MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த 3 ராசிக்காரர்களை நம்பும்போது கொஞ்சம் உஷார்; நழுவுவதில் கில்லாடிகள்; உங்கள் ராசியும் இதில் இருக்கா?

இந்த 3 ராசிக்காரர்களை நம்பும்போது கொஞ்சம் உஷார்; நழுவுவதில் கில்லாடிகள்; உங்கள் ராசியும் இதில் இருக்கா?

Top 3 Zodiac Signs Who Break Promises in Tamil : பொதுவாக யாராக இருந்தாலும் நம்பிக்கையும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதும் தான் முக்கியம். ஆனால், அதையும் மீறி சொன்ன சொல்லை காப்பாற்றாத ராசிகள் என்று சிலர் இருக்கிறார்கள். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 13 2026, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாக்கைக் காப்பாற்றத் தடுமாறும் அந்த 3 ராசிகள்.. இவங்ககிட்ட உஷாரா இருங்க!
Image Credit : Getty

வாக்கைக் காப்பாற்றத் தடுமாறும் அந்த 3 ராசிகள்.. இவங்ககிட்ட உஷாரா இருங்க!

Zodiac Signs Who Break Promises in Tamil : காதலர் தினம் என்றாலே காற்றில் வாக்குறுதிகள் பறக்கும். உனக்காக எதையும் செய்வேன் என காதலர்கள் அன்பைக் கொட்டுவார்கள். ஆனால், எல்லாருடைய பேச்சையும் அப்படியே நம்பிவிடாதீர்கள். ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிக்காரர்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் கொஞ்சம் 'இயற்கையான' சோம்பேறித்தனம் அல்லது தடுமாற்றம் இருக்கும். ஆனால், இவர்கள் கெட்டவர்கள் இல்லை. இருந்தாலும் இவர்களது ராசி குணம் அப்படி. இவர்கள் தரும் வாக்குறுதிகள் பெரும்பாலும் அந்த நிமிடத்து உற்சாகத்தில்தான் இருக்குமே தவிர, செயலில் இருக்காது. அந்த 'வாக்கு மீறும்' ராசிகள் யார் எனத் தெரிந்து கொண்டு உஷாராக இருங்கள். அந்த ராசியினர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
மிதுனம்: பேச்சில் கில்லாடி.. ஆனால் கொடுத்த வாக்கில்?
Image Credit : Getty

மிதுனம்: பேச்சில் கில்லாடி.. ஆனால் கொடுத்த வாக்கில்?

இந்த ராசியினருக்கு ஒரு தனி வசீகரம் உண்டு. அவர்களின் சுறுசுறுப்பிற்கும், தேன் ஒழுகும் பேச்சிற்கும் மயங்காதவர்களே இல்லை. புதிய விஷயங்களை தேடித் தேடி கற்கும் ஆர்வம் இவர்களிடம் அதிகம். ஆனால், இவர்களின் மிகப்பெரிய பலவீனமே வேகம் தான். மின்னல் வேகத்தில் யோசித்து ஒரு வாக்குறுதியை கொடுத்துவிடுவார்கள், ஆனால் அதே வேகத்தில் சூழ்நிலை மாறும்போது நான் அப்படி சொல்லவே இல்லையே என அழகாகப் பேச்சை மாற்றிவிடுவார்கள். இவர்களுடைய இரட்டை குணம் காரணமாக, ஒரே விஷயத்தில் உறுதியாக நிற்க முடியாமல் அடிக்கடி முடிவுகளை மாற்றிக்கொள்வார்கள். அதனால் இவர்களிடம் சத்தியம் வாங்கும் முன் கொஞ்சம் யோசிப்பது நல்லது.

34
தனுசு: சிறகடிக்க துடிக்கும் பறவை.. இவர்களை கட்டுப்படுத்தினால் அவ்வளவுதான்
Image Credit : Getty

தனுசு: சிறகடிக்க துடிக்கும் பறவை.. இவர்களை கட்டுப்படுத்தினால் அவ்வளவுதான்

தனுசு ராசிக்காரர்கள் எப்போதுமே 'ஃப்ரீ பேர்ட்ஸ். எப்போதும் சுதந்திரமாகவே இருக்க விரும்புவார்கள். புதிய பயணங்கள், புதுப்புது அனுபவங்கள் என தங்களுக்குப் பிடித்தபடி வாழ்வதில் இவர்களுக்கு அலாதி பிரியம். இவர்களை ஒரு இடத்தில்கூட கட்டிப்போட முடியாது. யாராவது இவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தாலோ அல்லது விதிகளால் நெருக்கடி கொடுத்தாலோ, அங்கிருந்து எஸ்கேப் ஆக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அந்த நேரத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதை விட, தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் வேண்டுமென்றே யாரையும் ஏமாற்ற மாட்டார்கள், ஆனால் இவர்களது 'சுதந்திர தாகம்' சில நேரங்களில் இவர்களைக் கொடுத்த வாக்கில் இருந்து நழுவச் செய்துவிடும். அதனால், இவர்களிடமிருந்து கொஞ்சம் உஷாரா இருப்பது ரொம்பவே முக்கியம்.

44
கும்பம்: ஒரு புரியாத புதிர்! மரியாதை இல்லையா?
Image Credit : Asianet News

கும்பம்: ஒரு புரியாத புதிர்! மரியாதை இல்லையா?

கும்ப ராசிக்காரர்கள் எப்போதுமே 'அவுட் ஆஃப் பாக்ஸ்' Out of box சிந்தனையாளர்கள். இவர்களது மனதில் என்ன ஓடுகிறது என்பதை யாராலும் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. ஒருவருக்கு உதவி தேவைப்படும்போது உணர்ச்சிவசப்பட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் அந்த நிமிடம் முடிந்ததும் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார்கள். இவர்களுடைய மிகப்பெரிய பலவீனமே 'சுயமரியாதை' தான். தாங்கள் மதிக்கப்படவில்லை என்று ஒரு துளி உணர்ந்தால் கூட, கொடுத்த வாக்கைப்பற்றி கவலைப்படாமல் அப்படியே பின்வாங்கிவிடுவார்கள். இவர்களது இந்த 'சைலண்ட்' குணம் மற்றவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். ஆனால், இவர்களிடம் உண்மையான அன்பையும் நம்பிக்கையையும் காட்டினால், இவர்களை விட நேர்மையானவர்கள் யாரும் இருக்க முடியாது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Feb 14 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள்.!
Recommended image2
Feb 14 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இன்று எதிரிகளை ஓட விடப்போறீங்க.! துணிச்சல் மிகுந்த நாள்.!
Recommended image3
Feb 14 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, இன்று ஜான் ஏறுனா முழம் சறுக்கும்.! எச்சரிக்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved