MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பிப்ரவரி 6 முதல் 5 ராசிகளுக்கு சுக்கிர திசை.! பணமழை கொட்டும்.! நகை, சொத்துக்கள் குவியும்.!

பிப்ரவரி 6 முதல் 5 ராசிகளுக்கு சுக்கிர திசை.! பணமழை கொட்டும்.! நகை, சொத்துக்கள் குவியும்.!

Sukra Peyarchi 2026 Palangal: பிப்ரவரி 2026 முதல் வாரத்தில் சுக்கிரன் தனது ராசியை மாறுகிறார். இந்த பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் கிடைக்கும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 04 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சுக்கிர பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

சுக்கிர பெயர்ச்சி 2026

ஜோதிடத்தில் சுக்கிரன் சுப கிரகமாக அறியப்படுகிறார். ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் அமர்ந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பற்றாக்குறையே ஏற்படாது. பிப்ரவரி 6, 2026 அன்று சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். அந்த 4 ராசிகள் எவை என்று பார்ப்போம்.

26
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசியின் 11 வது வீட்டில் சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைய இருக்கிறார். 11வது வீடு லாப ஸ்தானம் என்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம் கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத அளவு முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்கும். குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மனமகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த கோளாறுகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும்.

Related Articles

Related image1
Today Rasi Palan: இன்று உருவாகும் அதிகண்ட யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் புயல் வீசப்போகுது.!
Related image2
Sani Peyarchi 2026: சனியின் பிடியில் இருந்து விடுதலை.! பிப்ரவரி 5 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
36
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

மிதுன ராசியின் ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு சுக்கிர பகவான் வருவதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். தொழிலில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கணிசமான லாபம் ஈட்டுவீர்கள். பிப்ரவரியில் சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் தொட்டதெல்லாம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சாதகமாக இருக்கும். காதல் உறவுகள் திருமணமாக மாறலாம்.

46
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர இருக்கிறார். இந்த காலத்தில் குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி கிடைக்கும். குழந்தைகளின் செயல்கள் உங்களுக்கு பெருமையை தேடி தரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலையில் நீங்கள் நிர்ணயித்த இலக்குகள் சரியான நேரத்தில் நிறைவேறும். குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்தி வரலாம். புதிய தொழில் தொடங்க சாதகமான நேரமாகும். குடும்பத்துடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வீட்டில் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை நிகழும்.

56
மகரம்
Image Credit : Pinterest

மகரம்

மகர ராசியின் இரண்டாம் வீட்டில் சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக மகர ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன்களை அறுவடை செய்வீர்கள். வேலையில் இருப்பவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். அலுவலகம் வழியாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும். பணவரவு காரணமாக உங்கள் தாயார் அல்லது வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். வாழ்க்கைத் துணையின் வழியில் இருந்த மனக்கசப்புக்கள் நீங்கும்.

66
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சுக்கிர பகவான் பெயர்ச்சி அடைவதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றியும், புகழும் கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும். துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்கில் வெற்றி கிடைக்கும். நேர்காணலில் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய தொழில் தொடங்க சாதகமான காலம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: சனியின் பிடியில் இருந்து விடுதலை.! பிப்ரவரி 5 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Today Rasi Palan: இன்று உருவாகும் அதிகண்ட யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் புயல் வீசப்போகுது.!
Recommended image3
பிப்ரவரி 17 சூரிய கிரகணம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்! குபேர யோகத்தை அள்ளப்போகும் அதிர்ஷ்டசாலிகள்!
Related Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று உருவாகும் அதிகண்ட யோகம்.! 4 ராசிகள் வாழ்வில் புயல் வீசப்போகுது.!
Recommended image2
Sani Peyarchi 2026: சனியின் பிடியில் இருந்து விடுதலை.! பிப்ரவரி 5 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved