- Home
- Astrology
- Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் சனி-புதன்.! 2026 முதல் தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் ராசிகள்.!
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் சனி-புதன்.! 2026 முதல் தொழிலில் கொடி கட்டி பறக்கப்போகும் ராசிகள்.!
Shani Budh Conjunction: வேத ஜோதிடத்தின்படி புதன் மற்றும் சனி பகவான் இருவரும் 2026 ஆம் ஆண்டு இணைய இருக்கின்றனர். இதனால் சில ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி-புதன் சேர்க்கை 2025
ஜோதிடத்தில் சனி மற்றும் புதன் ஆகிய இருவரும் முக்கிய கிரகங்களாக அறியப்படுகின்றனர். சனி பகவான் நீதிமானாகவும், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராகவும் இருக்கிறார். புதன் பகவான் பேச்சு, அறிவு, புத்திசாலித்தனம், படிப்பு மற்றும் வணிகத்தின் காரகராக விளங்குகிறார். இவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேர உள்ளனர். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீன ராசியில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நடக்க உள்ளது. இது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ இருப்பதால் சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
புதன் மற்றும் சனியின் சேர்க்கை உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கலாம். இந்த சேர்க்கை உங்கள் ராசியின் லக்ன வீட்டில் உருவாகும். எனவே இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் சமூக வட்டம் விரிவடையும். நீங்கள் மரியாதை மற்றும் கௌரவத்தைப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவீர்கள். தொழில், வணிகம் ஆகியவற்றில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் திறக்கப்படும்.
ரிஷபம்
புதன் மற்றும் சனியின் இணைவு உங்களுக்கு நன்மை பயக்கும். இந்த இணைவு உங்கள் ராசியின் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் நடக்க இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகலாம். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள். குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் கௌரவம் மற்றும் நற்பெயர் அதிகரிக்கும். தொழில் செய்வதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் சனி இணைவு ஏற்படுவதால் இந்த சந்திப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். உங்களின் சமூக வட்டம் விரிவடையும். இந்த நேரத்தில் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்து, தகவல் தொடர்பு, ஊடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். இந்த காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் துணிச்சலாக எடுத்து வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். வாகனங்கள் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். உங்களின் ஆசை மற்றும் கனவுகள் நிறைவேறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

