MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனி புதன் உருவாக்கும் மகா திருஷ்டி யோகம்.! குபேரனாக மாறப்போகும் 4 ராசிகள்.! வாழ்க்கையே மாறப்போகுது.!

சனி புதன் உருவாக்கும் மகா திருஷ்டி யோகம்.! குபேரனாக மாறப்போகும் 4 ராசிகள்.! வாழ்க்கையே மாறப்போகுது.!

Maha Drishti Yog 2026 Lucky Zodiac Signs : சனி மற்றும் புதன் பகவான் இருவரும் இணைந்து உருவாக்கும் மகா திருஷ்டி யோகத்தால் சில ராசிகளின் வாழ்க்கை தலைகீழாக மாற உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 30 2026, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Maha Drishti Yog 2026 Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Maha Drishti Yog 2026 Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது இணைந்து சுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை சக்தி வாய்ந்த கிரக சேர்க்கை நிகழும் உள்ளது. நீதிமான் சனி பகவானும், புத்திசாலித்தனம், படிப்பு, அறிவு, பேச்சு, வணிகத்தின் காரகரான புதன் பகவானும் 0° யில் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்திப்பதன் மூலம் ‘மகா திருஷ்டி யோகம்’ உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

25
ரிஷபம்
Image Credit : Gemini AI

ரிஷபம்

சனி புதன் சேர்க்கையால் உருவாகும் ‘மகா திருஷ்டி யோகம்’ ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களை தரவுள்ளது. இத்தனை நாட்களாக நீங்கள் கஷ்டப்பட்டு வந்ததற்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு மேலதிகாரிகளால் பாராட்டப்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். வியாபாரம் செய்து வருபவர்கள் லாபம் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படுவதோடு, சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். தங்கம், வெள்ளி, நிலம், மனை போன்ற திட்டங்களில் முதலீடுகளைத் தொடங்குவீர்கள்.

Related Articles

Related image1
Today Rasi Palan : மார்ச் 30 கிரகண யோகத்தால் இந்த ராசிகளுக்கு சிக்கல்.! உங்கள் ராசிக்கு எப்படி? 12 ராசிகளுக்குமான முழு பலன்கள் இதோ.!
Related image2
மீன ராசியில் சனி மங்கள யோகம்.! ஏப்ரல் 2 முதல் இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.! உங்க ராசி இருக்கா?
35
மிதுனம்
Image Credit : Gemini AI

மிதுனம்

புதன் மிதுன ராசியின் அதிபதி என்பதால் இந்த ‘மகா திருஷ்டி யோகம்’ மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறன் மற்றும் சிந்திக்கும் ஆற்றல் மேம்படும். நிதி சார்ந்த சரியான முடிவுகளை எடுப்பீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பலன்களைத் தரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் பணவரவால் வங்கி இருப்பு உயரும். இதனால் நிதி ரீதியாக பாதுகாப்பாக உணர்வீர்கள். குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. தம்பதிகளுக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும்.

45
துலாம்
Image Credit : Gemini AI

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ‘மகா திருஷ்டி யோகம்’ புதிய ஆற்றலைத் தரும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த தடைக் கற்கள் அகலும். இழுபறியில் இருந்த வேலைகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வேலைக்கான அழைப்புகள் வரும். நேர்காணல் முடித்து பணியில் சேர காத்திருப்பவர்கள் விரைவில் அழைப்புக் கடிதங்கள் பெறுவீர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் சரியான பாதையைக் காட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.

55
கும்பம்
Image Credit : Gemini AI

கும்பம்

சனி பகவான் அதிபதியாக விளங்கும் கும்ப ராசிக்கு ‘மகா திருஷ்டி யோகம்’ சாதகமான பலன்களைத் தரும். குறிப்பாக இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நீண்ட கால நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். உடல்நலப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, முன்னேற்றம் காணப்படும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். சனி மற்றும் புதன் இருவரின் ஆசியால் வாழ்க்கையில் இருந்து வந்த வறுமை நிலை நீங்கி பொருளாதார நிலைத் தன்மையும் செழிப்பும் உண்டாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan : மார்ச் 30 கிரகண யோகத்தால் இந்த ராசிகளுக்கு சிக்கல்.! உங்கள் ராசிக்கு எப்படி? 12 ராசிகளுக்குமான முழு பலன்கள் இதோ.!
Recommended image2
Weekly Horoscope : ஏப்ரல் 2 உருவாகும் அசுப யோகம்.! இந்த வாரம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? வார ராசி பலன் இதோ.!
Recommended image3
ஏப்ரல் 14 சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! கோடீஸ்வர யோகம் யாருக்கு?
Related Stories
Recommended image1
Today Rasi Palan : மார்ச் 30 கிரகண யோகத்தால் இந்த ராசிகளுக்கு சிக்கல்.! உங்கள் ராசிக்கு எப்படி? 12 ராசிகளுக்குமான முழு பலன்கள் இதோ.!
Recommended image2
மீன ராசியில் சனி மங்கள யோகம்.! ஏப்ரல் 2 முதல் இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved