MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி குரு ராகு கேது.! 2027 முதல் 4 ராசிகளுக்கு மகா பாக்கிய யோகம்.! அதிர்ஷ்டம் பெருகும், பணமழை கொட்டும்.!

ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி குரு ராகு கேது.! 2027 முதல் 4 ராசிகளுக்கு மகா பாக்கிய யோகம்.! அதிர்ஷ்டம் பெருகும், பணமழை கொட்டும்.!

Sani Guru Rahu Ketu Rajyog : சனி, குரு, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் நிலையால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு 2027 ஆம் ஆண்டு வரை நல்ல காலம் பிறக்க இருக்கிறது. அந்த ராசிகள் என்ன? கிரகங்களின் நிலைகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : May 03 2026, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sani Guru Rahu Ketu Rajyog
Image Credit : Gemini AI

Sani Guru Rahu Ketu Rajyog

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என அனைத்திலும் இந்த ராசிக்காரர்கள் சிறந்து விளங்க இருக்கின்றனர்.

27
சனி குரு ராகு கேது பெயர்ச்சி
Image Credit : Gemini AI

சனி குரு ராகு கேது பெயர்ச்சி

கர்ம காரகராக விளங்கும் சனி பகவான் 2027 ஜூன் வரை மீன ராசியில் இருப்பார். அதன் பின்னர் அவர் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுப கிரகமான குரு பகவான் 2026 ஜூன் இரண்டாம் தேதி கடக ராசியில் பெயர்ச்சி அடைய இருக்கிறார். அதன் பிறகு அக்டோபர் 30, 2026 அவர் சிம்ம ராசிக்குள் நுழைந்து பயணிக்க இருக்கிறார். அசுப கிரகங்களான ராகு பகவான் அக்டோபர் மாதம் வரை கும்ப ராசியிலும், கேது பகவான் சிம்ம ராசியிலும் பயணிக்க இருக்கின்றனர். அதன் பின்னர் இரு கிரகங்களும் தங்களது நிலையை மாற்ற இருக்கின்றனர். இந்த நான்கு கிரகங்களின் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
மே மாதம் நிலைகளை மாற்றும் 4 சுப கிரகங்கள்.! குபேர யோகம் பெறும் ராசிகள்.! 12 ராசிகளுக்குமான பலன்களும் பரிகாரங்களும்.! முழு விபரம் உள்ளே.!
Related image2
19 ஆண்டுகால சனி திசை யாருக்கு அதிர்ஷ்டம் தரும்? எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் அதிகம்? சனி மகா திசை பலன்களும் பரிகாரங்களும்.!
37
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 2026 பிற்பகுதி தொடங்கி 2027 ஆம் ஆண்டு முழுவதும் சிறப்பானதாக அமைய இருக்கிறது. தற்போது சனி பகவான் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து வருவதால் ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. குருபகவான் 3 மற்றும் நான்காம் வீடுகளில் பெயர்ச்சி அடைந்து ஐந்தாம் வீட்டில் நிலைபெற இருக்கிறார். ராகு பகவான் 11வது வீடான லாப ஸ்தானத்திலும், கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் இருக்கின்றனர். 

எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு எடுக்கும் அனைத்து காரியத்திலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். பொருளாதார நிலை உயரும். நிதிநிலைமை மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

47
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நிலையால் வாழ்க்கையில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் காணப்படும். குறிப்பாக ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்குள் நுழைந்த பிறகு, கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். உங்களை வாட்டி வதைத்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீரும். 

சகோதரர்கள் வழியில் இருந்து சொத்து அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்கலாம். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். நல்ல வரன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். குரு பகவானின் அருளால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிர்ஷ்டம் கூடும். உபரி வருமானத்திற்கான வழிகள் பிறக்கும்.

57
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆறாவது வீட்டில் சனி பகவான் நிலை பெற்றிருக்கிறார். குரு பகவான் அக்டோபர் மாதத்திற்கு பிறகு 11-வது வீட்டிற்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறுவீர்கள். வீட்டில் செல்வம் பெருகும். கூடுதல் லாபம் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

வீடு, சொத்து, மனை, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ராகு மற்றும் கேது பகவானின் நிலையால் உங்கள் வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டில் பொன், பொருள், நகை, ஆடை, ஆபரணங்கள் சேர்க்கைகளும் வாழ்க்கையில் இருந்து வந்த மந்த நிலை விலகி, புதிய உற்சாகம் பிறக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அந்தஸ்து உயரும்.

67
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நான்கு கிரகங்களின் நிலையால் அற்புதமான காலக்கட்டம் தொடங்க இருக்கிறது. 2027 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். இருந்து வந்த தடைகள் நீங்கும். பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற கணவன் மனைவி அல்லது குடும்ப உறவுகள் மீண்டும் இணைவீர்கள். 

குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். மாமனார் அல்லது மைத்துனர் வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் முடிவுக்கு வரும் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் அபரிமிதமாக உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு குறித்த மகிழ்ச்சியான செய்திகளை கேட்பீர்கள்.

77
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
குரு பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோட்டையை பிடிக்கும் ராசிக்காரர்கள் யார்? அரசியலில் ஜொலிக்கும் டாப் 3 ராசிகள்.. நாளை யாருக்கு ஜாக்பாட்!
Recommended image2
பிறந்த தேதி சொல்லும் ரகசியம்.. உங்களுக்கு காதல் திருமணமா? பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா?
Recommended image3
உலகிலேயே அதிக அன்பு காட்டும் 3 ராசியினர் யார்? இவர்கள் கிடைத்தால் வாழ்க்கையே சொர்க்கமாகும்!
Related Stories
Recommended image1
மே மாதம் நிலைகளை மாற்றும் 4 சுப கிரகங்கள்.! குபேர யோகம் பெறும் ராசிகள்.! 12 ராசிகளுக்குமான பலன்களும் பரிகாரங்களும்.! முழு விபரம் உள்ளே.!
Recommended image2
19 ஆண்டுகால சனி திசை யாருக்கு அதிர்ஷ்டம் தரும்? எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் அதிகம்? சனி மகா திசை பலன்களும் பரிகாரங்களும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved