MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Pancha Mahapurusha Yoga: அள்ளிக்கொடுக்கும் பஞ்ச மகாபுருஷ யோகம்.! 3 ராசிகளுக்கு காசு, பணம் கொட்ட போகுது.! சக்சஸ் ஆரம்பம்.!

Pancha Mahapurusha Yoga: அள்ளிக்கொடுக்கும் பஞ்ச மகாபுருஷ யோகம்.! 3 ராசிகளுக்கு காசு, பணம் கொட்ட போகுது.! சக்சஸ் ஆரம்பம்.!

ஜோதிடத்தின் பஞ்ச மகாபுருஷ யோகத்தால் மூன்று ராசிகளுக்கு ஜூலை முதல் ராஜயோகம் தொடங்குகிறது. இந்த யோகத்தின் பலனாக, இந்த ராசியினர் பணம், பதவி, மற்றும் தொழில் வெற்றியைப் பெற்று, வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய உள்ளனர்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 03 2026, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராஜாதி ராஜ நிலைக்கு உயர்த்தும் யோகம்.!
Image Credit : Asianet News

ராஜாதி ராஜ நிலைக்கு உயர்த்தும் யோகம்.!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரை அடிமட்ட நிலையிலிருந்து ராஜாதி ராஜ நிலைக்கு உயர்த்தும் வல்லமை கொண்டது பஞ்ச மகாபுருஷ யோகம் ஆகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களைத் தவிர்த்து, மற்ற 5 முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமையும் போது இந்த யோகம் உண்டாகிறது. இது கொடுக்கும் காலம் எனவும் கொடைகாலம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் சும்மா இருந்தால் கூட பணமு்ம பதவியும் சந்தோஷமும் உங்களை வந்தடையும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

செவ்வாயால் ருசக யோகமும், புதனால் பத்ர யோகமும், குருவால் ஹம்ச யோகமும், சுக்கிரனால் மாளவ்ய யோகமும், சனியால் சச யோகமும் உருவாகின்றன. தற்போதைய கோச்சார கிரக நிலைகளின்படி விருச்சிகம், கும்பம், கடகம் ஆகிய 3 ராசிகளுக்கு இந்த பஞ்ச மகாபுருஷ யோகத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைத்து, காசு பணம் கொட்டப்போவதோடு, வாழ்க்கையில் புதிய சக்சஸ் ஆரம்பமாகப் போகிறது என்றால் அது மிகையல்ல!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விருச்சிக ராசி (ருசக யோகம் மற்றும் சச யோகம்)
Image Credit : Asianet News

விருச்சிக ராசி (ருசக யோகம் மற்றும் சச யோகம்)

நீங்க விருச்சிக ராசியா? அப்போ ஜூலை முதல் வாரத்தில் இருந்து அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது.  விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் மற்றும் கர்ம காரகனான சனி பகவானின் சாதகமான அமைப்பால், இந்த ராசியினருக்குப் பஞ்ச மகாபுருஷ யோகத்தின் பலன்கள் அதிரடியாகக் கிடைக்கத் தொடங்குபோகிறது.

பண வரவு மற்றும் சொத்து சேர்க்கை: நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். ரியல் எஸ்டேட், பூமி சேர்க்கை, புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் கைகூடும் என்பதால் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் . விருச்சிக ராசியினருக்கு தொழிலில் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில் வெற்றி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பெரிய பதவிகளும் திடீரென தேடி வரும். எதிர்ப்புகள் யாவும் தவிடுபொடியாகி காணாமல் போகும். உங்களின் தைரியமும், நிர்வாகத் திறனும் உங்களை வெற்றியின் உச்சத்துக்கே கொண்டு செல்லும் என ஜோதிட நூல்கள் அடித்து கூறுகின்றன.

35
கடக ராசி (ஹம்ச யோகம் மற்றும் மாளவ்ய யோகம்)
Image Credit : Pixabay

கடக ராசி (ஹம்ச யோகம் மற்றும் மாளவ்ய யோகம்)

நீங்க கடக ராசியா? அப்போ உங்களுக்கு லாட்டரி சீட்டு போல ஜாக்பாட் அடிக்க போகுது. உடல், மனம் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் பொங்கும். செல்வம் குவியும். பிரிந்த உறவுகள் சேர்வார்கள். கைகளில் காசு புழங்கியபடியே இருக்கும்.

ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து கடக ராசி நேயர்களுக்குக் குரு பகவான் உச்சம் பெற்று 'ஹம்ச யோகத்தை' உருவாக்குவதாலும், சுக்கிரனின் அருளாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது.

பொருளாதார உச்சம்: பல வழிகளில் இருந்தும் வருமானம் வந்து குவியும் நேரம் வந்துவிட்டது. தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள், திருமணப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். ஆன்மீகப் பயணங்கள் மூலம் மன அமைதியும், கௌரவமும் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர் உங்களுக்கு சாதகமாக இருப்பர்.

பதவி உயர்வு: அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதாக உடனே கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் சாதகமாக அமையும்.  பிடித் இடத்தில் பிடித்த வேலை கிடைக்கும் வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு போட்டியாளர்களை வென்று காட்டுவீர்கள். இனி உங்களுக்கு வெற்றி முகம்தான்.

45
கும்ப ராசி (சச யோகம் மற்றும் மாளவ்ய யோகம்)
Image Credit : Pixabay

கும்ப ராசி (சச யோகம் மற்றும் மாளவ்ய யோகம்)

நீங்க கும்ப ராசியா? அப்படீன்னா உங்களுக்கு நல்லகாலம் தொடங்கியாச்சு. இனிய செய்திகள், சந்தோஷ வெற்றிகள், தொழில் முன்னேற்றண் ஆகியவை இனி உங்களுக்கே.

கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் தன் சொந்த வீடான கும்பத்திலேயே அமர்ந்து 'சச யோகத்தை' தருவதோடு, சுக்கிரனின் சுப பார்வையும் இணைவதால் இவர்களுக்குப் பொற்காலம் தொடங்குகிறது. தொழில் தொடங்கினால்  வெற்றி கிடைக்கும். நிலம், வீடு, தோட்டம் வாங்க வாய்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் தானாக வந்து உதவி செய்வர். நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களை தேடிச்சென்று உதவி செய்வீர்.

பண மழை பொழியும்: காசு, பணத்திற்கு இனி தட்டுப்பாடே இருக்காது. கடன் காணாமல் போகும் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொடங்கும் தொழில் அனைத்தும் பெருத்த லாபத்தைத் தரும். பழைய கடன்கள் அனைத்தும் அடைபட்டு நிம்மதி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.

ஆடம்பர வாழ்க்கை: வாகன யோகம், ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து, அந்தஸ்து உயரும் நிலை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடப் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மொத்தத்தில் இந்த ஜூலை இரண்டாவது தொடங்கும் அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டால் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

55
ஜோதிட ரகசியம் இதுதான் மக்களே.!
Image Credit : Asianet News

ஜோதிட ரகசியம் இதுதான் மக்களே.!

ஒருவருடைய ஜாதகத்தில் இந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட யோகங்கள் அமைந்திருந்தால், அவர்கள் அரசனைப் போன்ற வாழ்க்கையை வாழ்வார்கள் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. இந்த யோகங்கள் தற்காலிகமாக ஜாதகத்தில் அமையாதவர்கள் கூட, தங்களின் நன்னடத்தை மற்றும் கடின உழைப்பால் கஜகேசரி யோகம், புதாதித்ய யோகம் போன்ற மற்ற ராஜயோகங்களின் பலன்களைப் பெற முடியும். தற்போது இந்த 3 ராசிகளுக்கும் அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசுவதால், சுறுசுறுப்புடன் உழைத்தால் காசு, பணத்துடன் வாழ்க்கையில் மிகப்பெரிய சிகரத்தை எட்டலாம்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Peyarchi 2026: இந்த 4 ராசிகளுக்கு அள்ளித்தரப்போகும் குரு பகவான்.. முழு லிஸ்ட் இதோ
Recommended image2
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image3
Ezharai Sani : ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கும் ராசிகள்..இனி நிம்மதியும் முன்னேற்றமும் கிடைக்குமா?
Related Stories
Recommended image1
Astrology: நீசபங்கு ராஜயோகம் எனும் ஜாக்பாட்.! ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிகள்!
Recommended image2
Astrology: குரு கொடுத்தால் யார் தடுக்க முடியும்.?! ராஜாங்க யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved