- Home
- Astrology
- Sani Peyarchi 2026: 2026-ல் சனி பகவான் ஆடப்போகும் ருத்ர தாண்டவம்.! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், 4 ராசிகளுக்கு ஆப்பு.! உங்க ராசி இருக்கா?
Sani Peyarchi 2026: 2026-ல் சனி பகவான் ஆடப்போகும் ருத்ர தாண்டவம்.! 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், 4 ராசிகளுக்கு ஆப்பு.! உங்க ராசி இருக்கா?
Sani Peyarchi 2026 Palangal: 2026 ஆம் ஆண்டில் சனி பகவானின் பயணம் குறித்தும், சனிப்பெயர்ச்சியால் பலனடையுள்ள ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை பயணிப்பார். சில சமயங்களில் அவர் நேர்தியாகவும், அல்லது வக்ர நிலையிலும் (பின்னோக்கி நகரும்) பயணித்து பலன்களை அள்ளிக் கொடுப்பார். அந்த வகையில் கடந்த நவம்பர் 28, 2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகி தனது நேரடி பயணத்தை தொடங்கி இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சுமார் ஏழு மாதங்கள் அவர் நேர் கதியிலேயே பயணிக்க இருக்கிறார்.
ஜூலை 27, 2026 அன்று மீன ராசியில் இருந்து வக்ர நிலைக்கு மாறி, பின்னர் மீண்டும் டிசம்பர் 11, 2026 அன்று மீன ராசியிலேயே நேரடியாக பயணிக்கத் தொடங்குகிறார். சனி பகவானின் நேரடி இயக்கத்தின் போது தடைபட்டிருந்த திட்டங்கள் நிறைவேறவும், வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையும் கிடைக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் வக்ரப் பெயர்ச்சியின் பொழுது சுயபரிசோதனை செய்து கொள்ளவும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் தரும்.
2026 ஆம் ஆண்டில் சனியின் பெயர்ச்சியால் பலன் பெறவுள்ள ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11வது இடமான லாப ஸ்தானத்தில் சனிபகவான் அமர்வதால் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணப்படும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வரும். வாழ்க்கையில் முடிக்க முடியாமல் இருந்த பழைய பணிகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். அரசு வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நிறைவேறும். ஏற்கனவே தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். தொழிலுக்கு தேவையான கடன் உதவிகள் அரசு ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் சனிபகவான் அமர இருக்கிறார். இந்த வீடு தொழில் ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கடன் அல்லது புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நண்பர்களிடமிருந்தும் நிதி உதவியை எதிர்பார்க்கலாம். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு சனிபகவான் வருகிறார். எனவே இந்த காலகட்டத்தில் கடன் தொல்லைகள் நீங்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் பிறக்கும். திடீர் வருமானம் அதிகரிப்பதால் சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த வியாதிகள் குணமாகும். மேலும் தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகுவதால் தொழில் சிறக்கும். உங்களை மறைமுகமாக அச்சுறுத்தி வந்த எதிரிகள் விலகுவார்கள். எதிரிகளின் பலம் குறைவதால் உங்கள் கை மேலோங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட இருக்கிறீர்கள். மேலும் மகர ராசியின் மூன்றாம் வீட்டில் வழியாக சனி்பகவான் பெயர்ச்சி ஆவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியமும் அதிகரிக்கும். கும்ப ராசிக்காரர்கள் ஜென்ம சனியில் இருந்து விடுபட்டு பாத சனி காலத்திற்கு நுழைவதால் இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த மன உளைச்சல் குறையும். மனம் நிம்மதி பெறும். இழந்த பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், மன அழுத்தத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி நடப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குவதால் வாகன பயணம் அல்லது புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்ட சனி என்பதால் குடும்ப உறவுகளையும், தாய்வழி உறவுகளையும் அனுசரித்துச் செல்வது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

