சிகம்
அதாவது, விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். குறிப்பாக அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சந்திராஷ்டமக் கணக்கில் வருவதாக பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.
ஜோதிட நம்பிக்கையின்படி, இன்று விருச்சிக ராசிக்காரர்கள் அவசர முடிவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள், சுப காரியங்கள், முக்கியமான புதிய தொடக்கங்கள் , முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
எந்த விஷயத்தில் மட்டும் உஷார்?
சந்திராஷ்டம காலம் என்றாலே பயப்பட வேண்டியதில்லை. ஆனால் பேச்சிலும், முக்கிய முடிவுகளிலும் மட்டும் கூடுதல் நிதானம் தேவை என்று ஜோதிடப் பாரம்பரியத்தில் கூறப்படுகிறது. சிறிய விஷயத்திற்குக் கூட கோபமாகப் பேசுவது, யோசிக்காமல் உடனடியாக பதில் கொடுப்பது, அவசரமாக முடிவெடுப்பது போன்றவை பின்னர் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.
குறிப்பாக குடும்பம், பணம், வேலை தொடர்பான விஷயங்களில் அவசரப்படாமல் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புதிய காரியங்களைத் தொடங்கலாமா?
சந்திராஷ்டமம் வந்துவிட்டதே புதிய காரியத்தைத் தொடங்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஜோதிட மரபின்படி, சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான சுப காரியங்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது வழக்கமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக திருமணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு, பால் காய்ச்சுதல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் தேர்வு செய்யும்போது, சந்திராஷ்டமத்தையும் சிலர் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.
12 ராசிகளுக்கும் சந்திராஷ்டமம் எப்படி?
ஜென்ம ராசியும், சந்திராஷ்டமம் ஏற்படும் ராசியும்
- மேஷம் - விருச்சிகம்
- ரிஷபம் - தனுசு
- மிதுனம் - மகரம்
- கடகம் - கும்பம்
- சிம்மம் - மீனம்
- கன்னி - மேஷம்
- துலாம் - ரிஷபம்
- விருச்சிகம் - மிதுனம்
- தனுசு - கடகம்
- மகரம் - சிம்மம்
- கும்பம் - கன்னி
- மீனம் - துலாம்

