- Home
- Astrology
- மேஷ ராசிக்குள் சுக்கிர பகவான் பிரவேசம்.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போறீங்க.!
மேஷ ராசிக்குள் சுக்கிர பகவான் பிரவேசம்.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போறீங்க.!
Shukra Peyarchi 2026 in Mesha Rasi : மார்ச் 25, 2026 சுக்கிர பகவான் மீன ராசியில் இருந்து வெளியேறி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Shukra Peyarchi 2026 in Mesha Rasi
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் அன்பு, அழகு, பொருள், இன்பம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். மீன ராசியில் உச்சம் பெற்று பயணித்து வந்த அவர், மேஷ ராசிக்கு செல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் இந்த பெயர்ச்சி உணர்ச்சிகரமான மற்றும் வேகமான மாற்றங்களைத் தரும். சுக்கிரனின் மேஷ ராசி பெயர்சியால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சுக்கிரனின் உங்கள் ராசிக்கே வருவதால் உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். ஆடம்பரத்தின் காரகராக விளங்கும் சுக்கிர பகவானின் அருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். உங்கள் துணிச்சலான நடவடிக்கைகள் மற்றும் உறுதியான முடிவுகள் உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும். சகோதரர்கள் வழியில் இருந்து ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
சுக்கிர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் காரணமாக நிதிநிலை சிறப்பாக இருக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும். மூத்த சகோதரர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்கள் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக அமையும். அறிவுத்திறன் மேம்படும். உங்கள் நிர்வாகத் திறன்களை வெளிப்படுத்துவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சரிக்க இருப்பதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரத் தொடங்கும். தந்தை வழி அல்லது பிற வழிகளில் மூலம் பண ஆதாயம் கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவு நனவாகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுக்கிர பகவான் வர இருப்பதால் கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும். காதல் விஷயங்களில் வெற்றி உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய உற்சாகத்துடனும், வலிமையுடனும் உணர்வீர்கள். கடந்த கால கசப்புக்களில் இருந்து விடுபடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்கு 3-ம் இடமான முயற்சி மற்றும் தைரிய ஸ்தானத்திற்கு சுக்கிர பகவான் வருகிறார். இந்த காலக்கட்டத்தில் உங்களின் தகவல் தொடர்புத் திறன் சிறப்பாக இருக்கும். குறுகிய தூரப் பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எழுத்து மற்றும் ஊடகத் துறையினருக்கு இது பொற்காலமாக இருக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு வேலைக்கான அழைப்புகள் வரலாம். பட்டதாரி இளைஞர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

