MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சிம்மத்திற்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? 12-ல் மறையும் உச்ச குரு.. கஷ்டங்கள் தீர்ந்து கோடீஸ்வர யோகம் ஆரம்பம்; குரு பெயர்ச்சி பலன்!

சிம்மத்திற்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? 12-ல் மறையும் உச்ச குரு.. கஷ்டங்கள் தீர்ந்து கோடீஸ்வர யோகம் ஆரம்பம்; குரு பெயர்ச்சி பலன்!

Simma Rasi Guru Peyarchi 2026 Palan and Pariharam: 2026 குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு 12-ம் இடத்தில் உச்சம் பெறும் குரு பகவான் என்னென்ன மாற்றங்களைத் தரப்போகிறார்? தொழில், வெளிநாட்டு யோகம் மற்றும் சுப செலவுகள் குறித்த முழு விவரம்

3 Min read
Author : Rsiva kumar
Published : Apr 23 2026, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி 2026 பலன்
Image Credit : stockPhoto

சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி 2026 பலன்

ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரது ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் அவர்களுக்கு செல்வம், கல்வி, புத்திர பாக்கியம் மற்றும் நற்பெயர் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி ஜூன் மாதம் 2ம் தேதி அதிகாலை 2:25 மணிக்கு (நேரம் மாறுபடலாம்) நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியானது ஜோதிட ரீதியாக ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது. குறிப்பாக, குரு பகவான் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச வீடான கடக ராசியில் பிரவேசிப்பது அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனிடையே சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சி என்ன விதமான பலனை கொடுக்க போகிறது என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன் அண்ட் பரிகாரம்
Image Credit : Getty

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன் அண்ட் பரிகாரம்

சிம்ம ராசியைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் நிலவி வந்த கடுமையான போராட்டங்கள், மன உளைச்சல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும் ஒரு திருப்புமுனையாக இந்த காலகட்டம் அமைகிறது. வேலை தேடிக் கொண்டிருக்கும் சிம்ம ராசியினருக்குத் தகுதியான வேலை கிடைப்பதற்கும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாகக் காத்திருந்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

உஷார்! ராகு-கேதுவின் பிடியில் சிக்கப்போகும் ராசிகள்.. 2026 பெயர்ச்சியில் உங்களுக்கு ஆபத்தா?

39
குரு பெயர்ச்சி பலன் 2026 சிம்ம ராசி
Image Credit : stockPhoto

குரு பெயர்ச்சி பலன் 2026 சிம்ம ராசி

சனியின் தாக்கம் ஓரளவுக்கு இருந்தாலும், குருவின் பார்வை மற்றும் பலத்தால் தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்பது இதிலுள்ள முக்கிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, கூட்டுத் தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் முதலீடுகளில் இரட்டிப்பு லாபத்தைக் காணும் காலம் இது இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடக ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்; ராசிக்குள் நுழையும் உச்ச குரு; 12 ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைக்கும் குபேர யோகம்; இனி பொற்காலம்!

49
Star wise predictions for Leo Guru Peyarchi 2026
Image Credit : Getty

Star wise predictions for Leo Guru Peyarchi 2026

குடும்ப ரீதியாகப் பார்க்கும் போது, கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒருமித்த கருத்து உருவாகும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் சுமூகமாக முடிவுக்கு வரும். சமூகத்தில் உங்கள் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும் என்பதும், மற்றவர்கள் உங்களை மதிக்கும் சூழல் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனமும், சரியான உணவு முறையும் அவசியம் என எச்சரிக்கப்படுகிறது.

59
சிம்ம ராசி நட்சத்திர பலன்கள் 2026
Image Credit : Getty

சிம்ம ராசி நட்சத்திர பலன்கள் 2026

ஆன்மீகப் பரிகாரங்களைப் பொறுத்தவரை, சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவானை அதிகாலையில் வழிபடுவது மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமை தானம் செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவும். ஒட்டுமொத்தமாக குரு பகவானின் இடமாற்றம் மாற்றம் சிம்ம ராசியினருக்கு வரவிருக்கும் காலம் பொற்காலமாக அமையப்போகிறது என்பதை காண்பிக்கிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றிகள் நிச்சயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. கடின உழைப்பும், இறை வழிபாடும் இணைந்தால் சிம்ம ராசியினர் தொட முடியாத உயரமே இல்லை என்று ஜோதிடர்கள் கணித்து சொல்கிறார்கள்.

