MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Venus Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கியாச்சு.! டாப் கியரில் போகப்போறீங்க.!

Venus Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கியாச்சு.! டாப் கியரில் போகப்போறீங்க.!

Venus Transit in Thiruvathirai Natchathiram 2026 : வருகிற மே 20 ஆம் தேதி சுக்கிர பகவான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : May 19 2026, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Venus Transit in Thiruvathirai Natchathiram 2026
Image Credit : AI Generated

Venus Transit in Thiruvathirai Natchathiram 2026

ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். அசுரர்களின் குருவாக இருக்கும் இவர் காதல், செல்வம், அழகு, ஆடம்பரம், செழிப்பு, திருமணம் ஆகியவற்றின் காரகராவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக விளங்கும் சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அதே போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில் மே 20 ஆம் தேதி சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் விளங்கி வருகிறார்.

Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறும் சுக்கிரன்
Image Credit : ChatGpt

திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறும் சுக்கிரன்

சுக்கிர பகவான் ராகுவின் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். இருப்பினும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். மே 20 ஆம் தேதி தொடங்கி நிதி ரீதியான முன்னேற்றமும் காணப்படும். சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெற இருக்கும் மூன்று ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!

Related Articles

Related image1
Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?
Related image2
Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!
35
ரிஷபம்
Image Credit : Gemini AI

ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையைத் தேடி தரும். இதுவரை கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு புதிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நல்ல செய்திகள் உங்கள் காதுகளை எட்டும். தொழில் மட்டும் வியாபாரம் புதிய உச்சத்தை அடையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை குறித்த பார்வை மாறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக பணமும், வெற்றியும் கிட்டும். திருமணமாகாமல் தடை ஏற்பட்டு வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன் முடியும்.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

45
மிதுனம்
Image Credit : Gemini AI

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற இருக்கிறீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்து வந்த கனவுகள், லட்சியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். உங்கள் இலக்குகளை நோக்கிய பயணத்தில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கருத்து வேறுபாடல் பிரிந்த உறவுகள், கணவன்-மனைவி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். குழந்தைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கும். கஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்தவர்கள், இனி மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழப்பழகுபவர்களுக்கு அடுத்த சில மாதம் எதிர்பாராத மாற்றங்களும், செழிப்பும் ஏற்படும்.

55
கும்பம்
Image Credit : Gemini AI

கும்பம்

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்க இருக்கிறது. குடும்பத்தில் நீடித்து வந்த தகராறுகள் முடிவுக்கு வரும். பொன், பொருள், வாகனம் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விற்க முடியாமல் இருந்த சொத்துக்களை விற்று பண லாபம் பார்ப்பீர்கள். பல வழிகளில் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத பண வரவால் கடன்களை அடைப்பீர்கள். வீட்டுச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக மாறும். வேலையில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக வேலை மாற முடியாமல் இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பட்டதாரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astro Tips: ராத்திரி தூங்கும்போது இதெல்லாம் செய்யாதீங்க... பர்ஸ் காலியாகிடும்!
Recommended image2
Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?
Recommended image3
Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.! ஆனால் 40 வயத்துக்குப் பின் சனி பகவான் அருளால் வாழ்க்கை மாறும்.!
Related Stories
Recommended image1
Mars Transit in Aries: 2 ஆண்டு கால கஷ்டகாலம் முடிந்தது.! செவ்வாய் பகவான் உருவாக்கும் மகா யோகம்.! கோடீஸ்வர யோகம் பெறும் அந்த 3 ராசிகள் யார்?
Recommended image2
Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved