- Home
- Astrology
- Astrology: ஒரே நேரத்தில் ஒன்று சேரும் 3 கிரகங்கள்! பணமழையில் நனையப்போகும் அந்த 4 ராசிகள்! உங்க ராசி இருக்கா பாருங்க?
Astrology: ஒரே நேரத்தில் ஒன்று சேரும் 3 கிரகங்கள்! பணமழையில் நனையப்போகும் அந்த 4 ராசிகள்! உங்க ராசி இருக்கா பாருங்க?
Trigrahi Yog: ஜூலை மாதத்தில் கடக ராசியில் குரு, சூரியன், புதன் உள்ளிட்ட 3 முக்கிய கிரகங்களின் சேர்க்கை நிகழ உள்ளது. இதன் காரணமாக திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

ஒன்று சேரும் 3 கிரகங்கள்
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் சுப மற்றும் அசுப யோகங்கள் மூலம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் கடக ராசியில் குரு, சூரியன், புதன் உள்ளிட்ட 3 முக்கிய கிரகங்களின் சேர்க்கை நிகழ உள்ளது. இதன் காரணமாக திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. ஏற்கனவே கடக ராசியில் குரு பகவானும், புதனும் பயணித்து வரும் நிலையில் வரும் ஜூலை 16ம் தேதி சூரியனும் அதே ராசிக்குள் நுழைகிறார். இந்த யோகத்தால் 12 ராசிகளுமே பலன்களைப் பெற்றாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3வது வீட்டில் இந்த யோகம் அமைவதால், உங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய நன்மைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இல்லாத நல்ல முன்னேற்றமும், எதிர்பாராத லாபமும் கிடைக்கும். உங்களது தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 10வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாவதால், உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற இரட்டிப்பு பலன் கிடைக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி, கணிசமான தொகையை உங்களால் சேமிக்க முடியும். நிதி நிலையை உயர்த்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் நினைத்த காரியங்களைச் சாதிக்கலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் செல்வமும், வெற்றியும் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் 8வது வீட்டில் இந்த யோகம் ஏற்படுவதால், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு, நிதி நிலைமை முன்பை விட வலுவடையும். இந்த காலகட்டத்தில் சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து, முழு உழைப்பைக் கொடுத்தால் தொட்டதெல்லாம் துலங்கும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தூரத்துப் பயணங்கள் மூலம் நல்ல பண வரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 7வது வீட்டில் திரிகிரக யோகம் கூடுவதால், உங்களுக்குப் பல வழிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிலுவையில் இருந்த பழைய வேலைகள் மற்றும் அரசாங்க காரியங்கள் எளிதாக முடிவடையும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் (Contracts) கையெழுத்தாகும். மொத்தத்தில், நீங்கள் தொடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.