69
மகம் நட்சத்திர பலன்
Image Credit : Asianet News

மகம் நட்சத்திர பலன்

கேது பகவானை அதிபதியாகக் கொண்ட மகம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி உங்களுக்குத் தடையற்ற முன்னேற்றத்தைத் தரும். இதுவரை வேலை மற்றும் தொழிலில் இருந்த இழுபறிகள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக முடியும். பிதுர் வழிச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகி உங்கள் கைக்கு வரும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீகப் பெரியவர்களின் ஆசி கிட்டும். தடைப்பட்டிருந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றுவீர்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவது உங்கள் சவால்களை எளிதாக்கும்.

79
பூரம்:
Image Credit : Asianet News

பூரம்:

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு, இந்த குரு பெயர்ச்சி மங்கலமான மாற்றங்களைத் தரவல்லது. சுப காரியங்களுக்காகச் செலவு செய்யும் யோகமும், குடும்பத்தில் குதூகலமும் உண்டாகும். இல்லத்தில் திருமண வைபவங்கள், புதுமனை புகுவிழா என மங்கல ஓசை முழங்கும். உங்களின் நீண்டகால லட்சியங்கள் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை மற்றும் வாகனச் சேர்க்கை ஏற்பட்டு வசதி வாய்ப்புகள் பெருகும். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்குப் புகழும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். பெண்களால் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமைகளில் மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து வர, வற்றாத செல்வம் பெருகும்.

89
உத்திரம் (1-ம் பாதம்) நட்சத்திர பலன்
Image Credit : Asianet News

உத்திரம் (1-ம் பாதம்) நட்சத்திர பலன்

சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட உத்திரம் நட்சத்திர அன்பர்களே, உங்கள் நட்சத்திர நாதனின் வீட்டிற்கு 12-ல் குரு மறைந்தாலும், அவர் 'உச்சம்' பெறுவதால் உங்களுக்கு 'நிர்வாக யோகம்' உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்; உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியந்து பாராட்டுவார்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகளும், கௌரவமும் கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதுடன், நீண்ட காலமாகக் கழுத்தை நெரித்த பழைய கடன்களை அடைக்க புதிய வழிகள் பிறக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த மானியங்கள் மற்றும் உதவிகள் தடையின்றி உங்கள் கைக்கு வந்து சேரும். ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தின் போது 'ஆதித்ய ஹ்ருதயம்' பாராயணம் செய்வது அல்லது சூரிய தரிசனம் செய்வது இரட்டிப்பு பலனைத் தரும்.

99
பொறுப்பு துறப்பு
Image Credit : Social Media

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் ஜோதிடத் தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்புகளே ஆகும். இவை தனிநபரின் பிறந்த ஜாதகம், தசாபுத்தி மற்றும் கிரக நிலைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடும். வாசகர்கள் இந்தத் தகவல்களைத் தங்களின் மேலான அறிவைப் பயன்படுத்திப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மற்றும் பரிகாரங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்தத் தளத்தின் நிர்வாகமோ அல்லது ஆசிரியரோ பொறுப்பேற்க மாட்டார்கள். ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன் தகுந்த ஜோதிட நிபுணரை ஆலோசிப்பது சிறந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி (தமிழ்)
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Saturn Transit : சனியின் அருளால் இனி கவலை இல்லை.. இந்த 3 ராசிகளுக்கு பணவரவும், தொழில் முன்னேற்றம் உறுதி!
Recommended image2
Diwali 2026: தீபாவளிக்கு முன் தங்கம் போல் ஜொலிக்கப்போகும் ராசிகள்! சுக்கிரன் பெயர்ச்சி தரும் பலன்
Recommended image3
Dhanteras 2026: தன் தேரஸ் நாளில் சுக்கிர ஆதித்ய ராஜயோகம்! 4 ராசிகளுக்கு பண மழை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved