MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ராகுவின் பிடியில் இருந்து கோடீஸ்வர யோகம்! இந்த ராசிகளுக்கு இனி குபேர வாழ்வுதான்.. பணமழை பொழியப்போகுது!

ராகுவின் பிடியில் இருந்து கோடீஸ்வர யோகம்! இந்த ராசிகளுக்கு இனி குபேர வாழ்வுதான்.. பணமழை பொழியப்போகுது!

Rahu Peyarchi 2026 Tamil Predictions in Masi Month : ராகுவின் அருளால் இந்த ராசியினருக்கு இனி கஷ்டமெல்லாம் பறந்தோட போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 11 2026, 10:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராகுவின் அருளால் வற்றாத பண வரவு.. வசூலாகப்போகும் பழைய கடன்
Image Credit : Getty

ராகுவின் அருளால் வற்றாத பண வரவு.. வசூலாகப்போகும் பழைய கடன்

ராகுவின் அதிரடி சஞ்சாரத்தால் 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது. பணப்பற்றாக்குறை நீங்கி குபேரனின் முழு ஆசியும், ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். குறிப்பாக, வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய 'மெகா' சம்பள உயர்வு கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்டக் காற்று இனி உங்கள் பக்கம் தான் என்று சொல்லும் அளவிற்கு ஜாக்பாட் அடிக்கும் ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

25
ரிஷபம்: அள்ளிக் கொடுக்கப் போகும் ராகு பகவான்
Image Credit : Getty

ரிஷபம்: அள்ளிக் கொடுக்கப் போகும் ராகு பகவான்

மாசி மாதத்தைப் பொறுத்த வரையில் ரிஷப ராசியினருக்கு ஒரு வரப்பிரசாதமான மாதம் ஆகும். ராகுவின் ஆசியால் பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கப் போகிறது. எதிர்பாராத பண வரவு உங்கள் வங்கி இருப்பை உயர்த்தும். கைவிட்டுப் போன பணம், நீண்ட நாள் இழுபறியில் இருந்த காசோலைகள் என அனைத்தும் சுபமாக முடியும். தொழில் மற்றும் வேலையில் புதிய கதவுகள் திறக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி, மன நிம்மதி கிட்டும். சொந்த வீடு அல்லது சொத்து வாங்கும் கனவு நனவாகும். சுப செய்திகள் வந்து சேரும். மொத்தத்தில் இந்த மாதம் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் ஒரு மாதமாக இருக்கும்.

35
சிம்மம்: ராகு தரும் ராஜமரியாதை
Image Credit : Getty

சிம்மம்: ராகு தரும் ராஜமரியாதை

சிம்ம ராசியினரைப் பொறுத்த வரையில் இந்த மாசி மாதம் ஒரு பொற்காலமான மாதமாகும். ராகுவின் செல்வாக்கு உங்களது அந்தஸ்தை பல மடங்கு உயர்த்தப்போகிறது. பதவி உயர்வு மட்டுமின்றி அதிகாரமிக்க பொறுப்புகளும் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். வெளிநாட்டு வர்த்தம் இரட்டிப்பு லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும். ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், புதிய தொழில் தொடங்க ஏற்ற மாதம்.

45
தனுசு - மாசி மாதத்தில் ஜாக்பாட்
Image Credit : Getty

தனுசு - மாசி மாதத்தில் ஜாக்பாட்

நேர்மைக்கும் கடின உழைப்பிற்கும் பெயர்பெற்ற தனுசு ராசியினருக்கு மாசி மாதம் ஒரு வரப்பிரசாதம்! பழைய முதலீடுகள் இப்போது லாபத்தை அள்ளித் தரும். உழைப்பவரே உயர்வார் என்பதற்கு ஏற்ப, உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு இது ஒரு பொற்காலம். தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம் இருப்பதால், புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம். உங்களை வாட்டி வதைத்த பணப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்!

55
கும்பம் - சொந்த ராசியில் ராஜயோகம்! வங்கி இருப்பு கிடுகிடுவென உயரும்
Image Credit : Getty

கும்பம் - சொந்த ராசியில் ராஜயோகம்! வங்கி இருப்பு கிடுகிடுவென உயரும்

கும்ப ராசியினருக்கு இது பொற்காலமான மாதம். உங்கள் ராசியிலேயே நடக்கும் இந்த கிரக மாற்றங்கள் அதிரடி வளர்ச்சியைத் தரும். புதிய மனிதர்களின் அறிமுகம் உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றப்போகிறது; அவர்கள் மூலம் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். இதுவரை கனவாக மட்டுமே இருந்த திட்டங்கள் இப்போது நனவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், வங்கி சேமிப்பும் பல மடங்கு உயரும். குடும்பத்தில் அமைதியும், தொழிலில் அசுர வேக லாபமும் கிடைக்கப்போகும் அற்புதமான தருணம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்! Surya Peyarchi 2026
Recommended image2
Feb 12 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, குருவின் பார்வையால் இன்று தடைகள் அனைத்தும் விலகும்.!
Recommended image3
Feb 12 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, சுத்து போடும் கிரகங்கள்.! பட்ட காலிலேயே படும்.! அடிக்கும் எச்சரிக்கை மணி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved