- Home
- Astrology
- Nov 28 Daily Rasi Palan Mesham to Meenam: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Nov 28 Daily Rasi Palan Mesham to Meenam: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
November 28 Daily Horoscope for 12 zodiac signs: நவம்பர் 28, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11

Image Credit : Asianet News
November 28 Today Rasi Palangal
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பொதுவான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
- இன்றைய தினம் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும் நிதி நிலைமை மேம்படும் மனதை குழப்பம் விஷயங்களில் அமைதியாக இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை ஆக்ரோஷமான வாதங்களை தவிர்த்துவிடுங்கள்.
- அதிர்ஷ்ட எண்: 9, 13
- அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ நிறம்.
ரிஷபம்:
- ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லிணக்கமும் நிகழும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண்: 2, 6
- அதிர்ஷ்ட நிறம்: க்ரீம்.
மிதுனம்:
- இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். எதிர்கால திட்டங்கள் குறித்து கவனம் செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வி முயற்சிகள் தொடர்பான திட்டங்கள் வெற்றி பெறும்.
- அதிர்ஷ்ட எண்: 3, 5
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
கடகம்:
- இன்றைய தினம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் அதிக எச்சரிக்கை தேவை. அமைதியாகவும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அலட்சியம் வேண்டாம்.
- அதிர்ஷ்ட எண்: 2, 3
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
சிம்மம்:
- இன்று உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டப்படும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நிதிநிலைமை திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 1, 9
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
கன்னி:
- இன்று குடும்பத்தில் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுடைய பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.
- அதிர்ஷ்ட எண்: 3, 5
- அதிர்ஷ்ட நிறம்: காக்கி.
துலாம்:
- இன்று உங்களுடைய குடும்பத்திற்காக அதிகமாக உழைப்பீர்கள். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் தாயின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உங்களை புறக்கணித்தவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர வாய்ப்பு உள்ளது.
- அதிர்ஷ்ட எண்: 6, 8
- அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
விருச்சிகம்:
- இன்று உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து நிதானமாக செயல்படுங்கள். உங்கள் நிதி நிலைமை மற்றும் தேவைகளை அறிந்து கொள்வது நல்லது. எதிர்கால திட்டங்கள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய நாளாகும்.
- அதிர்ஷ்ட எண்: 1, 4
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.
தனுசு:
- இன்று அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் உழைப்பை பாராட்டுவார்கள். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். இன்று சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது வெற்றியைத் தேடித் தரும்.
- அதிர்ஷ்ட எண்: 7, 9
- அதிர்ஷ்ட நிறம்: தங்கம்.
மகரம்:
- ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேலைகளை இன்று தள்ளிப் போட வேண்டாம். உங்கள் பொறுப்புகள் இன்று அதிகரிக்கக்கூடும். புதிய முடிவுகள் எடுப்பதை இன்றைய தினம் தவிர்த்து விடுங்கள். அனைத்து விஷயங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 8, 10
- அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
கும்பம்:
- சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய வணிக முயற்சிகள் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும் வாய்ப்புகள் உருவாகும்.
- அதிர்ஷ்ட எண்: 4, 11
- அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்.
மீனம்:
- சனியின் வக்ர நிவர்த்தி மீன ராசியில் நடப்பதால் இன்றைய தினம் நல்ல நாளாக இருக்கும். அடுத்த சில நாட்கள் அற்புதமான காலமாக அமையும். இதுவரை நீடித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உங்கள் மனதிற்கு சரி என்று படுவதை செய்யுங்கள்.
- அதிர்ஷ்ட எண்: 1, 7
- அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
Latest Videos

