- Home
- Astrology
- Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!
Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!
Rare Conjunction of Jupiter Venus Mercury and Saturn : குரு, சுக்கிரன், புதன் மற்றும் சனி கிரகங்களின் அபூர்வமான சேர்க்கையால், அடுத்த 6 மாதங்களுக்கு 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப் போகிறது. இவர்களுக்கு அசைக்க முடியாத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

Rare Conjunction of Jupiter Venus Mercury and Saturn
ஜோதிடத்தின்படி கிரகங்களின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் சனி பகவானுடன் இணைகின்றன. இந்த அரிய நிகழ்வானது குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க இருக்கிறது. இந்த 6 ராசிக்காரர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு வாழ்வில் புதிய உச்சத்தைத் தொட இருக்கின்றனர். 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியான ஆறு மாதங்களும் 6 ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை பெற உள்ளனர். அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!

மேஷம்
மேஷ ராசியின் அதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் அடுத்த 5 மாதங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கிறார். கூடவே குரு, புதன், சுக்கிரன் பலமாக இருப்பதால், இவர்களின் வாழ்க்கை இனி சீராக செல்லும். எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும் மனம் தளர மாட்டார்கள். மனவலிமையுடன் போராடி வெற்றிகளைப் பெறுவீர்கள். குரு பகவான் அருளால் திட்டமிட்ட அனைத்து பணிகளும் நல்லபடியாக முடியும். வருமானம், வேலை தொடர்பான இலக்குகளை நிச்சயம் அடைவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். இவர் சாதகமான கோச்சாரத்தில் சஞ்சரிப்பதாலும், குரு, சுக்கிரன் ஆதரவு கிடைப்பதாலும், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி 6 மாதங்கள் அதிக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் தீரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மன அழுத்தம், பிரச்சனைகள் குறையும். வருமானம் அதிகரித்து, தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
அதிர்ஷ்ட கிரகமான குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். சுக்கிரன், புதனின் சாதகமான பார்வையும் கடக ராசி மீது விழுவதால், இவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும். தெய்வங்களின் முழு ஆசிர்வாதமும் கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். சொந்த வீடு, வெளிநாட்டு வேலை போன்ற கனவுகள் நனவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பேங்க் பேலன்ஸ் உயரும். தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாயுடன், சனி, குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் சாதகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை படிப்படியாக உயர்நிலையை அடையும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். மன உறுதி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வேலை, குடும்ப வாழ்க்கை, நிதி நிலைமை அனைத்தும் சாதகமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனியுடன், குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களும் ஆண்டு முழுவதும் சாதகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பசுமையாகவும், செழிப்பாகவும் இருக்கும். நீங்கள் தொடங்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறும். மனதில் உள்ள பெரும்பாலான ஆசைகள் நிறைவேறும். தடைகள் அனைத்தையும் தகர்த்து முன்னேறிச் செல்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். லாபம் பெருகும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஜூன் மாதம் முதல் சனி தோஷத்தில் இருந்து விடுபடுவார்கள். ராசியின் அதிபதி குரு உச்சத்தில் இருப்பதால், இவர்களின் வாழ்க்கையும் உயர் நிலையை அடையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் அதிக லாபம் உண்டாகும். வருமானத்தில் வளர்ச்சி உட்பட அனைத்தையும் அனுபவிப்பார்கள். குரு மற்றும் சுக்கிரன் கிரகங்களின் சாதகமான சஞ்சாரங்களால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

