- Home
- Astrology
- சூரிய பெயர்ச்சி 2026: அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்! தப்பிப்பது எப்படி?
சூரிய பெயர்ச்சி 2026: அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்! தப்பிப்பது எப்படி?
Sun Transit 2026: சூரிய பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் 3 ராசிகளுக்கு 30 நாட்கள் கஷ்ட காலம் ஆரம்பித்துள்ளது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சி 2026
ஜோதிடசாஸ்திரத்தின்படி நவகிரகங்களின் தலைவனாக, ஆன்ம காரகனாக சூரிய பகவான் விளங்குகிறார். ஒருவருடைய வீரம், அதிகாரம், புகழ் மற்றும் ஆற்றலுக்கு சூரியனின் பலமே அடிப்படையாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு அனைத்து ராசிகளிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு இது யோகமாக அமைந்தாலும், சில ராசியினருக்கு கஷ்ய காலமாக மாறுகிறது.
அந்த வகையில், கடந்த மே 15 ஆம் தேதி சூரிய பகவான் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்குள் பிரவேசித்தார். வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை அவர் இதே ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த சூரிய பெயர்ச்சியால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு கடுமையான கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய அந்த 3 ராசிகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த சூரிய சஞ்சார காலத்தில் தங்களின் தொழில் மற்றும் குடும்ப விஷயங்களில் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். பணியிடங்களில் சக ஊழியர்களை அளவுக்கு அதிகமாக நம்புவதை தவிர்க்கவும். உங்களுக்கு எதிரான மறைமுக சதி அல்லது எதிர்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் மன உளைச்சல் உங்கள் வேலைத்திறனை பாதிக்கலாம். உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் பொறுமை அவசியம். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் அல்லது முயற்சிகளில் முட்டுக்கட்டைகள் வரலாம். லாபம் குறைய வாய்ப்புள்ளதால் நிதானம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே.. இந்த காலகட்டம் சற்றே சோதனையான ஒன்றாக அமையக்கூடும். மனரீதியாகவும், நிதி ரீதியாபவும் சில நெருக்கடிகளை சந்திக்கலாம். உடன்பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் வந்து போகலாம். காதலில் இருப்பவர்களுக்குள் தற்காலிகமாக கருத்து வேறுபாடுகள் அல்லது பிரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வார்த்தைகளில் கவனம் வையுங்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. எதிர்பாராத மருத்துவச் செலவுகள் பட்ஜெட்டை பதம் பார்க்கும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம். வியாபாரத்தில் பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்ப்பது நஷ்டத்தைத் தடுக்கும். பணியிடங்களில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படக்கூடும் என்பதால் விழிப்புடன் இருக்கவும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் தங்களின் உடல்நலம் மற்றும் பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விவரிக்க முடியாத சோர்வும், பலவீனமும் உங்களை ஆட்கொள்ளலாம். குறிப்பாக வயிறு தொடர்பான உபாதைகள் அல்லது செரிமானக் கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தள்ளிப்போகலாம், இது ஏமாற்றத்தைத் தரும். புதிய தொழிலோ அல்லது திட்டங்களோ தற்போது தொடங்க வேண்டாம், அதில் தொய்வு ஏற்படலாம். குடும்பத்திலும், நண்பர்களிடமும் பேசும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் தேவையற்ற பகையை சம்பாதிக்க நேரிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

