MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சூரியன்-சுக்கிரன் சேர்க்கை; இடியாப்ப சிக்கலில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான்; கஷ்ட காலம் ஆரம்பம்!

சூரியன்-சுக்கிரன் சேர்க்கை; இடியாப்ப சிக்கலில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான்; கஷ்ட காலம் ஆரம்பம்!

Sun Venus Conjunction in Pisces in Tamil : மீன ராசியில் எதிரி கிரகங்களான சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ உள்ள நிலையில் மார்ச் மாதத்தில் இந்த ராசியினருக்கு கஷ்ட காலம் ஆரம்பம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 03 2026, 10:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sun Venus Conjuction
Image Credit : our own

Sun Venus Conjuction

பொதுவாகவே ஜோதிடத்தில் சந்திரன், சூரியன், சனி, செவ்வாய், குரு, ராகு, கேது, புதன் மற்றும் சுக்கிரன் என்று மொத்தமாக 9 கிரகங்கள் உள்ளன. இந்த 9 கிரகங்களும் நட்பு கிரகங்கள், பகை கிரகங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கிரக நிலைகளின் பெயர்ச்சிகளின் அடிப்படையில் ஒரு ராசியில் ஒரு சில கிரகங்கள் இணைந்தால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும், சில ராசிகளுக்கு கெடு பலன்களும் உண்டாகும்.

அதன்படி, வரும் மார்ச் 2ஆம் தேதி மீன ராசிக்கு சுக்கிர பகவானும், 15ஆம் தேதி சூரியனும் பெயர்ச்சியாகின்றன. இந்த பெயர்ச்சியின் மூலமாக மீன ராசியில் எதிரி கிரகங்களான சுக்கிரன் மற்றும் சூரியன் இணைகின்றன. இந்த சேர்க்கையானது சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறது. இந்த சேர்க்கையின் மூலமாக யார் யாருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

26
மேஷ ராசி...
Image Credit : our own

மேஷ ராசி...

மேஷ ராசிக்கு 12ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையின் காரணமாக வரும் மார்ச் மாதத்தில் மேஷ ராசியினருக்கு செலவு அதிகமாகும். பண வரவில் சிக்கல் ஏற்படும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சமூகத்தில் பேரும், புகழும் குறையக் கூடும். தொழில், வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படும்.

36
சிம்ம ராசி..
Image Credit : Asianet News

சிம்ம ராசி..

இந்த 2 கிரகங்களின் சேர்க்கை காரணமாக சிம்ம ராசிக்கு பண இழப்பு ஏற்படக் கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படும். பண இழப்பு ஏற்படக் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழல் ஏற்படும்.

46
கன்னி ராசி...
Image Credit : Asianet News

கன்னி ராசி...

கன்னி ராசியைப் பொறுத்த வரையில் எதிரிகளின் தொல்லை இருக்கும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படக் குடும். கொடுத்த பண திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்படக் கூடும். உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சூரிய பகவான் வழிபாடு தீராத கஷ்டங்களை தீர்க்கும்.

56
விருச்சிக ராசி..
Image Credit : Gemini

விருச்சிக ராசி..

விருச்சிக ராசியைப் பொறுத்த வரையில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை காரணமாக குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படக் கூடும். பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படக் கூடும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். நண்பர்கள் எதிரிகளாக மாறுவார்கள். பணத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட வேண்டிய சூழல் உருவாகும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

66
மகர ராசி...
Image Credit : Social Media

மகர ராசி...

மகர ராசியைப் பொறுத்த வரையில் சுக்கிரன் மற்றும் சூரியனின் பெயர்ச்சி எடுத்த காரியங்களின் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படக் கூடும். நண்பர்களின் உதவி கிடைக்காமல் போகலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். கடினமாக உழைக்க வேண்டி வரலாம். பண இழப்பு ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையை புரிஞ்சவன் பிஸ்தா தான்! இவர்களின் கணக்கை யாராலும் வெல்ல முடியாது; பிப்ரவரி மாத பலன்!
Recommended image2
வேலையில் விஸ்வரூபம் எடுக்கும் சிம்மம்! கூடவே வரும் பஞ்சாயத்து; தப்பிக்க செய்ய வேண்டியது என்ன?
Recommended image3
கடக ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026: கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னி வெடி! டர்னிங் பாய்ண்ட் எப்போதும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved