- Home
- Astrology
- Mars Transit Gemini 2026: ராகு-செவ்வாய் யோகம்.. அடுத்த 17 நாளில் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்
Mars Transit Gemini 2026: ராகு-செவ்வாய் யோகம்.. அடுத்த 17 நாளில் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்
Mars Transit Gemini 2026: ராகு-செவ்வாய் சமசப்தக யோகம் செப்டம்பர் 18 வரை நீடிக்கும் என ஜோதிடக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 17 நாளில் பலன் பெறும் 4 ராசிகள் யார்? என்பதை பார்க்கலாம்.

ராகு செவ்வாய் சமசப்தக யோகம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், உங்கள் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும். பணியிடத்தில் தலைமைப் பண்புகள் வெளிப்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். சிறு பயணங்கள் மற்றும் புதிய தொடர்புகளால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
மிதுன ராசி
செவ்வாய் தற்போது மிதுன ராசியில்தான் சஞ்சரிக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ஆதாயங்களும் உண்டாகும். ஆனால், அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் அனுகூலமான மாற்றங்கள் ஏற்படும். செவ்வாய்-ராகுவின் இந்த நிலை சாதகமாக அமையும். பழைய தொடர்புகள் மூலம் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளுடன் நிதிப் பலன்களும் கிடைக்கும். ஆனால், செலவுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம்.
கும்ப ராசி
கும்ப ராசியினர் மீது செவ்வாயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது கடினமாக உழைக்கும் குணத்தையும், தைரியத்தையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகள், வேலை, வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வரலாம். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் விரிவாக்கத்திற்கான சூழல் அமையும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

