- Home
- Astrology
- கோட்டையை பிடிக்கும் ராசிக்காரர்கள் யார்? அரசியலில் ஜொலிக்கும் டாப் 3 ராசிகள்.. நாளை யாருக்கு ஜாக்பாட்!
கோட்டையை பிடிக்கும் ராசிக்காரர்கள் யார்? அரசியலில் ஜொலிக்கும் டாப் 3 ராசிகள்.. நாளை யாருக்கு ஜாக்பாட்!
Top 3 Zodiac Signs to Rule Politics: தமிழகத்தில் நாளை (மே 4) சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஜோதிடரீதியாக அரசியலில் கோட்டையை பிடிக்கபோகும் டாப் 3 ராசிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

கோட்டையை பிடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?
தமிழகத்தில் தேர்தல் திருவிழா கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 4) எண்ணப்பட உள்ளன. ஆகவே தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆளுமா? இல்லை அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? இல்லை தவெக அதிசயம் நிகழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் முடிவுகள் ஒருபக்கம் இருக்க, அரசியல் களத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்? என்பது குறித்து ஜோதிடரீதியாக இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது?
ஜோதிடசாஸ்திரத்தின்படி அரசியலில் ஜொலிக்க அல்லது ஆதிக்கம் செலுத்த அதிகாரமிக்க சூரியன், சனி மற்றும் துணிச்சலுக்கு உரித்தான செவ்வாய் ஆகிய கிரகங்களின் பலம் மிகவும் முக்கியம் ஆகும். 2026 மே மாத கிரக நிலவரப்படி அரசியலில் ஜொலிக்கப்போகும் டாப் 3 ராசிகள் மேஷம், சிம்மம் மற்றும் மகரம் ஆகும். இந்த ராசிக்காரர்கள் அரசியலில் எப்படி ஜொலிப்பார்கள்? என்பது குறித்து பார்ப்போம்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் எந்த நிலையிலும் அஞ்சாத குணம் கொண்டவர்கள். சூரியன் உங்கள் ராசியில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதும், குருவின் சாதகமான பார்வையும் அரசியலில் உங்களுக்கு திடீர் திருப்பங்களையும், எதிர்பாராத உயர்வுகளையும் கொடுக்கும். இவர்கள் கடும் போட்டியிடைக்கிடையே அரசியலில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவார்கள். இளைஞர்களின் ஆதரவு இவர்களுக்கு மிகப்பெரும் பலமாக அமையும்.
மகரம்
அரசியலில் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவைப் பெற சனியின் அருள் அவசியம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. மகர ராசியின் அதிபதி சனி பகவான் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே மக்கள் செல்வாக்கு இருக்கும். சனியின் வலுவான நிலையால் மகர ராசிக்காரர்கள் கடந்த காலங்களில் அரசியலில் செய்த உழைப்பிற்கான பலனை இப்போது முழுமையாக பெறுவார்கள். நீண்டகால போராட்டத்துக்கு பிறகு வெற்றியை ஈட்டுவார்கள். தங்களது நிர்வாகத் திறமையால் எதிரிகளை வீழ்த்தி வெற்றியை காண்பீர்கள்.
சிம்மம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி சிம்ம ராசியின் அதிபதி அதிகாரம், செல்வாக்கை குறிக்கு சூரிய பகவான் ஆவார். மே மாத தொடக்கத்தில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகாரப் பதவி தேடி வரும். அரசியலில் தலைமைப் பொறுப்பு இவர்களுக்கு தேடி வரும். இவர்களின் சொல்லும், செயலுக்கும் மக்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். அரசியலில் ஒருமுறை செல்வாக்கு இழந்தாலும், மறுமுறை அதை பெறும் யோகம் இந்த ராசியினருக்கு உண்டு.
நாளை எந்த வேட்பாளர்களுக்கு அதிர்ஷ்டம்?
அரசியலில் வெற்றி பெற ஒருவரது ஜாதகத்தில் 10-ம் இடம் (தொழில்/கர்ம ஸ்தானம்) மற்றும் 11-ம் இடம் (லாப ஸ்தானம்) வலுவாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார் என்பதைப் பொறுத்து தனிப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு அமையும் எனவும் ஜோதிட சாஸ்திரங்களின் கணிப்பாக உள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். அரசியலில் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே. மக்கள் முடிவெடுத்தால் யாரை வேண்டுமானலும் ஆட்சியில் வைக்கலாம். இல்லையெனில் தூக்கி எறியலாம்.

