- Home
- Astrology
- Astrology: 50 வருடங்களுக்குப் பிறகு சந்திர கிரகண நாளில் சனி பகவான் நடத்தும் அதிசயம்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் தான்.!
Astrology: 50 வருடங்களுக்குப் பிறகு சந்திர கிரகண நாளில் சனி பகவான் நடத்தும் அதிசயம்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் தான்.!
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகண நாளில் சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்க உள்ளார். அந்த சமயம் 3 ராசிகளுக்கு நல்ல நேரம் தொடங்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தில் வக்ர நிலையில் சனி பகவான்
வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். இவர் நீதிமானாகவும், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருபவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்க உள்ளார். வக்ர நிலை என்பது கிரகமானது பின்னோக்கி நகர்வது போன்ற நிலையாகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திர கிரகண நாளில் இந்த நிகழ்வு நடைபெற இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்தாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுன ராசி
சந்திர கிரகணத்தின் போது சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். மிதுன ராசியின் தொழில் ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் இவர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் நீங்கள் சம்பள உயர்வு வேண்டி காத்திருந்தால், இந்த காலத்தில் சம்பள உயர்வு கிடைக்கலாம். உங்களுக்கு குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்புகள் வழங்கப்படலாம். புதிய ஒப்பந்தங்களை தொடங்க அல்லது குழுவிற்கு தலைமை தாங்க இது சரியான நேரமாகும். வணிகர்கள் இந்த காலத்தில் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவீர்கள். வணிகத்தை விரிவு செய்யவும், புதிய தொழிலைத் தொடங்கவும் இது நல்ல நேரமாகும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிலை சாதகமான சூழலை உருவாக்கலாம். சனி பகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். ஜாதகத்தில் 5 ஆம் வீடு புத்திர ஸ்தானம் என்பதால் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கும் நேரம் இதுவாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
மீன ராசி
சனி பகவானின் வக்ர நிலை மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கலாம். ஏனென்றால் சனி உங்கள் ராசியில் லக்னத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் உங்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் கைக்கு வந்து சேரலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, பணம் கிடைக்கும். புது வீடு, நிலம், மனை, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகதவர்களுக்கு நல்ல குடும்பத்தில் வரன் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு நெருக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் சரியாகி மகிழ்ச்சியான சூழல் நிலவும்.