- Home
- Astrology
- Tamil Puthandu Rasi Palan: மேஷ ராசிக்கு யோகமான காலம்.! சவால்கள் கைகூடும்.! யோகங்களும் வாய்ப்புகளும் நிறைந்த வருடம்.!
Tamil Puthandu Rasi Palan: மேஷ ராசிக்கு யோகமான காலம்.! சவால்கள் கைகூடும்.! யோகங்களும் வாய்ப்புகளும் நிறைந்த வருடம்.!
2026 பராபவ வருடம் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆரம்பத்தில் சில சவால்களைக் கொடுத்தாலும், மே மாதத்திற்கு பிறகு முன்னேற்றம் தொடங்கும். நிதிநிலை சீராகி, அலுவலகத்தில் உயர்வு, குடும்பத்தில் மகிழ்ச்சி என வருடத்தின் பிற்பகுதியில் அதிர்ஷ்டமும் யோகமும் அதிகரிக்கும்.

மேஷ ராசி: தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் – 2026 (பராபவ வருடம்)
2026ஆம் ஆண்டான பராபவ வருடம், மேஷ ராசிக்காரர்களுக்கு சவால்களும் சாதனைகளும் கலந்து வரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் ஆரம்பத்தில் சில மந்தநிலைகள் மற்றும் தடைதாமதங்கள் இருந்தாலும், மனஉறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் அனைத்தையும் சமாளிக்க முடியும். குறிப்பாக மே மாதத்தின் நடுப்பகுதியிற்குப் பிறகு நிலைமை மெல்ல மாறி, வாழ்க்கையில் முன்னேற்றம் காணத் தொடங்குவீர்கள். நவம்பர் மாதத்திலிருந்து அதிர்ஷ்டம் மற்றும் யோகங்கள் அதிகரித்து, நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கைக்கு வர ஆரம்பிக்கும்.
நிதிநிலை சீராகும்.! லாபம் கதவை தட்டும்.!
பணவரவின் விஷயத்தில் மெதுவான வளர்ச்சி இருக்கும். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், வருடம் செல்ல செல்ல வருமானம் உயர்ந்து நிதிநிலை சீராகும். வீட்டு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய உபகரணங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் பயணங்கள் வியாபாரத்தில் லாபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மே மாதம் அருகில் வெளிநாட்டிலிருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தடைகள் காணாமல் போகும்.!
அலுவலகத்தில் நீண்டநாளாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு அல்லது நன்மைகள் விரைவில் கிடைக்கும். உங்களின் திறமைகள் கவனிக்கப்படும். மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டு போட்டிகளிலும் சாதிக்கும் வாய்ப்பு இருக்கும். பெண்களுக்கு ஆரம்பத்தில் சில தடைகள் இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதியில் முன்னேற்றம் தெளிவாகக் காணப்படும்.
இனி யார்பாத்தாலும் லவ்வுதான்.! கோவமே வராது.!
குடும்ப வாழ்க்கையில் சில விஷயங்கள் தாமதமாக நடந்தாலும், முடிவு நல்லபடியாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் நல்ல புரிதல் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்து, மனநிறைவு கிடைக்கும். பழைய உறவுகள் மீண்டும் இணையும் வாய்ப்பு உள்ளது, குறிப்பாக ஐப்பசி மாதத்தில் பழைய நட்புகள் திரும்பி மகிழ்ச்சி தரும்.
வழக்குகள் சாதகமாக முடிய வாய்ப்பு.!
2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டால், வெற்றி உறுதி. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஆரம்ப முயற்சிகள் வெற்றியடையும். புதிய வீடு கட்டுதல் அல்லது குடியேறுதல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடைபெறலாம். நீண்டநாள் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
சற்று பொறுமையும் மனஉறுதியும் தேவை.!
குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை அவசியம். மொத்தத்தில், சற்று பொறுமையும் மனஉறுதியும் இருந்தால், இந்த ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு வளர்ச்சியும் நிறைவையும் தரும் ஆண்டாக அமையும்.
சிந்தித்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.!
மொத்தத்தில் 2026 பராபவ வருடம், மேஷ ராசிக்காரர்களுக்கு ஆரம்பத்தில் சற்று சோதனைகள் இருந்தாலும், பின்னர் முன்னேற்றம் மற்றும் வெற்றியைத் தரும் ஆண்டாக அமையும். பொறுமையும் மனஉறுதியும் இருந்தால் தடைகள் அனைத்தையும் கடந்து நிலை உயர முடியும். வருடத்தின் பிற்பகுதியில் அதிர்ஷ்டமும் வாய்ப்புகளும் அதிகரித்து, வாழ்க்கையில் நிலைத்தன்மை உருவாகும். குடும்ப ஆதரவும் நண்பர்களின் ஒத்துழைப்பும் உங்கள் பலமாக இருக்கும். சிந்தித்து செயல்பட்டால், இந்த ஆண்டு உங்களுக்கு நிறைவும் நிம்மதியும் தரும் ஒரு சிறப்பான காலமாக மாறும்.

