MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jan 08 Rishaba Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, ரிஷப ராசிக்கு திடீர் யோகம்.! எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி.!

Jan 08 Rishaba Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, ரிஷப ராசிக்கு திடீர் யோகம்.! எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி.!

January 08, 2026 Rishaba Rasi Palangal: ஜனவரி 08, 2026 ரிஷப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Jan 07 2026, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : stockPhoto

கிரக நிலைகள்:

ரிஷப ராசி நேயர்களே, ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நிலையில் அமர்ந்துள்ளார். குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் சுகமான சூழல் நிலவும். சந்திரன் மற்றும் ராகு கேது சஞ்சாரம் மன ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

பொதுவான பலன்கள்:

நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடியும். எடுக்கும் காரியங்களில் நிதானமும் பொறுமையும் தேவை. புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு முன்னர் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. சமூகத்தில் உங்கள் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும்.

நிதி நிலைமை:

இன்றைய நாள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதே சமயம் தேவையற்ற செலவுகளும் ஏற்படலாம் என்பதால் நிதி விஷயங்களில் நிதானம் தேவை. பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை. அவசரப்பட்டு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணப் பேச்சுக்கள் சமூகமாக முடியும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம்.

பரிகாரம்:

பொருளாதார முன்னேற்றத்திற்காக மகாலட்சுமி தாயாரை வழிபடவும். வியாழக்கிழமை என்பதால் குரு பகவானை வணங்குவது ஞானத்தையும் தெளிவையும் தரும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும். ஏழை எளியவர்களுக்கு உணவை தானமாக வழங்குவது தோஷங்களை நீக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Recommended image2
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
Recommended image3
2026 பரபாவ ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும்? மேஷம் to மீனம் வரை, 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.!
Related Stories
Recommended image1
Chaturgrahi Yog: 100 ஆண்டுகளுக்குப் பின் சனியின் வீட்டில் சங்கமிக்கும் 4 கிரகங்கள்.! ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்.!
Recommended image2
Thai Matha Rasi Palangal 2026: ஜனவரியில் முக்கிய கிரக பெயர்ச்சி.! பொங்கலுக்குப் பின் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved