- Home
- Astrology
- Weekly Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் திரும்பும் திசை எல்லாம் அதிர்ஷ்டம்.! கோடியில் புரளும் யோகம்.!
Weekly Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் திரும்பும் திசை எல்லாம் அதிர்ஷ்டம்.! கோடியில் புரளும் யோகம்.!
Dhanusu Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - தனுசு
தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். சாதகமான வாரமாக அமையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். லட்சுமி நாராயண யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. தனுசு ராசிக்கு உரியவரான குரு பகவான் மற்றும் மற்ற கிரகங்களின் நிலை உங்களுக்கு நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களையும் அதிகரிக்கும்.
நிதி நிலைமை:
சூரிய பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் பயணங்கள் அல்லது கூடுதல் செலவுகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் தொடர்பான முயற்சிகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அல்லது குடும்பத்திற்காக கடன் வாங்கும் சூழல் உருவாகலாம்.
ஆரோக்கியம்:
பொதுவாக இந்த வாரம் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது. உடல் நலம் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். சிறு சிறு உடல் நலப் பிரச்சினைகள் வரலாம். அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனே கவனிப்பது நல்லது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
கல்வி:
கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும். உங்களின் முயற்சிகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதி ஆதாயமும், மேலதிகாரிகளால் பாராட்டுக்களும், பரிசுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல ஏற்றத்தையும், வளர்ச்சியையும் காணும் காலகட்டம் இது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகள் மேம்படுவதற்கு சாதகமான வாரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கையில் இணக்கமும், அன்பும் மேலோங்கும். துணையுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். தந்தை மற்றும் தாய் வழி உறவுகள் மேன்மை அடையும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம்.
பரிகாரம்:
அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்க குரு பகவானின் அருளைப் பெறுவது அவசியம். வியாழக்கிழமைகளில் சிவன் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை கொண்டைக் கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் நிற உணவை தானமாக வழங்கலாம்.ஏழைகள் அல்லது கல்வி பயிலும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

